வரும் காலங்களில் பூமியில் சூடு அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். பூமியின் உஷ்ணம் நமது உடலையும் பாதிக்கும். "அண்டத்தில் உள்ளதே பிணம், பிண்டத்தில் உள்ளதே அண்டம். அண்டமும் பிண்டமும் ஒன்றே, அறிந்துதான் பார்க்கும் போது" என்று சித்த மருத்துவம் தெரிவிக்கிறது. வருவதற்குக் காரணம் யுத்தமும், மரங்கள் வெட்டிச் சாய்த்து "காட்டை நாடு" என்று சொல்லபோய் காடே நாடாகி விட்டது. காடென்றால் என்ன? என்று பிள்ளைகள் இனி ஏட்டில் மட்டுமே அறிய முடியும் நிலை உருவாகி வருகிறது. உடலில் ஜலத்தின் அம்சம் வற்றுவதால் ஜ்வரம், சரீர வேக்காடு, நாவறட்சி, தலைச்சுற்றல், மனக்கோளாறு போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புண்டு. உடல் சூட்டைக் குறைப்பதற்கு ஆயுர்வேதம் சில எளிய வழிகளை நமக்கு உபதேசித்துள்ளது? அவைகளில் பாண்ட கல்பனை மிக எளிதான ஒன்றாகும். அதைப் பற்றிய விவரங்களைக் காண்போம்.
தூக புஷ்பாதி பாண்டம் - இலுப்பைப்பூ, அதிமதுரம், சந்தனம், ஈச்சம்பழம், தாமரைத்தண்டு, தாமரைப்பூ, வெள்ளிலோத்தி, பெருங்குமிழன், நாககேசரம், த்ரிபலை, நன்னாரி, திராட்சை, நெற்பொரி இவற்றை இடித்து, வெந்நீரில் சேர்த்து, சிறிது நேரத்திற்கெல்லாம் வடிகட்டி, சர்க்கரையும் தேனும் கலந்து உட்கொள்ளலாம், இது 'மதூகபுஷ்பாதி பாண்டம்' எனப்படும். இதை உட்கொள்வதால் வாத பித்த ஜ்வரம், உடல் உஷ்ணம், நாவறட்சி, மூர்ச்சை, மனக்கோளாறு, இரத்த வாந்தி, இரத்தபேதி, தலைச்சுற்றல், வெறி இவை நிவ்ருத்தியாவது நிச்சயம்.
ஆம்ர கிஸலயாதி பாண்டம் - மாங்கொழுந்து, நாவற்கொழுந்து, ஆலம் விழுது, வெட்டிவேர் இவற்றாலான பாண்டத்தில் தேன்சேர்த்து உட்கொள்ள ஜ்வரம், நாவறட்சி, வாந்தி, பேதி, பலமான மூர்ச்சை (மயக்கம்) இவை குணமாகும்.
மதூக புஷ்பாதி பாண்டம் இரண்டாவது - இலுப்பைப் பூ, பெருங்குமிழன், செஞ்சந்தனம், வெட்டிவேர், தனியா, திராட்சை இவற்றாலான பாண்டத்தை ஆறிய பிறகு சர்க்கரை, சேர்த்து உபயோகிக்க நாவறட்சி பித்தத்தின் சீற்றம், சரீரவேக்காடு,. மூர்ச்சை இவை போகும்.
மந்த கல்பனை - மந்தம் என்கிற பாகமும் பாண்டத்தைச் சேர்ந்ததேயாம், ஆகவே அவ்விஷயமும இங்கு குறிப்பிடுவது அவசியமாகிறது. பக்குவம் செய்யவேண்டிய ஒரு பலம் (60 கிராம்) பதார்த்தத்தைப் பொடி செய்து, நான்கு பலம் (240-250 IL) குளிர்ந்த ஜலம் சேர்த்து, ஒரு மட்பாத்திரத்தில் நன்றாகக் கடைய வேண்டும், மந்தத்தை இரண்டு பலம் (260 IL) அளவில் உட்கொள்ளலாம்.
கர்ஜுராதி மந்தம் - பேரிச்சங்காய், மாதுளம்பழம், திராட்சை, புளி, நெல்லிக்கனி, ஈச்சம்பழம், இவற்றால் பக்குவம் செய்து மந்தம் மதுபானத்தினாலான எவ்விகாரங்களையும் போக்கும்.மஸுராதி மந்தம் - சிறுகடலைமாவில் தேனையும், மாதுளம் பழச்சாற்றையும் விட்டுக் கடைந்து கொள்வதால் வாதபித்த கபங்களின் சிற்றத்தால் ஏற்படும் வாந்தியும் சீக்கிரத்தில் நிவ்ருத்தியாகும்.