இன்னருள் நல்கும் இராமபிரானின் தமிழகத் திருக்கோயில்கள்
8. காரைக்கால் ஸ்ரீராமர்
நா கப்பட்டினத்திலிருந்து ஸுமார் 18 A.e. தூரத்தில் உள்ளது காரைக்கால் என்ற இந்த தலம். காரைக்கால் அம்மையார் அவர்களின் பிறப்பிடமான இவ்வூரில் பெருமாள் கோவில்கள் என்று கூறப்படும் இரண்டு ஆலயங்களில் ஒன்று அரங்நாதருடையது. மற்றது கோதண்டராமருடையது. இக்ஷ§வாகு குல தெய்வமும், குலதிலகமும் அருகருகே கோவில் கொண்டுள்ளனர் இந்தத் தலத்தில். கோதண்ட ராமர் கோவிலும் பார்வதீஸ்வரஸ்வாமி கோவிலும் ஒன்றையன்று சார்புடையவை. இங்குள்ள கோதண்டராமர் கோவில் மிகச் சிறிய ஆலயமே.
இங்கு மூலவராக எழுந்தருளியிருப்பவர் ஸ்ரீ வரதராஜப் பெருமாள். அவர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார். ஆனால் இக்கோவிலில் முக்யத்துவம் உற்சவ மூர்த்தியாகத் திகழும் கோதண்டராமருக்கே. அவர் வலப்புறம் ஸீதை, இடப்புறம் லக்ஷ்மணன், ஆஞ்சனேயர் சகிதம் நின்ற நிலையில் வாய்பொத்தி ஆஞ்சனேயர் வினய ஆஞ்சனேயராக உள்ளது நம் நெஞ்சத்தை தொடுகிறது. பக்தியில் அனுமனுக்கு ஈடு இணை உண்டோ பஞ்சமுக ஆஞ்சனேயருக்கு ஒரு தனி ஸந்நிதி புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. அவர் மிகவும் கம்பீரமாக, புதுமை பொலியத் திகழ்கிறார். மற்றும் சிறிய ஸந்நிதிகளில் தும்பிக்கை ஆழ்வாரான விநாயகரும், நாகராஜரும் உள்ளனர். நாகராஜரை ஆதிசேஷன் என்றும் கூறுகின்றனர். காரைக்கால் ரங்கநாதர் கோவிலிலும் ராமபிரானுக்கு ஒரு ஸந்நிதி தனியாக உள்ளது. இவ்விருவரும் சேர்ந்திருக்கும் மற்றொரு சோழநாட்டுத் திருத்தலம் முடி கொண்டான்.
ரங்கபுர விஹார ஜயகோதண்டராமாவதார ரகுவீர என்ற நாதஜோதி முத்துஸ்வாமி தீக்ஷிதரின் ப்ருந்தாவனசாரங்கராகக் கீர்த்தனை நம் செவியில் ஒலிப்பது போல் தோன்றுகின்றதல்லவா