சிவ சிவ பஸ்யந்தி ஸமம் ஸ்ரீ காமாக்ஷி கடாக்ஷிதா. புருஷா
விபிநம் பவந மமித்ரம். மித்ரம் லோஷ்டம்ச யுவதி பிம்போஷ்டகம்
செல்வம் அதிகாரம், புகழ் இவற்றைப் பெறும் ஆசையால் மனிதன் பாபங்களைச் செய்கிறான். இரக்கம், தானம், பிறருக்காக உழைப்பது ஆகிய இவைகளால் மனிதன் புண்ணியங்களைப் பெறுகிறான். இந்தப் பாவ புண்ணியங்களைப் பற்றி கவலைப்படாதவர்கள் மேலும் பாபங்களையே செய்து கொண்டு போகிறார்கள்.
பாவம் என்பது என்ன. புன்னியம் என்பது என்ன
எதை நாம் செய்யக்கூடாது என்று வேதம் கூறுகிறதோ, அதுதான் பாவம். எதைச் செய்வது நல்லது என்று வேதம் கூறுகிறதோ, அதுதான் புண்ணியம். நாம் எப்படி பாவம் செய்கிறோம் என்பதை யோசித்துப் பார்க்கலாம். வாயாலும், மனத்தாலும், தேகத்தாலும், பணத்தாலும் நாம் பாவம் செய்கிறோம். வாயினால் உத்ஸாகமாகப் பொய்ப்பேசி பாவம் செய்கிறோம். தேகத்தால் கெட்ட கார்யங்களைப் பண்ணி பாவம் செய்கிறோம். நாம் இந்தப் பாவங்களை செய்யக்கூடாது எனறு நினைத்தாலும் அப்படி இருக்கமுடியவில்லை. பிசாசு போலப் பாவம் பண்ணும் வழக்கம் நம்மைப் பிடித்துக்கொண்டிருக்கிறது. இந்தப் பழக்கத்தை எப்படிப்போக்குவது. கயிற்றை எப்படி சுற்றினோமோ அப்படியே அவிழ்க்க வேண்டும். எந்த நாக்கினால் பாவம் பண்ணிப் பழகிக் கொள்ளவேண்டும். அதாவது.
ஹிருதயம் யாருடைய இடம் என்பதை அறியவேண்டும். அது பாவத்துக்குறிய இடம். அந்த இடத்தை நாம் குப்பைத்தொட்டியாக்கியிருக்கிறோம். அதை மொழுகி சுத்தப்படுத்தி அதில் பகவானை உட்காரவைத்து நாமும் உட்காரவேண்டும்.