உலகத்திலே எல்லாவிதமான பிராணிகளும் இருக்கின்றன. அவைகளுக்குள்ளே மனிதனாகப் பிறந்தவன் மிக உயர்ந்தவன். அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது. ஆகையினாலே அரிதான மானிடப்பிறவி எடுத்த நாம் எல்லோறும் மிகவும் புண்ணியவான்கள். இந்த மனிதப் பிறவியிலே நாம் பெறவேண்டியது முக்கியமாக நான்கு பேர்களுடைய அருளாசி. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற நான்கு பேர்கள். நம்முடைய தாய் தந்தையருடைய ஆசியைப் பரிபூர்ணமாக பெறவேண்டும். குருவினுடைய அருளைப் பெற வேண்டும். தெய்வத்தினுடைய அருளைப் பெற வேண்டும். இந்த நான்கு பேர்களுக்குள்ளே தாய் தந்தையர் நம்மிடையே இருக்கிறார்கள். அவர்தான் நமக்கு அருளாசி வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள்.
குபுத்ரோ ஜாயேத க்வசிதபி குமாதா ந பவதி
கெட்ட பிள்ளையாகிலும் இருப்பான். கெட்டதாய் ஒருநாளும் இருக்கமாட்டாள் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஆகையினாலே தாய் தந்தையரின் அருள் நமக்கு பரிபூர்ணமாக இருக்கிறது. அவர்களுடைய அருள் மூலமாக நாம் நல்ல குருவை அடைய வேண்டும். அந்த குருவின் மூலமாகத் தெய்வத்தினுடைய அருளைப் பெறலாம். தெய்வத்தினுடைய அருளைப் பரிபூர்ணமாக அடைந்து அருளும் ஆனந்தமும் பெற்று, சந்தோஷத்தோடு வாழ வேண்டும். இதுதான் மனிதருடைய அருளை அடைய குருவினுடைய பரிபூரண அன்புதான் தேவை.
ஒவ்வொரு மனிதரும் ஒரொரு வழிபாடு பண்ணுகிறார். அந்தத் தெய்வத்திற்கு ஒரு மந்திரம் உண்டு. இதை ஒரு குரு முகமாக உபதேசம் பெற்று ஜபித்து, பூஜித்து, அருள்பெற்று வருவாரானால் அவர் வாழிவு நிறைவு பெறும். இந்த மாதிரி உலகத்திலே நிறைய மனிதர்கள், அநேக குருமார்கள் மூலமாக, - ஆசார்யர்கள் மூலமாக,- இந்த அருள் உபதேசத்தைப் பெற்று இருக்கிறார்கள். இவர்களுக்குள்ளே இத்தனை ஆசார்யப் பெரியார்களுக்குள்ளே - அநாதியான ஒரு குருமூர்த்தி உண்டு. கைலாசத்திலே, தெற்கு நோக்கி ஞான உபதேசம் செய்து கொண்டிருக்கிற மூர்த்தி-தக்ஷிணாமூர்த்தி. அந்த தக்ஷிணாமூர்த்தியுடைய அருள் வடிவமாக-சிவனின் வடிவமாக-அவதாரமாக, காலடி ஷேத்திரத்திலே சுமார் இருபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பாரத தேசத்திலே, ஆதிசங்கரர் என்ற பெயருடன் அவதாரம் செய்தார் சங்கர பகவான். ஆகையினாலே, மூலகுரு-ஆதிகுரு தக்ஷிணாமூர்த்தி. அதே தக்ஷிணாமூர்த்தி வடிவமாக-சங்கரராக -ஆதிசங்கரர் தோன்றினார். அந்தக் குருபெருமானான ஆதிசங்கரருடைய அவதார உற்சவம் ஒவ்வோர் ஆண்டும் வருகிறது.
