அன்னரக்ஷ£ சாதாரண ஓட்டல் முதல் 5 ஸ்டார் ஓட்டல் வரை இப்போழுதெல்லாம் கூட்டம் அலைமோதுகிறது மதிய உணவு வேளையில் ஒட்டலில் எங்கு சீட் கிடைக்கும்? என்று அலைய வேண

அன்னரக்ஷ£

சாதாரண ஓட்டல் முதல் 5 ஸ்டார் ஓட்டல் வரை இப்போழுதெல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. மதிய உணவு வேளையில் ஒட்டலில் எங்கு சீட் கிடைக்கும்? என்று அலைய வேண்டியுள்ளது. சமைப்பதற்கு சோம்பல் பட்டுக் கொண்டு கையேந்தி பவனிலும், ஓட்டலிலும் சென்று சாப்பிட மனம் விரும்புகின்றது. வீட்டில் உணவு சிரத்தையுடன் ருசியுடன் செய்யப்பட்டு அன்புடன் பரிமாறப்படுவதால் உடல் அரோக்கியம் கெடாமல் பாதுகாக்கப்படுகிறது. வியாபார நோக்கத்துடன் விற்கப்படும் ஓட்டல் மற்றும் பொது இடங்களில் வழங்கப்படும் உணவினால் வயிறு நிறையலாம். ஆனால் அதன் மூலமாக ஆரோக்யத்திற்கு உத்தரவாதமில்லை. உணவில் பாக விசேஷத்தாலும், ஜந்துக்கள் மூலமாகவும் நஞ்சு கலந்திருந்தாலும் அவ்வகை உணவை நம்மால் அறிய முடிவதில்லை.


ஒரு நோயாளி மருத்துவரை அணுகி மருந்தை வாங்கிக் கொண்டு 'பத்தியம் என்ன?' என்று வினவுகிறார். 'ஓட்டல் உணவை தவிர்த்து, வீட்டு உணவை சாப்பிடவும்' என்று வைத்தியர் கூறினால் அடுத்த முறை நோயாளி அவரிடம் வருவதில்லை 'சரி, நோய் குணமாகிவிட்டது' என்று வைத்தியர் கருதினால் அது தவ மருத்துவனின் பெருமையை நோயாளி அறிய வேண்டும் சீடன் ஆசானைப் போலவும், மகன் தந்தையைப் போலவும் மருத்துவரை உரிய காலத்தில் பணத்தாலும், மதிப்பாலும் போற்றி பூஜிக்க வேண்டும். யானைப் பாகன் நற்குணமுள்ளவனாக இருந்தாலும், அங்குசத்தினால் அவ்வப்போது யானையை அடக்காவிட்டால் மக்களிடம் மதிப்பைப் பெறமுடியாது. அதே போல் நோயாளி தன்னுடைய உணவு, செய்கைகள் இவற்றைப் பற்றி மருத்துவனுக்கு அடங்கியவனாகத் தன்னை ஆக்கிக் கொள்ள வேண்டும்.
அதிருஷ்டவசமாகக் கிடைத்துள்ள உயிர் வாழ்க்கை அபாயம் நிரம்பியது. அது உபாயத்தின் வலிவால்தான் உடலில் தங்கியுள்ளது. எனவே நோயாளி மருத்துவனின் வசத்திலிருப்பதே பெரியதோர் உபாயமெனக் கருத வேண்டும். நஞ்சு கலந்த உணவின் அறிகுறிகள் - அன்னம் நஞ்சு கலந்தால் கஞ்சி பிரியாமல் குழம்பிவிடும். அது காலம் கடந்து பக்குவமாகும். பக்குவமான சிறிது நேரத்திலேயே ஊசிப்போன பொருள் போல் ஆகிவிடும். ஆவி குன்றி கெட்டியாகி விடும், மற்றும் இயற்கையான நிறம், மணம், சுவை எல்லாம் நீங்கிவிடும். தண்ணீர் விட்டுக் கொண்டு (நொய்ந்து) விடும் இதில் பற்பல வண்ணங்களில் பளபளப்பு நாற்புறமும் காணப்படும்.


