கோடையில் அன்னாசியும், இலந்தையும் Pineapple என்ற பூந்தாழம்பழம் ஆனி ஆடி முதல் ஐப்பசி கார்த்திகை வரை பூத்துக் காய்க்கிறது ப்ரேசில் நாடுதான் இதனை முதல் உற்பத்தி ச

கோடையில் அன்னாசியும், இலந்தையும்

Pineapple என்ற பூந்தாழம்பழம் ஆனி ஆடி முதல் ஐப்பசி கார்த்திகை வரை பூத்துக் காய்க்கிறது. ப்ரேசில் நாடுதான் இதனை முதல் உற்பத்தி செய்தது. போர்த்துகீசியர்கள் விற்பனைக்காக முதன் முதலாக இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். இதன் பழம் காயாக உள்ள நிலையில் அதிக புளிப்பும், பழுத்தவுடன் இனிப்பாகவுமிருக்கும். உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். pv அல்லது அன்னாசி ரஸம் செய்து சாப்பிட்டால் ருசியையும் பசியையும் நன்கு தூண்டி விடும். குடலில் வாயுவால் கட்டுப்படுகிறவருக்கும், மலச்சிக்கலால் அவதியுறும் நபருக்கும் அன்னாசிப்பழத்தை சாப்பிடுவதால் அவைகளை தேங்க விடாமல் வெளியேற்றி விடும். ருசியாக இருககிறதே!எண்றெண்ணி அதிக அளவில் சாப்பிட்டால் மலத்தை இளக்கி பேதியாகும். Fungus எனப்படும் உணவுப்பையின் பாகத்தில் வாயுவின் அழுத்தத்தால் சிலருக்கு மார்பின் வேதனை ஏற்படும். அவர்கள் அன்னாசியை உணவாக ஏற்க மேல் வயிற்றிலேறப்படும் அழுத்தத்தைக் குறைத்து ஹிருதயத்தின் வேலையை சிரமமின்றி நடக்கச் செய்யும்.

பெண்களுக்கு மிகவும் உகந்த பழம் அன்னாசியாகும். பழ ரசத்தினாலான சர்பத்தை சர்க்கரை சேர்த்துச் சாப்பிட Uterus எனப்படும் கர்பபாசயத்தில் தூண்டுதல் அதிகம் ஏற்பட்டு மாதவிடாய் கோளாறுகள் நீங்கி சரியாக உரிய காலத்தில் வெளியாகும். மேலும் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கடும் வலியையும் போக்கி விடும். ஆனால் மாதவிடாயில் அதிக உதிரப் பெருக்குள்ளவர்கள், குறைந்த இடைவெளியில் ஏற்படும் மாதவிடாயிலும் அன்னாசி ஏற்றதல்ல. கர்ப்பிணிகள் இதை சாப்பிடக்கூடாது.

கோடையில் பொதுவாகவே சிறுநீர் எரிச்சல், தடை போன்றவை தோன்றலாம். அன்னாசி பழரசம் இக்கோளாறுகளை நீக்கிவிடும். மூத்திரப்பை பாதையில் கல்லடைப்பு, சிறுநீர் சொட்டு சொட்டாக வெளியேறும் நிலையிலும் அன்னாசிப் பழம் அவ்வகை உபத்திரவங்களை நீக்க பெரிதும் உதவும். ஆனால் அதிக அளவில் சர்க்கரை வியாதியால் துன்புறும் நபருக்கு அன்னாசி நல்லதல்ல. மஞ்சள் காமாலையிலும் ரத்தபித்தம் எனும் கடுமையான வியாதியால் ஏற்படும் பித்த அடைப்பை போக்கவும் இதன் சாற்றை கொடுப்பதுண்டு. மலத்தின் வெண்மை நிறமும், சிறுநீரில் மஞ்சள் நிறமும் மாறி இயற்கையான நிலையை அடைய அன்னாசிச்சாறு பெரிதும் உதவுகிறது.

