அகால ம¬ ழ முன்பெல்லாம் மழைக்காலத்தில் மழை பெய்தது கடம் வெயிலால் மக்கள் அவதியுற்று நீர் நிலைகள் அனைத்தும் வற்றி தண்ணீருக்காக திண்டாடும் தமிழ்நாட்டில் அ

அகால ம¬

முன்பெல்லாம் மழைக்காலத்தில் மழை பெய்தது. கடம் வெயிலால் மக்கள் அவதியுற்று நீர் நிலைகள் அனைத்தும் வற்றி தண்ணீருக்காக திண்டாடும் தமிழ்நாட்டில் அதுவும் அக்னி நட்சத்திரம் தொடங்கும் சமயத்தில் மழை பெய்து பூமியை குளிரச் செய்து மக்களின் மனமும் மகிழ்ச்சியடைந்தது. வரவேற்கத்தக்கதே. ஆனால் ஒரு புயல் உருவாகி அதன் மூலம்தான் மழைநீர் நமக்கு கிடைக்கும் காலமாகிவிட்டது. கண்மூடித்தனமாக காடுகளிலுள்ள மரங்களை வெட்டி வீழ்த்தி நமக்கு நாமே ஆபத்தை விலை கொடுத்து வாங்கி விட்டோம். மரங்கள் குறைவதால் பூமியில் சூடு அதிகரிக்கிறது. Ozone படலத்தில் ஒட்டை வீழ்ந்து விட்டதால் சூரியனின் ultra violet கதிர்கள் பூமியில் இறங்குகின்றன. இவ்வகைக் கதிர்கள் கடலில் மிதக்கும் ஐஸ் பாறைகளில் படுவதால் அவை கரைந்து நீரின் அளவு கடலில் அதிகரிக்கிறது. தண்ணீரின் அளவு கூடுவதால் நிலத்தை தண்ணீர் ஆக்கிரமிப்பு செய்து நிலத்தை விழுங்கி வருகிறது. மரத்தை வளர்ப்பதால் மட்டுமே நம்மால் இனி நிலத்தை பாதுகாத்து போதிய அளவு மழையும் பெற இயலும். அகால மழையினால் பல ஆபத்துக்களும் நிறைந்துள்ளன. காய்ந்து அழுக்கேறிக் கிடக்கும் நிலத்தில் நீர்விழ்ந்து ஓடத் தொடங்கினால் அழக்குகளனைத்தும் தண்ணீருடன் கலந்து ஒருவித புளிப்புத் தன்மையை பெறுகின்றது. காய்ந்த தோசைக் கல்லில் தண்ணீர் தெளித்தால் ஆவி வருவது போல மழைநீர் பூமி சூடான நிலையில் உள்ள போது வீழ்வதால் ஆவி உருவாகி தண்ணீர் புளித்து விடுகிறது. இவ்வகையான நீரை அருந்துவதால் மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் காந்தல் தன்மை உடலில் ஏற்படுகிறது. பித்தத்தின் அளவு உடலில் அதிகரிக்கின்றது. கடும் வெப்பத்தில் உடலின் நீரின் அளவும், நெய்ப்புத் தன்மையும் வற்றி உடல் வறட்சி, லேசானதன்மை, அமைதியற்ற தன்மைகளால் வாடும் போது, அகால மழையினால் திடீரென்று ஏற்படும் குளிர்ச்சி போன்றவைகளால் வாதம் மிகப்பெரிய அளவில் சீற்றம் கொள்வதால் நரம்புகளில் வலி, தசைப்பிடிப்பு, மலச்சிக்கல், குடலில் வாயுவின் ஓட்டம் அதிகரித்தல் போன்ற வாயு சம்பந்தமான உபத்திரவங்கள் ஏற்படக்கூடும். அது போன்ற நிலைகளில் அடிக்கடி நல்லெண்ணயை சூடு செய்து தலைமுதல் பாதம் வரை தேய்த்து அரை மணிமுதல் 1 மணி நேரம் வரை ஊறி வெந்நீரில் குளிப்பது நலம். வாயுவை அதிகப்படுத்தும் வாழைக்காய், உருளைக்கிழங்கு வருவல், சுண்டைக்காய், காராமணி, மொச்சக்கொட்டை, வேர்க்கடலை, கடலெண்ணை, பருப்பு வகைகள், காரம், கசப்பு. துவர்ப்புச் சுவை உள்ள பண்டங்களை தவிர்க்க வேண்டும். குளிர்பானங்களை தவிர்த்து வெந்நீரையே பருகவேண்டும். நெய்யை சூடான சாதத்துடன் கலந்து சூடான தெளி ரஸத்துடன் சாப்பிடுவதும், மோரை அதிக அளவில் உணவில் சேர்ப்பதும் நலம் தரும். இரவில் அதிகம் கண் விழிக்காது குறிப்பிட்ட நேரம் அமைத்து உறங்க வேண்டும். அதிக உடற்பயிற்சி, சாகஸங்கள் செய்தல் போன்றவை மேலும் வாயுவை அதிகப்படுத்துவதால் அவைகளை அதிகம் செய்யக்கூடாது. cervical spondylitis, lumbar spondylitis, lordosis போன்ற நோயுள்ளவர்கள் அகால மழையில் அதிக வலியை உணருவார்கள். விளக்கெண்ணையை சூடு செய்து பஞ்சில் நனைத்து வலி உள்ள இடங்களில் சிறிது நேரம் வைத்திருந்து பிறகு வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். தணலில் வறுத்த பண்டங்களைத் தவிர்த்த உணவை சூடாக சாப்பிட வேண்டும்.

அகால மழையினால் குளம்போல மழைத்தண்ணீர் ரோடுகளில் தேங்கி நிற்கக்கூடும். அவைகளில் காலை வைப்பதால் நுண்கிருமிகள் பித்த வெடிப்புகளிலும் கால்நகத்தின் இடுக்குகளிலும் நுழைந்து பேராபத்தை தோற்றுவிக்கும். அதனால் வீட்டிறக்குச் சென்றவுடன் வெந்நீரில் காலை நன்றாக அலம்ப வேண்டும். கால்நகங்களை வளராதபடி சீராக வெட்டி நக இடுக்குகளில் வெந்நீரை விட்டு சுத்தமாக பஞ்சினால் துடைக்க வேண்டும். முகத்தை பாதுகாப்பது போல கால்களையும் அகால மழையில் மிகவும் சிரத்தையுடன் பாதுகாக்க வேண்டும்.

அகால மழை சட்டென்று நின்று சுள்ளென்று வெயில் அடிக்கும்போது சீதோஷ்ண நிலையில் சட்டென்று உடல் வியர்க்கிறது. உடலில் எரிச்சலை ஏற்படுத்தும் இதுபோன்ற நிலையில் மின்விசிறியைவிட பனைஓலை விசிறியை உபயோகப்படுத்தி உடல்சூட்டை தணிக்க வேண்டும்.