வைகாச சுத்த பஞ்சமி என்பது வைகாசி மாதத்திலே சுக்ல பஞ்சமி யன்றைக்கு வருகிறது. அவருக்கு உற்சவம் பண்ண நாம் வீடுகளிலே நம்முடைய பிறந்த நாளைக் கொண்டாடுகிற மாதிரி கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை. கொண்டாடவும் வேண்டாம். அவர் எண்ண தத்துவ உபதேசம் பண்ணியிருக்கிறாரோ, உலகம் முழுமைக்கும் எல்லோரும் க்ஷேமமாய் இருப்பதற்கு அமைதியோடு ஆனந்தத்தோடு, சாந்தமான வாழ்க்கை நடத்த எந்தப் பரப்ரஹ்ம தத்துவம் - ஆத்மிக தத்துவம் சொன்னாரோ, வேதாந்த தத்துவம் சொன்னாரோ, அந்தத் தத்துவத்தை ஒவ்வொருவரும் தெரிந்து கொள்வதற்கு முயற்சி பண்ணினாலே அவர்கள் ஜயந்தி பண்ணினதோடு பெரிய பலனாகவும் ஆகும். அதே போல் அவர் ஆயிரக்கணக்கான தோத்திரப் பாடல்கள் பாடியிருக்கிறார். அந்த பாடல்களிலே இரண்டு பாடலாவது நாம் கற்றுக் கொள்ள, அந்தத் தெய்வத்தினுடைய அருளை நாம் அடைய - முயற்ச்சி பண்ணுவதுதான் அவருக்கு ஜயந்தி விழாக் கொண்டாடும் சிறந்த முறை. அதே போல அவரைப்பற்றிப் புகழ்மாலை எவ்வளவோ பேர் பாடியிருக்கிறார்கள். நாம் புதிதாகக் கவிதை பண்ண வேண்டிய அவசியம் இல்லை. அவரைப் பற்றி இரண்டு பாடல்களாவது தெரிந்துகொண்டு அந்தப் புகழைப் பாடினால் போதும். ஆகையினாலே ஒவ்வொரு மனிதப் பிறவி எடுத்தவரும், பிறவியில்லாப் பெரும் பேற்றை அடையக்கூடிய ஞான தத்துவ உபதேசம் செய்த அந்த ஆதிசங்கரப் பெருமானுடைய உபதேசத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
இன்றைக்குத் தேசிய ஒருமைப்பாட்டு எனறு லௌகிகமாகச் சொல்லிக் கொண்டிருக்கும் - உலக வாழ்க்கையிலே. அந்த ஒருமைப்பாட்டுக்கு அடையாளமாகக் கூட அன்றே, ஆதிசங்கர பகவான் தெற்குக் கோடியிலே, காலடியில் தோன்றினாலும் நர்மதை நதியிலே குருவை அடைந்து, காசியிலே போய்ப் பாஷ்யம்செய்து, பதிரிநாராயண க்ஷேத்திரத்திலே அந்தக் கோயிலைப் புனருத்தாரணம் செய்து (அதன் அடையாளமாக இன்னும் நம்பூதிரி பூஜையே அங்கு நடந்து வருகிறது) . நேபாளம் சென்று அங்கும் பூஜை முறைகளைச் சரிசெய்தார். அதன் அடையாளமாக இன்றும் தக்ஷிணத்தில் இருக்கும். (மைசூர், தெலுங்கு இந்தப் பகுதியிலிருந்து போகக் கூடியவர்களே பூஜை செய்யும்படி) பூஜை முறைகளை கடைபிடித்து வருகிறார்கள். இதைப் பார்த்தால் பாஷையோ, மதமோ கல்ச்சரோ (கலாச்சாரமோ) , பண்பாடோ இதெல்லாம் எப்படி இருந்தாலும்கூட ஒரு சமயம், ஒரு தத்துவம், ஒரு கலாச்சாரம்-பாரதீய கலாச்சாரம் ஒன்று என்பதை அந்தக் காலத்திலிருந்தே