இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் 11 திருவெள்ளியங்குடி கோலவில்லிராமர் இ ந்த தலம் வைணவ திவ்ய தேசங்களில் மிகவும் புகழ் வாய

இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்

11.திருவெள்ளியங்குடி கோலவில்லிராமர்

ந்த தலம் வைணவ திவ்ய தேசங்களில் மிகவும் புகழ் வாய்ந்தது. ஏனென்றால் இந்த தலத்து இறைவனை நாம் ஸேவித்தால் நூற்றெட்டு திவ்ய தேசங்களையும் ஸேவித்த புண்ணியம் கிட்டும் என்பதால். ஆனால் பேருந்து வசதிகள் சரியாக இல்லை. திருவிடைமருதூர் கும்பகோணத்திலிருந்து 8 A.e. தூரத்திலுள்ள சிவஸ்தலம். அதற்கருகிலேயே உள்ளது இந்த திவ்யதேசம். சுக்கிரபகவான் வழிப்பட்ட மூர்த்தி இந்த தலத்து இறைவனாதலால் இந்த ஊர் பார்க்கவ புரி என்றும் வழங்கப்படுகிறது. இது சேங்கானூர் என்ற பெரியவாச்சான் பிள்ளையின் அவதாரத்தலத்திற்கருகிலுள்ளது. விஷ்ணு புராணமும், ப்ரும்மாண்டபுராணமும் இந்தத் தலத்தைப் பற்றி கூறியுள்ளன.

அகர சிற்பியான மயன் விஷ்ணுவை நோக்கித் தவமிருந்தபோது அவர் தோன்றினதும் ராமபிரானாக ஸேவை ஸாதிக்க வேண்டும் என்று வேண்டியதால் கிடந்த வண்ணத்தில் வில் அம்புகளுடன் காட்சி அளித்தாராம். தம் கையிலிருந்த சக்கரம், சங்கு இரண்டையும் கருடாழ்வாரிடம் அளித்து விட்டார். இவ்விதம் அவர் ராமபிரானாகவே மாறியதால் அவரைக் கோலவில்லிராமன் என்றழைத்தனர். இதே கோலத்தைத் திருமங்கை ஆழ்வாரும் கண்டு பத்து பாசுரங்கள் மங்களாசாஸனம் செய்துள்ளார். இத்தலத்தில் இதனால் கருடபகவான் சங்கு, சக்கரத்துடன் ஸேவை அளிக்கவில்லையாம். பகவான் கருடாழ்வாருக்கு சங்கு, சக்கர இலச்சினையை அளித்த தலமாகவும் இது கருதப்படுகிறது. இது வடகலை ஸம்ப்ரதாயக் கோவில்.

உத்ஸவ மூர்த்தியாக ச்ருங்கார சுந்தரன் அழகு ததும்பக் காட்சி அளிக்கிறார், ஸ்ரீதேவி, பூதேவியுடன். மூலவருடன் ஸந்நிதியில் ப்ரும்மா, இந்த்ரன், சுக்ரன், பரசுராமர், மார்க்கண்டேயர், மயன் ஆகியோர் உள்ளனர். தனிக்கோவில் நாச்சியராகத் தாயார் மரகதவல்லி எழுந்தருளியுள்ளார் வீற்றிருந்த கோலத்தில் மூலவராகவும், உற்சவராகவும், மற்றும் ஆஞ்சனேயர், ஆண்டாள் ஆகியோருக்குத் தனி ஸந்நிதிகள் உள்ளன. வாழைமரமே இத்தலத்து வ்ருக்ஷமாகக் கருதப்படுகிறது. விமானம் புஷ்கலா வர்த்த விமானம், தீர்த்தம் சுக்ரதீர்த்தமும், இந்த்ர தீர்த்தமும்.

கோலவில்லிராமன் என்ற இதே திருநாமத்துடன் திருநாங்கூர் திவ்யதேசமான பார்த்தன் பள்ளி அருகே ஒரு கேவிலில் ராமபிரான் எழுந்தருளியிருப்பதாக அறிகிறோம். அவருடைய உற்சவமூர்த்தி பார்த்தன்பள்ளி பார்த்தசாரதி கோவிலில் எழுந்தருப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரின் மங்களாசாஸனத்தைச் சிறிது நோக்குவோம்.

காற்றிடைப் பூளை கரந்தென அரந்தையுறக் கடலரக்கர்த் சேனை

கூற்றிடைச் செல்லக் கொடுங்கணை துரந்த கோலவில்லிராமன் தன் கோவில்