ப £வமும் மன்னிப்பும்
பூர்வ ஜன்மத்தில் பாவம் செய்த காரணத்தால் தற்பொழுது கஷ்டத்தை அனுபவிப்பவர்க்கு விமோசனமே இல்லையா. இருக்கிறது.
அதையும் ஒர் உதாரணத்தால் விளக்கலாம். ஒருவன் ஏதோ குற்றம் செய்து விட்டான். அவன் செய்த குற்றத்திற்கு அவனுக்கு ஏழு வருஷம் கடின தன்டனை விதிக்கலாமென்று சட்டம் இருக்கிறது. அவன் கண்ணீரும் கம்பலையுமாக, மனம் நெகிழிந்து தான் செய்த குற்றத்தை உணர்ந்து நீதிபதியிடம் தனக்குத் தண்டனையே இல்லாமல் மன்னித்து விடும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்கிறான். சட்டப்படி தவறு செய்தவன் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டியிருப்பினும் அவன் தன் குற்றத்துக்காக மனமார வருந்தியதால் 7 வருஷ தண்டனையை 3 அல்லது 2 வருடமாக குறைத்து விட்டதாக நீதிபதி தீர்ப்பளிக்கிறார். அவ்விதமே முன் ஜன்மத்தில் செய்த பாவத்திற்கு இந்த ஜன்மத்தில் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியது நியதியானாலும் மனம் உருகி மனறாடிக் கேட்டுக்கொண்டால் பகவான் நம் கஷ்டங்களைக் குறைத்து அதோடு கஷ்டங்களைப் பொருத்துக் கொண்டும் ஆற்றலையும் அருளுகிறார். நல்ல நிலையில் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் பகவானைத் துதித்து வந்தால் அவர்களுக்கு மேன்மேலும் சுகம் உண்டாகும் என்பதைச் சொல்லவும் வேண்டுமா.
இப்படித் தாம் முற்பிறப்பில் செய்த வினையைப் பற்றித் தெரியாமல் கஷ்டங்களில் உழலும் மக்கள் அவைகள் நீக்கிச் சுகமடைய தம் இஷ்ட தெய்வங்களைப் பிரார்த்தனை செய்வதற்காகவே ராமாயணம் பாரதம், பாகவதம், முதலிய இதிகாச புராணங்களும், ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாமம், ஸ்ரீ மத் நிகமாந்த மஹாதேசிகன் அருளிச் செயல்கள் போன்ற பல ஸ்தோத்திரங்களும், ஜபம், தவம், ஹோமம், தானம், போன்ற நற்காரியங்களும் முற்றும் துறந்த முனிவர்களாலும்,
மஹான்களாலும் அருளிச் செய்யப்பட்டுள்ளன. இவைகளில் ஏதாவது ஒன்றை அனுஷ்டித்தால் மக்கள் துன்பம் நீங்கப்பெற்று இன்பம் பெறுவது திண்ணம். அவர்கட்கு ஸகல கார்யங்களும் ஸித்திக்கும்.