நமக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். ஆகையினைலே நாமெல்லோரும் உலக திருஷ்டியிலே பார்த்தால்கூடத் தேசிய ஒருமைப்பாடு என்று அந்த முறையிலேகூட ஆதிசங்கரரை நினைத்துக் கொள்ளக்கூடிய தேவை இன்று இருக்கிறது. தத்துவ ரீதியிலே பார்த்தாலும், அநேக மூர்த்திகளை வைத்துக் கொண்டு அது பெரிதா-இது பெரிதா சிவன் பெரிதா, விஷ்ணு பெரிதா என்று நாம் யோசனை பண்ணிக்கொண்டு இருக்கின்றோம். ஆதிசங்கரர் பெருமான் எல்லா மூர்த்திகளையும் ஒன்றாகப் பாவித்து, அதற்கு மேல் ஒரு பரம் பெருள் இருக்கின்றது. அதனை c நினைத்துக்கொள். அந்தப் பரம்பொருள் தான் இத்தனைக்குள்ளேயும் ஊடுருவி நிற்கிறது என்று
சொல்லியிருக்கிறார். ஆகையினாலே, ஈசுவர வழிபாடு முறைகளிலேயும், பேத புத்தியில்லாமல் ஒரே பரமாத்ம திருஷ்டியைப் பார்ப்பற்குள்ளதொரு தன்மைகளையும், தேசிய ஒருமைப்பாட்டு நிலைகளிலேயும், வேதாந்த ரீதியிலும் உலகம் விரும்பும் படியாக போற்றும் படியான அந்த அத்வைதத்தைச் சொன்னவர் அந்த மஹா புருஷர். அவருடைய ஜயந்தி விழாவிலே நாம் அவருக்குச் செய்யக்கூடிய முக்கியமான கடமை, அவர் எவ்வளவு ஸ்தோத்திரம் பண்ணியிருப்பாரோ, எவ்வளவு நூல்கள் எழுதியிருப்பாரோ, அவர் என்ன வேலை செய்திருப்பாரோ-அவற்றை ஒரு தடவை மனத்திலே நினைத்து அந்த வழியிலே நடந்தால், சிறிதளவாவது முயற்சி செய்தால் அதுதான் அவருக்கு நாம் கொண்டாடும் ஜயந்தி விழாவாகும்.
ஆகையினாலே சங்கர ஜெயந்தியன்று ஒவ்வருவரும் அவருடைய குரு புகழ் பாடுவதோடுகூட, அவர் செய்த நூல்களைப் படிப்பதோடுகூட அதன் பிரகாரம் வாழ்க்கையிலே நாம் கடைபிடிப்பதற்கும் சிறிதளவாவது முயற்சி செய்தால் அதுதான் ஆதி சங்கரர் பெருமானுக்கு நாம் செய்யும் பெரும் தொண்டாகும்.
அன்றைக்கு அவர் செய்த தொண்டும், அன்றைக்கு அவர் ஏற்றி வைத்த தீபமும் இன்றும் பரம்பரையாக நம் நாட்டிலே இருக்கின்றன. அந்த ஜோதியினுடைய அந்தப் பிரகாசத்தினுடைய ஒளியை நாம் எல்லோரும் பெற்று நம் வாழ்வினைப் பிரகாசமாக்கிக் கொள்ள வேண்டும். உலக முழுவதுக்கும் ஆதி சங்கரருடைய வேதாந்த தத்துவமும் ஆதிசங்கரரும் சொந்தம். அதனாலே ஒவ்வொருவரும் ஆதிசங்கரருடைய தத்துவங்களைத் தெரிந்துகொண்டு, அஞ்ஞானங்களைப் போக்கிக்கொண்டு ஞான தீபத்தை மனத்திலே ஏற்றிக்கொண்டு சாந்தமாகவும் சுகமாகவும் ஆனந்தமாகவும் வாழவேண்டும்.
ஸ்ருதி ஸ்முருதி புராணானாம் ஆலயம் கருணாலயம்
நமாமி பகவத்பாத ஷங்கரம்லோக சங்கரம் லோக ஷங்கரம்.
