பிறந்தவுடன் குழந்தைக்கு தாயப்பால் போதுமான அளவில் தாயாருக்கு இல்லாமல் வற்றிய நிலை இன்று பெருமளவில் காணப்படுகிறது? கொடுத்து சில நாட்களில் முழுவதுமாய் நின்று செயற்கை உணவு வகைகளை கொடுக்கும் நிலைக்கு வந்துவிடுகின்றனர். செயற்கை உணவில் போஷாக்குக் குறைவு, தாய்ப்பாலில் இயற்கை ஜீவசத்துக்கள் (Natural Vitamins) நிறைந்துள்ளன என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தாயாருக்கும் இது தெரிந்தே உள்ளது. ஆனால் பால் சுரக்க வில்லையே? என்று வேதனைப்படுகின்றனர். இதற்கு என்ன காரணம்? என்பதை ஆயுர்வேதம் தெளிவாக எடுத்துக் கூறுகிறது.
க்ரோத - சோக - அவாத்ஸல்ய - வ்யவாய - வியாயாம - லங்கனாதிபி:1
ஸ்திரியா:ஸ்தன்யநாசோ பவதி
என்று ஸ¨ஸ்ருதர்.
தாயாருக்கு ஏற்படும் கோபத்தினால் உடற்சூடு அகிதரித்து தாயப்பால் வற்றிவிடுகிறது. அதுபோல துக்கத்தினால் தாதுக்களின் செயல்திறன் குன்றி விடுவதாலும் ஏற்படும். மேலும் இரண்டு குழந்தைகளுக்குப் பிறகு கர்ப்பத் தரித்ததால் அதன் மூலம் வெறுப்படைந்து குழந்தை பிறந்ததும் அதனிடம் சிறிதும் பிரியமில்லாமையின் மூலமாகவும் தாயப்பால் வற்றிவிடும். அதிக உடல் உழைப்பு, பட்டினியிருத்தல் அல்லது சத்தான உணவை உட்கொள்ளாதிருத்தல் போன்றவையாலும் தாயப்பால் குறைந்துவிடுகிறது. இவ்வகை காரணங்களை தாய்ப்பால் நன்கு ஊறி வரும் காலங்களில் நீக்க வேண்டும்.
இவை தவிர வேறு ஒரு முக்கிய காரணமும் ஆயுர்வேதம் எடுத்துரைக்கிறது. பொருளாதாரச் சிக்கல், வறுமை போன்ற பல குடும்பப் பிரச்சனைகளால் பெண்ணின் திருமண வாழ்க்கை மிகவும் தள்ளிப்போய் விடுகின்றது. வயதின் முதிர்ச்சி காரணமாக கருத்தறிக்கும் பெண்ணிற்கு உடலின் நெய்ப்புத் தன்மை குறைவால் பிரசவம் கடுமையாகிறது. மேலும் தாய்ப்பாலும் அதிக அளவில் சுரப்பதில்லை. ஆயுர்வேதம் இவ்விஷயத்தின் உபதேசத்தில் இவ்வாறு கூறுகிறது.
அதாஸ்மை பஞ்சவிம்ஷதிவர்ஷாய ஷோடவர்ஷாம் பத்னீம் ஆவஹேத் என்று ஸ¨ஸ்ருதர்.
இருபத்தி ஐந்து வயது பூர்த்தியான ஆணிற்கு பதினாறு வயது நிரம்பிய பெண்ணை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று இவ்வாறு பதினாறு வயதில் கருத்தறிக்கும் பெண்ணிற்கு பிரசவம் எளிதாகவும் தாய்ப்பால் நீண்ட மாதங்களாகத் தங்கு தடையின்றி வருவதையும் காணமுடிகின்றது.
பெண்ணின் திருமண வயது 21 என்று ஆட்டோவின் பின்புறம் எழுதி வைத்துள்ளதைக் காண்கிறோம். அதாவது 21 வயது முதல்தான் அவள் உடல் மற்றும் மன ரீதியாக திருமணத்திற்கு தகுதியுள்ளவளாகிறாள் என்று அதன் அர்த்தம். அதனால் பல பெற்றோர் 21 வயதிற்குப் பிறகுதான் திருமணப் பேச்சைத் தொடங்குகின்றனர். இதில் ஏற்படும் காலதாமதம் அப்பெண்ணிற்கு கருவுறும் சமயத்தில் மிகுந்த உபத்ரவங்களை ஏற்படுத்துகிறது. சாதாரண பிரசவமாக
இல்லாமல் சிசேரியன் அறுவை சிகித்ஸை- தண்டுவடத்தில் போடப்படும் Anaesthetic ஊசி, பல நாட்களுக்கு படுத்திருக்க வேண்டிய நிலை போன்றவற்றால் மன உளைச்சலுக்கு ஆளாகி விடுவதால் தாய்ப்பால் சுரப்பி குன்றி விடுகிறது. மேற்கூறிய இரு விஷயங்களையும் தவிர்த்து குழந்தைக்கு ஊட்டம் நிறைந்த தாய்ப்பாலை வெறுப்பதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும்.