ஆயுர்வேத மசாஜில் எத்தனை வகை உள்ளது? மசாஜ் செய்வதால் என்ன பயன்? மூலிகை எண்ணெயை இளஞ்சூடாக உடலெங்கும் தடவி, மேலிருந்து கீழாகவும் சில ங்களில் கீழிருந்து மேலகாவும் உருவத் த

ஆயுர்வேத மசாஜில் எத்தனை வகை உள்ளது? மசாஜ் செய்வதால் என்ன பயன்?

மூலிகை எண்ணெயை இளஞ்சூடாக உடலெங்கும் தடவி, மேலிருந்து கீழாகவும் சில ங்களில் கீழிருந்து மேலகாவும் உருவத் தேய்ப்பது போன்றவை. அனைத்தும் மசாஜ் வகையைச் சேர்ந்தவை. நல்ல அனுபவம் பெற்றவர் மசாஜ் செய்யும் தருணத்தில் உடலெங்கும் பரவியுள்ள தசை வலிகள் நீங்குவதுடன் ஒரு சுகமான அனுபவத்தையும் நம்மால் பெற இயலும். மசாஜ் மூலம் நாம் பெறும் பயன் பல வகை. தசைகளில் குடி கொண்டுள்ள வாதத்தின் ஆதிக்கத்தால் அங்கு ஏற்படும் வலி, சோர்வு, உணர்வற்ற தன்மை, தசைச்சுருக்கம் போன்றவை நீங்கி ரத்த ஓட்டம் சீராகத் தசைக்கு வந்து சேர்கிறது. அதனால் நாம் புத்துணர்ச்சி அடைகிறோம். இறுக்கமாயிருந்த தசை நார்கள் தளருகின்றன. மசாஜ் மூலம் குடலிலுள்ள கழிவுகள் எளிதில் வெளியேறிவிடுகின்றன. நல்ல உறக்கத்தை மசாஜ் மூலம் நாம் பெற முடியும். தசைகளின் அமைப்பு உடலில் பல இடங்களில் வேறுபடுவதால் அவற்றுக்குத் தக்கவாறு மசாஜ் செய்யப்பட வேண்டும். அதனால் மசாஜ் என்பது உருட்டித் தேய்ப்பது, விரலால் நீவுவது என்பவை உட்பட பல்வேறு வகைப்படும்.

சிலருக்கு இடது காலிலும் வலது காலிலும் ரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு நரம்புகள் சுருண்டு கொள்கிறது. இதற்கு ஆயுர்வேதத்தில் தீர்வு என்ன?

கால்களில் ரத்த ஓட்டம் ரத்தக் குழாய்களின் வழியே இதயத்தை நோக்கிச் செல்கிறது. அசுத்த ரத்தத்தை மேல் நோக்கி எடுத்துச் செல்லும் இந்த ரத்தக் குழாய்களின் உட்பகுதியில் அமைந்துள்ள வால்வுகள் தொய்வடைவதினால் குழாய்கள் சுருட்டிக்கொள்கின்றன. வெகு நேரம் நின்றுகொண்டோ, சம்மணம் கட்டிக்கொண்டோ இருப்பவர்களுக்குச் சில தசைகள் சுருங்கியும் நீண்டும் ஒரே நிலையில் வெகு நேரம் இருப்பதால் அங்கு இயக்கம் குறைகிறது. ரத்தம் தேங்கி விடுகிறது. ஒரே நிலையில் நிற்காமல் அல்லது உட்காராமல் தசைகளை இயக்கிக் கொண்டோ இருப்பவர்களுக்கு இந்தத் தளர்ச்சி ஏற்டுவதில்லை. இதைத் தடுக்க..

1. கால்களை இதமாகப் பிடித்துவிடுவது.

2. அதிக நேரம் நிற்க நேர்ந்தால் நிற்கும் நிலையிலேயே கெண்டைச் சதை, தொடைச் சதை முதலியவற்றை மடக்கி நீட்டிப் பழகுவது.

3. கால் கட்டை விரல்களை உயர்த்தி, தாழ்த்தி, சுழற்றிச் சுறுசுறுப்பூட்டுவது,

4. தினமும் காலையில் நாராயண தைலம், தானவந்த்ர தைலம் இவற்றில் ஏதேனும் ஒன்றைத் தொடை, கணுக்கால், பாதம் இவற்றில் தேய்த்துச் சிறிது இயக்கம் தரும் பயிற்சிகளை அவ்விடங்களில் செய்தபின், இதமான வெந்நீர் அல்லது சாதம் வடித்த கஞ்சியினால் உருவிவிடுவது, இதமான வெந்நீரில் குளிப்பது நல்லது.

அமுக்கறாக் கிழங்கு 250 கிராம் எடுத்துச் சிறு துண்டுகளாக்கி இட்லித் தட்டின் மேல்வைத்து கீழே 250 I.L. எருமை அல்லது பசுவின் பால், 250 I.L.

தண்ணீரும் கலந்து இட்லி வேகவைப்பது போல வேகவைக்கவும். பாலில் கலந்த

தண்ணீரின் அளவு சுண்டியதும் எடுத்து வேரை உலர்த்தித் தூளாக்கிச் சம அளவு சர்க்கரை கலந்து காலை மாலை 3 கிராம் பாலுடன் சாப்பிடலாம். வலுவிழந்த தளர்ந்த தசைகள் வலிவு பெற்று முறுக்குடன் இயங்கும். ரத்தக் குழாய் தளர்ச்சி நீங்கும். இந்தக் கிழங்கு அஸ்வகந்தி சூர்ணம் என்ற பெயரில் ஆயுர்வேதக் கடைகளிலும் கிடைக்கிறது.

வயிற்றில் எரிச்சல், அமிலம் சுரப்பு அதிகமாக இருத்தல் போன்றவற்றிற்கு மருந்து என்ன?

வாஸாகுடூச்யாதி கஷாயம் மற்றும் திராஷாதி கஷாயம் ஆகியவை 200 I.L. அளவில் ஆயுர்வேதக் கடைகளில் விற்பனையாகின்றன. ஒவ்வொரு கஷாயத்திலிருந்தும் 7.5 I.L. (சுமார் ஒன்றரை ஸ்பூன்) வீதம் எடுத்து 60 I.L. கொதித்து அடங்கிய தண்ணீரில் கலந்து காலை, மாலை, வெறும் வயிற்றில் சாப்பிடுவது நல்லது. மலச்சிக்கல், வயிற்றில் எரிச்சல் இல்லாதிருக்க அவிபத்திரகர சூர்ணம், 2.5 கிராம் அளவில் எடுத்து இளநீர் அல்லது பாலுடன் கலந்து காலை, மாலை, இரவு உணவிற்கு ஒரு மணி நேரம் முன்பாகச் சாப்பிடுவது நல்ல பலனைத் தரும். மதிய உணவிற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக விதார்யாதி கிருதம் 2.5 I.L எடுத்து அரிசி எடை சங்குபஸ்பம் குழைத்துச் சாப்பிடவும். தனி

நெல்லிக்காய் சூர்ணம் 3-6 கிராம் 3 வேளை உணவு சாப்பிட்டவுடன் சுத்தமான தண்ணீருடன் சாப்பிடவும்.