புராணங்கள் பொய்யல்ல
மனிதர்களுக்கு அறிவு வளரவளர பழமையில் வெறுப்பும், நவீனத்தில் கண்மூடித்தனமான விருப்பமும் வளர்ந்துகொண்டே வருகிறது. விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக தங்களது பகுத்தறிவுக்கு எட்டிய வரையில் ஒவ்வொரு வஸ்துக்களைப் பற்றியும் ஆராய்ந்து அறிவும் ஆற்றலும் ஏற்பட்டிருக்கிறது. விஞ்ஞான ஆராய்ச்சிக்கும், தங்களது பகுத்தறிவுக்கும் எட்டாததாக ஏதேனும் இருக்குமானால் அது கட்டுக் கதை, பொய் எனறு துணிந்து கூறிவிடுகிறார்கள் தற்காலத்திய பகுத்திவாளர்கள். இவர்களுக்கும் புராணங்களில் வரும் சம்பவங்களும் பொய்யாகத்தான் தோன்றும். இவர்களுக்குத் தங்களது அறிவு மிகக் குருகியது ஏதோ ஓர் வாஸ்து இருக்கிறது. அதுதான் உலகை ஆட்டிவைக்கிறது. என்பதை இவர்கள் நம்பவில்லை.
புராணங்களை எழுதிவைத்த நம் முன்னோர்கள் முற்றும் உணர்ந்த முனிவர்கள். அவர்கள் வாக்கு ஒருக்காலும் பொய்ப்பதில்லை. பொய்யான
வார்த்தைகளை ஒருகாலும் கூறார்கள். அவர்களின் வார்த்தை பொய்யல்ல என்பதற்குத் தகுந்த ஆதாரங்களும், விஞ்ஞானிகளையும், பகுத்தரிவாளர்களையும் பிரமிக்க வைக்கும் வகையில், நமக்குக் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.
உதாரணமாக, விச்வாமித்திரர், இராம லக்ஷ்மணர்களுக்கு பசி, தாகம், களைப்பு இவைகள் ஏற்படாமல் இருப்பதற்காக பலை, அதிபலை என்ற இரண்டு மந்திரங்களை உபதேசம் செய்ததாகவும், அவைகளை இராம லக்ஷ்மணர்கள் ஜெபம் செய்து சித்தி பெற்றதால், பசி, தாகம் அற்றவர்களாக இருந்ததாகவும் வால்மீகி தமது இராமாயணத்தில் கூறுகிறார். மந்திரத்தால் பசி, தாகங்களைப் போக்கடிக்கமுடியும் என்பதை விஞ்ஞானிகளும், பகுத்தறிவாளர்களும் ஒருக்காலும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். ஆனால் எல்லோரையும் பிரம்மிக்கவைக்கும் வகையில் தனலக்ஷ்மி என்ற ஒரு பெண் வெகுகாலமாக யாதொரு உணவும் உட்கொள்ளாமல் வீட்டு வேலைகளைச் செய்துகொண்டு களைப்பில்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறாள். விஞ்ஞானிகள் எவ்வளவு முயன்றும் காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை.
நமது இந்துமதம் புனர்ஜென்மத்தை ஒப்புக்கொண்டுள்ளது. ஒருவன் பிறப்பிலேயே அறிவாளியாகவும், நல்லொழுக்கமுள்ளவனாகவும், பணக்காரனாகவும் பிறப்பதற்கு அவன் முன் ஜன்மத்தில் செய்த வினைகள் தான் காரணம் என்பதை நாம் ஒப்புக்கொண்டுள்ளோம். முன் ஜென்மத்தில் பலை, அதிபலை, மந்திரங்களை ஜெபித்ததினால் இஜ்ஜன்மத்தில் பசி, தாகம், களைப்பு ஏற்படாமல் இருக்கலாம். காரணம் எதுவாக இருந்தாலும் அவள் பசி, தாகம் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கிறாள் என்பதை நவீன விஞ்ஞானிகளும், அறிவாளிகளும் ஒத்துக்கொள்கிறார்கள்.