நஞ்சு சேர்க்கையால் பொருள்களில் மாற்றம் - உணவில் கூட்டுப் பொருட்கள் உலர்ந்து விடும். கொதித்த பொருள் அழுக்கடைந்து விடும். பாலின் நடுவில் தாமிர நிறத்தில் கோடு, நீரில் கருப்பு, தயிரில் சாம்பல் கலந்த நிறம், மோரில் சிறிது நீலமும் மஞ்சளுமான கோடு, நெய்யில் தண்ணீர் போன்ற கோடு, தேனில் பச்சை நிறம், எண்ணெயில் சிவப்பு நிறம், நஞ்சின் காரணமாக பச்சையாக உள்ள காய்கள் பழுத்து விடும். பழுத்தவை அழுகி விடும்.
ஈரமான பொருள்கள் உடனே வாடிவிடும். உலர்ந்தவை கருப்பாகவோ, விகாரமாகவோ ஆகிவிடும். கடினமான பொருள் மிருதுவாகவும், மிருதுவானவை கடினமாகவும் ஆகும். மலர் மாலைகள் விஷத்தால் வாடிவிடும். நறுமணத்தை இழக்கும். நுனிப்பகுதி வெடித்து ஒடிந்துவிடும்.
விரிப்புகள் விஷத்தால் அழுக்கு நிறம் பெற்று இவற்றின் நூலிழைகள் உதிர்ந்து விடும்.
உலோகங்கள் (பொன், வெள்ளி முதலியன) இரத்தினங்கள் முதலானவற்றால் இயற்றப்பட்ட அணிகலன்களில் சேறு போன்று அழுக்குப் பதிந்து விடும். இவற்றின் நெருக்கம், பளபளப்பு, நிறம், எடை, ஒளி, தொடு உணர்வு இவையெல்லாம் அழிந்து விடும்.
விஷப் பரிட்சை - சந்தேகத்திற்குரிய உணவு வகைகளை தீயில் சேர்த்தால் அதில் எழும் தீப்பிழம்பு ஒரு சுற்றுச் சுற்றி வறட்சி, மந்தமான ஒ£ ¤, வானவில் போன்ற பல நிறங்கள் இவைளுடன் 'சடசட' என்னும் ஒலியைத் தோற்றுவிக்கும்.
விஷ உணவை தீயில் இட்டவுடன் வரும் புகை மயக்கம், உமிழ்நீர், சளி கசிதல், தலைவலி, மூக்கின் வழியாக நீர் சுரத்தல், கண்களில் உணர்ச்சியின்மை இவைகளை உண்டாக்கும்.
இதற்கு சிகித்ஸை - ஜடாமாம்சி, கோஷ்டம், விளாமிச்ச வேர், இவைகளை சம எடையில் எடுத்து தேனில் ஊறவைத்து மூக்கினுள் சொட்டு மருந்தாகவும், கண் மையாகவும் உபயோகிக்க வேண்டும்.
அல்லது நாயுருவி வேர், வாயுவிடங்கம், சிற்றாமுட்டி, பேராமுட்டி வேர்கள், கொடிவேலி, ஆடு தீண்டாப் பாளையின்பூ, சாமந்திப் பூவின் க்ஷ£ரம், திராட்சை, நெய், வெல்லம் இவற்றை தணலில் எரித்து வரும் புகையை மூக்கால் உறிஞ்ச வேண்டும்.
நஞ்சு கலந்த உணவிலிருந்து எழுகின்ற ஆவியின் நிறம் மயிலின் கழூத்து நிறம் போலாகும். மூர்ச்சை, மயக்கம் தோற்றுவிக்கும்.
நஞ்சு கலந்த சாதத்தைத் தொடுவதால் விஷத்திற்குச் சமமாகக் கையில் எரிச்சல், வீக்கம் உணர்ச்சியின்மை, நகங்கள் உதிர்ந்து விடுதல் இவை ஏற்படும். அதற்காக வெட்டிவேர், இந்திரகோபம், வல்லாரை, தாமரை இவைகளை அரைத்துப் பூச வேண்டும்.
நஞ்சு கலந்த உணவைப் புசிப்பதால் உதடுகளில் 'கபகப' என்று எரிச்சலுண்டாகும் வாய்க்குள் எரிச்சல், நாக்கின் அடிப்பகுதியில் பளு, முகவாய் அசைவற்றுப் போதல், பல் கூசுதல், உமிழ்நீர் பெருகுதல் என்பவையுண்டாகும்.
சுவைகளை அறிய முடியாத நிலை ஏற்படும். அதற்கு மேலே குறிப்பிட்ட மூலிகைப் புகையை மூக்கினால் உறிஞ்சுதல், ஏழிலைப்பாலை இலைகளை அரைத்து தேன்குழைத்து வாயினுள் பூசவேண்டும். மாதுளை, களாக்காய், வைரப்புளி, வேம்பு, மாமரம், கொடி இலந்தை, இவற்றின் சாற்றுடன் தேன் கலந்து வாய் கொப்பளிக்கச் செய்ய வேண்டும்.

முடிந்தவரை வெளியே உணவு சாப்பிடுவதை தவிர்த்து வீட்டில் செய்யும் உணவையே சாப்பிடும் வழக்கத்தை பழகுதல் நலம் தரும்.