தீர்க்காயுஸுக்கான வழி நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றொரு பழமொழி உண்டு இன்று நாம் யாரைப் பார்க்க நேரிட்டாலும் ஏதேனும் ஒரு வகையில் நோயினால் துன்புறுக

தீர்க்காயுஸுக்கான வழி

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றொரு பழமொழி உண்டு. இன்று நாம் யாரைப் பார்க்க நேரிட்டாலும் ஏதேனும் ஒரு வகையில் நோயினால் துன்புறுகின்றனர். அதை நிவிருத்தி செய்வதற்கான வழிகளை பல ஆஸ்பத்திரிகளில் ஏறி இறங்கிய பிறகு ஆயுர்வேத மருத்துவரை அணுகி கேட்கின்றனர். அவர் நம்மிடம் வருவதற்குள் நோயின் உக்கிரம் கூடிவிடுகிறது. நோயற்ற வாழ்க்கைகக்கு ஆயுர்வேதம் தரும் உபதேசம் போல வேறு மருத்துவ முறைகள் கூறியுள்ளதா? என்ற விஷயம் சிந்தனைக்குட்பட்டது. ஆயுர்வேதம் தரும் உபதேசம் என்னவென்றால் -

காலே ஹித மிதபோஜீ க்ருத சங்கிரம : கிரமேண வாமச:அவித்ருத மூத்ரபுரீ : ஸதிரீஷ§ ஜிதாத்மா சஸோருக். ஸோருக் - : அரு அவன்தான் நோயற்றிருக்க முடியும். எவன்? சரியான காலத்தில் தனக்கு நன்மையளிப்பதும் தன் இரைப்பையின் அளவிற்கேற்றபடியும் உள்ள உணவை ஏற்பவனும், சாப்பிட்டதும் தன் சக்தியை உணர்ந்து அதற்கேற்ப நடை கொள்பவனும், இடதுபுறமாக ஒறுக்களித்துப் படுத்துத் தூங்குபவனும், மல மூத்திரங்களின் இயற்கை உந்துதல்களை அடக்காமல் உரிய காலத்தில் வெளியேற்றுபவனும், சிற்றின்ப விஷயத்தில் தன்னடக்கம் உள்வனும்தான் நோயற்றிருப்பான். அதுவே தீர்ககாயுஸுக்கும் வழி.

கேரள தேசத்தில் ஒரு கதை இவ்வாறு கூறப்பட்டுள்ளது. அதாவது தேவர்களுக்கு வைத்யர் அச்வினி தேவதைகள் எனும் இரட்டையர் இந்திரனிடமிருந்து கற்றரிந்த ஆயுர்வேதத்தை மஹரிஷி பரத்வாஜர், தர்மார்த்த காம மோட்ஷங்களுக்கு இடையூறு விளைவித்த நோய்களால் மக்கள் துன்புற்றிருக்க, இவ்வுலகில் பரப்பினார். அப்படிப்பட்ட இந்திரனுக்கும் ஆயுர்வேத குரு என்ற பெருமை அச்வினி தேவதைகள் பெற்றிருந்தனர். இவர்கள் நிகழ்த்திய பல அற்புதமான சிகித்ஸைகள் வேதங்களிலும் புராணங்களிலும் கூறப்பட்டுள்ளன. அச்வினி தேவதைகளுக்கு ஆயுர்வேதத்தின் அடிப்படை உண்மைகள் மக்கள் எவ்வளவு தூரம் அறிந்துள்ளனர் என அறிய ஆசை ஏற்பட்டு இருவரும் இரு பறவைகளாக மாறி பாரத தேசமெங்கும் சுற்றி வந்தனர் ஆயுர்வேதத்தில் சிறப்பான வைத்ய முறைகளை கற்றறிந்த வைத்ய குடும்பங்களை சென்று பார்ப்பதும் அவர்கள் செய்யும் ஆயுர்வேத சிகித்ஸைகளையும் கூர்ந்து கவனித்தனர். சிகித்ஸையின் லஷ்யம் எது? என்பதை இவர்கள் தெரிந்தது வைத்திருக்கிறார்களா? என்பதை பரிசோதிக்கும் விதமாக மரத்தில் அமர்ந்தபடி வைத்யர்கள் காதில் விழும்படி கோ (அ) ருக் கோ (அ) ருக் என்று ஒலி எழுப்பினர். :எவன் அரு:நோயற்றவன் - :அரு-கோருக் என்று அதற்கு அர்த்தம். இது வெறும் பறவையின் குரல் என்று எவரும் மதிக்கவில்லை. அவர்களும் தங்களது முயற்சியை கைவிடாது நாடெங்கும் சுற்றித்திரிந்தனர். கேரள தேசத்தில் வெட்டம் (வடபுரம்) என்றோர் ஊர். அங்குள்ள வைத்யர் வீட்டின் மரக்கிளையில் அமர்ந்து கோருக் கோருக் என்று ஒலி எழுப்பினர். வைத்யர் சப்தத்தைக் கேட்டதும் திகைத்தார். பறவைகள் கேட்கும் நோயற்றவன் எவன்? நோய்வராமல் இருக்கக்கூடியவன் எவன்?

எவ்விதமிருந்தால் நோய் வராது? என்ற கேள்விக்கு உடன் "காலே ஹித மிதபோஜீ க்ருத சங்கிரமண, கிரமேண வாச :அவித்ருத மூத்ரபுரீ:ஸ்திரீஷீ ஜிதாத்மா ச ஸோருக் 11" என்று பதிலளித்தார். இந்த ஸ்லோகத்தின் அர்த்தத்தை நாம் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்தோம். நமது தினசரி வாழ்க்கையில் மிக முக்கியத்துவம் வாய்ந்த சில விஷயங்களில் இருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் அனைத்தையும் தொகுத்துத் தந்த வைத்யரின் பதிலைக் கண்டு அச்வினி தேவதைக்கு மிகவும் பிடித்துவிட்டது. பறவை உருவத்திலிருந்து இரு சீடர்களாக வேடமிட்டு அந்த வைத்யருக்கு ஆயுர்வேத சிகித்ஸா ரஹஸ்யங்களை காண்பித்து இறுதியில் சுய உருவத்தையும் காண்பித்து குரு காணிக்கையாக வைத்ய சாஸ்திர நூல் ஒன்றையும் தந்து சென்றனர். ஆகவே நாமும் இவ்வறிவுரையை பின்பற்றி நோயற்ற வாழ்வினையும், தீர்க்காயுசும் பெற முயற்சி செய்வோம்.