பிந்து, முக்கோனம், எட்டுகோணம், இரண்டு பந்துகோணங்கள், பதினாலு கோணம், எட்டுத்தளம், பதினாறு தளம், மூன்று வட்டம், மூன்று - கோட்டு பூபரம் என்றவைகளாலாகிய இது பரதேவதையின் ஸ்ரீ சக்கரம் எனப்படும்.
ஸ்ரீசக்கரம் பற்றிய வரையில் அது ஒரு ர¬க்ஷ. தாராளமாக வீட்டில் வைத்துக் கொள்ளலாம். வீட்டில் பூஜை இல்லாமலேயே வைத்துக் கொண்டாலும் அதனால் நன்மையே தவிர கெடுதல் எதுவும் இல்லை.
தேவி வழிபாட்டில் சகுண உபாசனை முதல் படி, இதில் முதலில் உருவமாகவும், பின் உருவ அருவமாகவும் (யந்திரமாகவும், மந்திரமாகவும்) பின்னர் உருவ-அருவம் இல்லாத தேவியை நிர்குணமாகத் தியானித்து வழிபடுவது. மிகச்சிறந்த உருவ அருவ வழிபாடே யந்திர வழிபாடாகும்.
ஒன்பது சக்கரங்கள் உடையதால் நவயோனி சக்கரம் என்றும், 43 கோணங்கள் கொண்டதால் திரிசத்வரிம்சத் சக்கரம் என்றும் மாத்ருகா சக்திகள் இதில் அடங்கியிருப்பதால் மாத்ருகா சக்கரம் என்றும் பெயர்.
இம்மை மறுமை இரண்டிற்கும் ஏற்ற நலன்களைத் தரும் சாதனமாக உள்ளது. ஸ்ரீ சக்கரம் என்றும் மாத்ருகா சக்திகள் இதில் அடங்கியிருப்பதால் மாத்ருகா சக்கரம் என்றும் பெயர்.
இந்த உடலே ஸ்ரீ சக்கரம் எனப்படும். இந்த உடலை ஸ்ரீசக்கரம் தான் என்பதை பாவனோபநிஷத் விளக்குகிறது. ஸ்ரீ சக்ர (அ) ஸ்ரீ மாமேரு வழிபாட்டினால் சகல சம்பத்தும், அஷ்ட ஐஸ்வரியங்களும் கிடைக்கும்.
பிந்து திரிகோண, வசுகோண தசாரயுகம்
மன்வச்சர நாதகள ஸம்யுத ஷோடசாரம்
வ்விருதத் நயஞ்ச தரணி சதனத்ரயஞ்ச
ஸ்ரீ சக்ர மேத துதிதம் பரதேவதாயா
ஸ்ரீசக்ரம் ச்ருதி மூலகோச இதிதே ஸம்ஸார சக்ராத்மகம்
விக்க்யாதம் தததிஷ்டி தாக்ஷர-சிவஜ்யோதிர்-மயம் ஸர்வத.
ஏதன் மந்த்ரமயாத் மிகாமி-ரருணம் ஸ்ரீஸுந்ததரி பிர்வ்ருதம்
மத்தயே பைந்தவ ஸிம்ஹபீடலலிதே த்வம் ப்ரஹ்ம வித்யாசிவே
மங்கள வடிவினளே. உன்னுடைய ஸம்ஸார சக்ரவடிவான ஸ்ரீ சக்ரமானது வேதத்திற்கு வேராகிய ஒங்காரத்திற்குக் கோசம் போன்றது என்பது பிரசித்தம். அதில் நிலைப் பெற்றுள்ள பஞ்ச தசாக்ஷரீ மந்திரத்தின் மங்களமான ஒளியின் பரப்பு எங்கும் உளது. இந்த மந்திரமே உருக்கொண்டவர்களான ஆவரண தேவதைகளால் சூழப்பெற்று சிவந்த நிறத்துடன் நடுவில் பிந்துவாகிய சிம்மாசனத்தில் அழகு மிகுந்து விளங்குபவனாய் பிரம்மவித்யா ஸ்வரூபிணியாய் உள்ளவள் c.