இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள் 3 புன்னை நல்லூர் கோதண்டராமர் த ஞ்சாவூரிலிருந்து ஸுமார் 7 A e தொலைவில் உள்ளது புன்னை நல்ல

இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்

3. புன்னை நல்லூர் கோதண்டராமர்

ஞ்சாவூரிலிருந்து ஸுமார் 7 A.e. தொலைவில் உள்ளது புன்னை நல்லூர் என்ற தலம். இது மிகவும் புகழ் பெற்ற மாரியம்மன் கோவிலைத் தன்னகத்தே கொண்டது. இக்கோவிலுக்கு வெகு அருகாமையிலேய உள்ளது கோதண்டராமரின் கோவில். இந்த ஊருக்கு ஆதிகாலத்தில் புன்னகாவனம் என்ற பெயர் இருந்ததாம். இந்தக் கோவிலின் ஸ்தல வ்ருக்ஷமும் புன்னை மரமே. வைகானஸ ஆகம முறைப்படி வழிப்பாடு நடைபெறுகின்றது. 1763-ம் ஆண்டில் மஹாராஜா ப்ரதாப் சிங் என்ற மஹாராஷ்ட்ர மன்னரால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயம். இவரது காலத்திலேயே எழுந்த மற்றொரு ராமபிரான் திருக்கோவில் நீடாமங்கலத்தில் உள்ளது. அதனைப் பின்னர் கண்டு மகிழ்வோம். இக்கோவிலுக்கு ராஜகோபுரம் உள்ளது.

ப்ரதான ஸந்நிதிக்கு எதிரில் கருட பகவான் எழுந்தருளியுள்ளார். ஸந்நிதியில் ஸாளக்ராம மூர்த்திகளாக (சுதை அல்ல) ஸ்ரீ கோதண்டராமர் வலக்கையில் அம்புடனும், இடக்கையில் வில்லாகிய கோதண்டத்துடனும் எழிலாகக் காட்சி அளிக்கிறார். அவருக்கு வலப்புறம் ஸீதாப்பிராட்டியாரும், இடப்புறம் லக்ஷ்மணனும் அருள் பாலிக்கின்றனர். இவர்கள் மூவரும் நின்ற கோலத்தில் காட்சி. திருவடியில் ஆஞ்சனேயர் அமர்ந்துள்ளார். உற்சவ மூர்த்திகளான கோதண்டராமர். ஸீதை, லக்ஷ்மணன், ஆஞ்சனேயரும் மிகவும் அழகு வாய்ந்தவர்கள். மற்றும் தனி ஸந்நிதிகளில் விஷ்வக்ஸேனர், ஆழ்வார்கள் உள்ளனர். இக்கோவிலின் விமானம் ஸெளந்தர்ய விமானம், தீர்த்தம் க்ஷீர புஷ்கரிணி. இது தஞ்சை வெண்ணாற்றங்கரையில் அமைந்துள்ள மாமணிக் கோவிலைச் சார்ந்த கோவிலாகும்.

தனியாக மண்டபம் போன்றதொரு அமைப்பில் ஆஞ்சனேய பகவான் வலது கரத்தை தூக்கியும், இடது கரத்தில் தாமரை மலரைத் தாங்கியும் ஜயவீர ஆஞ்ஜனேயர் என்ற நாமத்துடன் கம்பீரமாகக் காட்சி அளிக்கின்றார். ராமர் பாதம் என்னும் திருவடி நிலை ஸ்தல வ்ருக்ஷமான புன்னை மரத்தினடியிலே உள்ளது. இந்தக் கோவில் நன்கு பராமரிக்கப்பட்டுத் தூய்மையாக வைக்கப்பட்டுள்ளது. தஞ்சை மன்னர் தனக்காகப் பிள்ளை பேற்றை அளித்த ராமபிரானுக்கு நன்றிக் கடனாக இக்கோயிலையும், தன் மனைவியின் சார்பில் நீடாமங்கலம் கோவிலையும் கட்டினது சரித்திரம் கூறும் வரலாறு. வீர ஆஞ்சநேயரின் சிந்தையில் எப்போதும் உறையும் ஸீதாராம தம்பதிகளை

வாழி ஜானகி வாழியிராகவன்

வாழி நான்மறை வாழியர் அந்தணர்

வாழி நல்லறம் என்றுற வாழ்த்தினான்

வாழி தோறும் புதிதுறும் கீர்த்தியான்

என்று அனுமனோடு சேர்ந்து நாமும் நெஞ்சில் இருத்தி அனுபவிப்போம்.