ரவிகுலஸோம ஹே பரந்தாம, என் இதயக்கோயில் இடம் பெற்ற இராமபிரானே, உலகை உய்விக்க வந்த உத்தமனே, அலைகடலில் சிறு துரும்புபோல் அலையும் அடியேனுக்கு நின் சரணம் இல்லாது வேறு சரணேது. நின் திருவருளை நினைந்து நினைந்து நெக்கு நெக்குறுகி நின் பாதமலர்களை பற்றி வேண்டுகிறேன். நஞ்சனைய வஞ்சினைபுரிந்த கொடியவர்க்கும் தஞ்சம் அளிக்கும் தயாநதியே, அடியேன் கடைத்தேர நின் கடைக்கண் பார்வை ஒன்றே போதும். நின்னருளாம் கதியனறி மற்றோன்று இல்லை.
பூதமைந்தொடு வேள்வியைந்து புலன்களைந்து பொறிகளால் ஏதமொனறுமிலாத வண்மையினார் கள்வாழ் திருக்கோட்டியூர் நாதனை நரங்கசினை நவின்றேத்துவார்களுடிக்கிய பாததுளி படுதலால் இவ்வுலக்ம் பாக்கியம் செய்ததே. வாக்கினால் புண்ணியம் செய்ய வேண்டும். நித்தியம் ஆயிரம் பகவான் நாமாவையாவது சொல்ல வேண்டும்.
பறாயிரம் பரவி வானோரேந்தும் பெம்மானே என்று பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அவனுடைய ஒரு நாமாவை ஆயிரம் தடவவை
சொல்லவேண்டும். அது நமக்கு உபயோகப்படும். அன்றியும் உபத்திரவம் வராமல் காக்கும். வாழ்க்கை என்பது எனன என்பதைத் தெரிந்து கொள்வதற்குள்ளே நமது பாதி ஆயுள் முடிந்து விடுகிறது. புரிந்து கொண்ட பிறகு புரிந்து கொண்ட வாழ்க்கையைச் சீராக அமைத்துக் கொள்ள தொடங்கும் போது மீதமுள்ள ஆயுளும் முடிந்து விடுகிறது. இதனால்தான் இந்த உலகத்திலே முழுமையான வாழ்க்கையை எவராலும் வாழமுடியாமலிருக்கிறது.
சீரொன்று தூப்புல் திருவேங்தடமுடையான்
பாரோன்றச் சொன்ன பழமொழியுள் ஒரொன்று
தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்க்கு
வானேறப் போமளவும் வாழ்வு
ஒரு மனிதன் வாழ்க்கையை எடுத்துக்கொண்டால் அவனுக்கு வெவ்வேறு தொழில்களையும் சுக துக்கங்களையும் பார்க்கிறோம். ஒரு சமயம் தேவையான அநேக வசதிகளுடன் அமோகமாக அவன் வாழ்கிறான். அதே மனிதனுக்கு தன் வாழ்நாளில் மற்றொரு சமயத்தில் சகல ஸெளபாக்கியங்களும் மறைந்து ஆற்று வெள்ளம் வற்றினதுபோல் ஆகிறது. செல்வம் அவனைவிட்டு அகலுகிறது. அப்பொழுது இந்த உலகம் அவனைத் தாழ்ந்தவனாக்க கருதுகிறது. இதற்கெல்லாம் காரணம் பூர்வஜன்ம கர்மம் என்று சொல்லப்படும் முற்பிறப்பு வினையே ஆகும்.
பூர்வ ஜன்ம கர்மம் என்பது புண்ணிய ரூபமாகவும் இருக்கும். ஒவ்வொருவனும் தன் வாழ்நாள் முழுவதும் புண்ணியம் மாத்திரமோ, பாவம் மாத்திரமோ தனியாகச் செய்திருக்கமாட்டான். மிகுந்த புணணிய சீலனும்கூடத் தனக்குத் தெரியாமலே ஏதாவது பாபம் செய்திருக்கலாம். அவ்விதமே பாவியும் தனக்குத் தெரியாமல் ஏதாவது புண்ணியம் செய்திருப்பான். ஆகையால் ஒருவன் முன்ஜன்மத்தில் செய்த புண்ணியத்தையும் பாவத்தையும் அனுபவிப்பதற்காகவே மறுபடியும் ஜன்மம் எடுக்கிறான் என்பது இயற்கை நியதி.
