ஸ்ரீகாமகோடி ப்ரதீபம்
ஸ்நானம்
தர்மசாஸ்திரம் எந்த விஷயத்தைப் புண்யம் அல்லது பாபம் என்று சொல்கிறதோ, அதையே ஆரோக்கிய சாஸ்திரம் (ஆயுர்வேத சாஸ்திரம்) முறையாக ஹிதம் அஹிதம் என்று கர்ஜிக்கிறது. இதை யட்டித்தான் நமது மூதாதையார் கண்டனுபவித்த சாஹ்திரவிஹித கர்மானுஷ்டான ஆசாராதிகளை சிலாகித்துச் செல்லும்போது சாஸாத்ராய ச ஸுகாயச என்று சொல்கிறார்கள். தர்மாசாரண விஷயத்தில், அவைகளை முதலில் அனுஷ்டிக்கும்போது அதிக சிரமத்தை கொடுக்கக்கூடியதாகவும், விசேஷ சந்துஷ்டியைக் கொடுக்காததாயும் தோன்றினாலும் முடிவில் விசேஷ நித்ய ஸெளக்கியத்தை யளிக்கவல்லது என்று கீதாசாரியன் நமக்கு தைர்யமூட்டும் முறையில் ஸ்ரீமத் பகவத்கீதையில் அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார்.
ஸாதாரணமாக மனிதனுக்கு ஸ்நானம் என்பது பாஹ்ய சுத்திக்கு ஏற்பட்டது. உடம்பின் வேர்வை புழுதி இவைகளின் ஸம்பந்தத்தால் தினந்தோறும் தேகத்தில் ஏற்படும் அழுக்கு, துர்கந்தம் முதலியவைகளை போக்கிக்கொள்ள ஸ்நானம் ஸாதனமாகும். அத்துடன் இந்த ஸ்நானமே தடாகங்கள், நதிகள் முதலியவைகளில் தேகமுழுவதும் அமர்ந்து (அவகாஹஸ்நானம்) முழுகுவதினால் தேஹத்திற்கு விசேஷ ஆரோக்கியம் ஏற்படுகிறது. « அதிலும் சூர்யோதயத்திற்கு முன்னால், அதாவது சூர்ய வெளிச்சம் தீர்த்தத்தில் படுவதற்கு முந்தி ஸ்நானம் செய்வதினால் அக்காலத்தில் ஜலத்தில் ப்ராணவாயுக்களின் ஸம்பந்தமிருப்பதாயும், ஆகவே தேஹாரோக்யத்திற்கு இன்றியமையாததென்றும் ஆயுர்வேத சாஸ்திரம் சொல்லுகிறது.
இதையேதான் தர்ம சாஸ்திரமானது விடியற்காலையில், மனிதன் ப்ரம்ம முஹ§ர்த்தத்தில், அதாவது அருணோதயத்திற்கு முந்தி சுமார் 4 மணிக்கு எழுந்திருக்க வேண்டு மென்றும், கை கால்களை கழுவிக்கொண்டு, தேவதா பிரார்த்தனை செய்துவிட்டு, மலஜலாதிகளையும் கழித்து, பல்துலக்கி, சூர்யோதயத்திற்கு முன் ஸ்நானம் செய்து கர்மானுஷ்டனத்திற்கு (மிகவும் யோக்கியமான காலமானதால்) துவக்கம் செய்துவிட வேண்டும் என்றும் கூறுகிறது. இப்படிச் செய்தால் புண்யம் என்றும், இதற்கு மாறுதலாக நடந்து கொள்கிறவர்கள் பாபத்திற்கு உள்ளாகிறார்களென்றும் கோக்ஷிக்கிறது.