பயணத்தில் ஏற்படும் வாந்தி, வெயிலில் சென்று வந்தவுடன் ஏற்படும் தீராத பித்தத்தலைவலி உள்ளவர்கள் அன்னாசி பழ ரச சர்பத்தை தினமும் சாப்பிடலாம். பச்சையாக சாறுபிழிந்து சாப்பிடுவதை விட சிறிது ஆவியல் வெதுப்பிய பிறகு, சாறு பிழிந்து சர்க்கரை சேர்த்து சாப்பிடுதல் நல்லது.

இலந்தைப்பழம் மூன்று வகையில் உருவத்தைக் கொண்டு பிரித்துள்ளனர். பெரிய அளவில் உள்ள சீமை இலந்தை, நாட்டு இலந்தை மற்றும் காட்டு இலந்தை என மூன்று வகைகள். வெளிநாடுகளிலிருந்து வந்தால் சீமை இலந்தை என்கிறோம். உருவத்தில் பெரிதானது. மிகவும் இனிப்பானது. நாட்டு இலந்தை இந்தியாவெங்கிலும பயிராகிறது. புளிப்பு தூக்கலான இனிப்புச் சுவை கொண்டது.

காட்டு இலந்தையை அதிகமாக உணவில் சேர்ப்பதில்லை. சிறிய உருவம் கொண்டது. துவர்ப்பும் புளிப்பும் நிறைந்தது.

பித்தம் தணிய இலந்தையை சாப்பிடலாம். அதன் நெய்ப்பு மற்றும் பிசுபிசுப்பு தன்மையால் வயிற்றின் பசி அறிந்து உண்ண வேண்டும். அதிக அளவில் சாப்பிட்டுவிட்டால் பசி மந்தித்து விடும். நல்ல பழமான பிறகு அதன் விதையை நீக்கிவிட்டு உலர்த்தி வற்றலாக வைத்துக்கொள்ளலாம். கபம் இறுகி தொண்டையிலும் மூச்சுக்குழாயிலும் அடைபட்டு வரட்டிருமல் ஏற்படும்போது இலந்தை வற்றலை சாப்பிட கபம் இளகி சிறிது சிறிதாக வெறியேறிவிடும். தொண்டையில் ஏற்பட்ட வறட்சி, வேதனை, எரிச்சல் இலந்தையை உண்பதால் குறையும்.

கோடையில் அதிக நாவறட்சி ஏற்படும். இலந்தைப்பழம் அதனை நீக்குவதோடல்லாமல் நாக்கிற்கு சுவை உணர்ச்சியைக் கூட்டி பசியையும் நன்கு தூண்டி விடும். விக்கலைப்போக்கும். சர்க்கரை வியாதியால் துன்புறும் நபர்களுக்கு இலந்தை விதையை தூள் செய்து காலை மாலை வெறும் வயிற்றில் சிறிய அளவில் சாப்பிட, சிறுநீரின் அளவை குறைத்தது, ரத்தத்திலுள்ள சர்க்கரையின் அளவும் கட்டுப்படும். மலச்சிக்கலை நீக்கி குடலுக்கு பலம் தரும்.

இலந்தை வற்றலை அப்படியே சாப்பிடுவதைவிட சிறிது மிளகும் இந்துப்பும் சர்த்து தூளாக்கி 5-7 கிராம். அளவில் வெந்நீருடன் காலையில் சாப்பிட பசி மந்தம் நீங்கி ஜீர்ண சக்தி அதிகமாகும். புளிப்பான இலந்தையை வற்றலாகச் செய்து பச்சடி உணவாகச் சேர்க்க சிறந்த பத்திய உணவாகும். சீமை இலந்தை நல்ல இனிப்பான சுவையுள்ளதும், உடல் களைப்பை நீக்கி உடலுக்கு புஷ்டியும் பலமும் அளிப்பதில் சிறந்த பழமாகும்.