தங்களது விஞ்ஞான ஆராய்ச்சிக்குப் புலப்படாத விஷயங்களை முனிவராக வால்மீகி சொல்லி இருந்தால் அதை நாம் ஏன் ஒத்துக் கொள்ளக்கூடாது. தங்கள் அறிவுக்கு எட்டாத விஷயங்களைப் பொய் என்று சொல்வது தங்களது அகம்பாவத்தைத் தான் குறிக்கும். சமீபத்தில் தினசரி பத்திரிக்கையில் வந்த இரு சம்பவ்களை உண்மையாக்குபவையாக இருக்கின்றன. கல்கத்தா மார்க்கெட்டிலே பெரிய மீன் ஒன்று இருந்தது. அதை பிளந்தபோது அதிலிருந்து ஒர் குழந்தை உறுப்புகளுடன் வெளிப்பட்டது. இம்மீன் 14 சேர் எடை இருந்தது. இது பத்திரிகையில் படிக்கிறோம்.
நமது புராணத்தில் கஙகைக் கரையில் ஒர் செம்படவன் மீன் பிடித்து வயிறு வளர்த்து வந்தான். ஒரு நாள் கங்கைக்கு வலை வீசினான். ஒரு பெரிய மீன் அதில் சிக்கிக் கொண்டது. வெகு சந்தோஷத்துடன் வீட்டிற்குக்கொண்டுபோய் நன்றாகக் கழுவி நறுக்கினான். மீன் வயிற்றில் ஒர் பெண் குழந்தையைக் கண்டான். வெகு ஆசையுடன் எடுத்து வளர்த்தான். மீன் வயிற்றில் இருந்தால் குழந்தை மீன் நாற்ற முடையதாக இருந்தது. சற்று வயது வந்தவுடன் ஒர் முனிவரின் அனுக்ரஹத்தால் அப்பெண் மீன் நாற்றம் நீங்கப் பெற்று நல்ல மனமுள்ளவளாக ஆனாள். இவள் பெயர்தான் ஸத்தியவதி. சந்தனுவின் இரண்டாவது மனைவி. ஸத்தியவதி மீன் வயிற்றில் பிறந்தாள் என்ற கதை ஞாபகம் வருகிறது. இக்கதை மஹாபாரதத்தில் உள்ளது. தற்கால உடல் நூல் வல்லுனர்களும், விஞ்ஞானிகளும் இது கட்டுக்கதை, பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்றுதான் கூறுவார்கள்.
முற்காலத்தில், மலைகளுக்கெல்லாம் இறக்கைகள் இருந்தன. இதனால் மலைகள் ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று நாடு நகரங்களை அழித்து வந்தன. இந்திரன் மலைகளின் இறக்கைகளை வெட்டி விட்டான். ஆனால் மைனாகம் என்ற மலை மட்டும் கடலில் போய் ஒளிந்து கொண்டது என்பதாக இராமாயணத்திலுள்ளது கதை. இதுவும் கட்டுக் கதை என்றுதான் பகுத்தறிவாளர்கள் கூறுவார்கள். ஆனால் மத்ய ஜாவாவில், ஜெலிரிட் என்ற மலை இருக்கிறது. அது தன் இடத்தை விட்டு நகர ஆரம்பித்துளளது. இன்னமும் நகர்ந்துகொண்டே இருக்கிறது. இம்மலை நகருவதின் காரணமாக நல்ல நெல் விளையும் நிலம் நாசமாகிவிட்டது. பூமி ஜாவாவுக்குச் செல்லும் பாதையில் ஒர் பகுதியும், ஒர் காலமும் காணாமல் போய்விட்டன என்பதாகப் பத்திரிகையின் செய்தி கூறுகிறது. முதலில் ஆச்சரியப்பட்டு பிறகு (சரியாக இல்லாவிட்டாலும்) ஏதேனும் சமாதானம் கூறித் தங்களைத் தாங்களே ஏமாற்றிக்கொள்ளுகிறார்கள்.