ஒருவனுடைய செயலை ஒரு தராசுகோலுக்கு ஒப்பிடலாம். அதன் இருபுறத்திலும் உள்ளத் தட்டுகளில் ஒன்றில் புண்யமும் மற்றொன்றில் பாவமும் வைத்திருப்பதாகக் கருதுவோம். புண்ணியம் அதிகமாயிருந்தால் அதற்குத் தக்கபடி வீடு, வாசல், வாகனம், பூமி, பசு, தனம், போன்ற அதிக சுகங்களை அனுபவிக்கிறான். அதனால் அவனைப் புண்ணியம் செய்தவன் எனறு உலகில் பேசுவார்கள். ஆனால் அவனும் முன் ஜன்மத்துப் பாவத்தின் பலனை அதே சமயத்தில் ஓரளவுக்கு அனுபவிக்காமலில்லை. உதாரணமாக கை நிறையப் பணமும், கண் நிறைந்த மனைவியும், மற்ற வாழ்க்கை பதவிகளும் இருந்தும் தனக்குப்பின் தன்பெயர் சொல்ல-தன் செல்வத்தை அனுபவிக்க ஒரு குழந்தை பிறக்கவில்லையே என்று ஏங்குகிறவன் இருக்கிறான் அல்லவா. இம்மாதிரியே பாவம் செய்தவன் என்று எண்ணப்படும் மற்றொருவன், மனைவி மக்களும், உற்றார் உறவினர்களும் நிறைந்து இருந்தும் குடிக்கக் கூழும், உடுக்கத் துணியும் இல்லையே என்று அல்லும் பகலும் அல்லற்படுகிறான். ஆகையால் மனிதன் என்னும் தராசுக்கோலுக்கு இருபுறமும் இருக்கும் புண்ணிய பாவங்கள்
இடத்தைவிட்டு மாறாமல் மனிதனுக்கு ஒரே சமயத்தில் சுகத்தையும், துக்கத்தையும் மாறிமாறிக் கொடுத்து வருகின்றன என்பது கண்கூடாகும். மற்றுமோர் உதாரணம் ஒருவன் துஷ்டன். பல பாபச்செயல்களைப் புரிகிறான். ஆனால் அவன் வாழ்நாளில் வசதியாக இருக்கிறான். மற்றொருவன் நல்லவன் ஒருவருக்கும் தீங்கு செய்ய மனத்தாலும் நினையாதவன். தெய்வ பக்தி உள்ளவன். ஆனால் அவன் படும் கஷ்டங்களோ சொல்லிமுடியாது. நம் கண்முன் சுகங்களை அனுபவிக்கும் துஷ்டன் இந்த ஜன்மத்தில் தீச் செயல்களை புரிபவனாக இருந்தாலும் முன் ஜன்மத்தில் செய்த புண்ணியத்தின் பலனை இந்த ஜன்மத்தில் அனுபவித்து வருகிறான். அவனே இந்த ஜன்மத்திலும் புண்ணிய காரியமே செய்வானானால் இந்தப் பிறப்பின் முடிவிலேயே மறுபிறப்பில்லாத முக்தியை அடைவது திண்ணம். ஆனால் அவன் தீச்செயல்களை செய்வானாகில் அவன் தீயப்பலனை இந்தப்பிறப்பிலோ அல்லது அடுத்த ஜன்மத்திலோ அனுபவிப்பது நிச்சயம். அப்படியே இந்த ஜன்மத்தில் நற்செயல் புரிபவனாக இருந்தும் கஷ்டத்தை அனுபவிப்பவன் தன் கஷ்டங்களுக்குப் பூர்வ ஜன்மவினையே காரணம் என்று தெரிந்து அதற்காகத் தன்னாலியன்ற அளவில் நற்காரியங்களைச் செய்ய மேன்மேலும் முயல வேண்டும்.