தர்மசாஸ்திரம் மேலும் இதற்கு விசேஷ பலன்களையும் சொல்லியிருக்கிறது. இதனால் முன்தினம் அறியாமல் செய்யப்பட்ட பாபக்குவியல்களை தொலைத்து விடுமென்றும், தேஜஸ், புத்தி, பலம்ஆயுஸ், முதலியவை விருத்தியடையுமென்றும் புகழ்ந்து சொல்லுகின்றது. ஸ்நானம் செய்வதிலும் சில விதிகளைச் சொல்லி அதன்படி நடப்பவனுக்கே மேற்கண்ட பலன்கள் ஸித்திக்குமென்றும், மற்றபடி ஸாதாரணமாக (உலக்கைபோல்) ஸ்நானம் செய்வது மிருகத்தன்மை கொண்டதென்றும், தேஹத்திற்கு ஒவ்வொறு ஆரோக்கியம் ஏற்படக்கூடுமானாலும், சாச்வதமானச்ரேயஸ்ஸை கொடுக்கமாட்டாது என்றும் வற்புறுத்துகிறது. தீர்த்த மஹிமையினாலும் மன சுத்தியுடனும் மந்தரோச்சாணத்துடனும் ஸ்நானம் செய்கிறவர்களும் பலப்ராத்தியானது சீக்கிரம் கிட்டும். மந்திரத்தின் ப்ரபாவத்தை நமக்கு பாம்பு முதலியவைகளால் விஷந்தீண்டுகிற ஸந்தர்பங்களில் நன்கு உணர்ந்திருக்கின்றோம். கேவலம் நம்பிக்கையிழந்தவர்கள் கூட அதிசயிக்கத்தக்க அளவில் விஷம் இறங்குவதையும், பேய் பிசாசுகள் ஒடுவதும் மந்தரங்களுடைய உச்சாரண மந்திரத்தினால் என்று காண்கிறார்கள்.
அசக்தர்கள் விஷயத்தில் ஸ்நானாந்தரங்கள். அதாவது தீர்த்தஸ்நானம் அல்லாது வேறுமாதிரியான ஸ்நானக்கிரமங்கள் விதித்துச் சொல்லப்பட்டிருக்கின்றன. ஆக்னேய ஸ்நானமென்றும் (விபூதியினால் தேஹமுழுவதும் பூசிக்கொள்கிறது) மந்த்ர ஸ்நானமென்றும் (மந்தரோச்சரணத்தால் தீர்த்தத்தை சரீரத்தில் ப்ரோக்ஷணம் செய்து கொள்கிறது) இன்னும் பலவித உபாயங்களைச் சொல்லி அதன் மூலம் தேகபரிசுத்தியை அடைந்து கர்மானுஷ்டானத்திற்கு யோக்யமாகச் செய்து வைக்கிறது.
வேதாந்திகள் மானச ஸ்நானம் என ஒன்று சொல்கிறார்கள். இதற்கு மானச தீர்த்தம் என்றும் அதில் ஸ்நானம் செய்கின்றவன் முக்தியென்றும் மேலான பதவியை அடைகிறான் என்றும் சொல்லப்படுகிறது. ஆத்மஞானமே ஒர் பெரிய மடுவாகவும், விஷயங்களில் ஈடுபடாத ஈச்வரதியானமே தீர்தமாகவும், ராகத்வேஷங்கள் சித்தத்தைக் கெடுக்கக்கூடியவனவாகையால் அவைகளாகிற அழுக்குகளை போக்கவல்லமையுள்ளதாயும், இந்த மானச தீர்த்தத்தை வர்ணித்து, அதில் ஸ்நானம் செய்பவருக்கு அதாவது ஸதா ஈச்வர தியானத்தில் ஈடுபட்டு, காமக்ரோதாதிகளுக்கு வசமாகாமல், மனசை ஏகாக்ரப்படுத்தி ஈச்வர சரணாவிந்தங்களில் லயிக்கச்செய்வதே மானச ஸ்நானம் என்று கருதவேண்டும். ஆருட பதவியிலுள்ளவர்களுக்கே இந்த பாவனாரூபமான ஸ்நானம் சொல்லப்பட்டு, அந்தக்கரண சுத்திக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. நித்யஸுகத்துக்கும் ஸாதனமாக ஆகிறது.