ஆயுர் வேதம்
இயற்கை உபாதை
வெகுதூரப் பயணங்களை இன்று நம்மால் பேருந்தில் கூட செய்ய முடிகிறது. பயணத்தில் களைப்பை அறியாமலிருப்பதற்கு Push Back சீட் வசதியுடன் Hitech பஸ்களும் இரவில் செல்வதால் ரயிலில் பயணம் செய்ய டிக்கட் கிடைக்காதபோது அதுபோலுள்ள பஸ்களில் செல்கிறோம். இயற்கை உபாதைகளான மலம் மற்றும் சிறுநீர் ஆகியவை வெளியில் வர உணர்ச்சி உண்டான சமயத்தில் பயணத்தின் நடுவே உடனடியாக வெளியேற்ற முடியாமல் அவதியுற வேண்டியுள்ளது. அரசு விரைவுப் பேருந்தில் கண்டக்டரிடம் இயற்கை உபாதைகளை நீக்குவதற்காக கெஞ்ச வேண்டியுள்ளது. அவர் எரிந்து விழுகிறார். இதற்கு பயந்து பலபேர் மல மூத்திரங்களை அடக்கிக் கொள்கின்றனர். இப்படி அடக்கப்படும் இவைகளால் உடல் உபாதைகள் பெரும் வேதனைகளை அளிக்கின்றன. மறுநாள் காலை ஊர் போய்ச்சேர்ந்தாலும் மலம் சரியாக வெளியேறுவதில்லை. இதற்குக் காரணம் உணர்ச்சி உண்டான சமயத்தில் வெளிப்படுத்தாமல் அவைகளை அடக்கியதால் வந்த வினையாகும். மலத்தை அடக்குவதால் தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், புலன்களின் சோர்வு, வயிறு உப்புசம், அஜீர்ணம், ருசியின்மை, வாய்நாற்றம், குமட்டல், வாந்தி, சிறுநீர் கீழ்வாயுக்கள் பிரியாமல் கட்டுப்படுதல் போன்றவைகள் ஏற்படுகின்றன. மலச்சிக்கல் உண்டாகும் விஷத்தன்மை உடலில் ஊடுருவுவதால் உடனே உண்டாகக்கூடிய தொந்தரவுகள் இவை சிறுநீரை தடை செய்வதால் நாளடைவில் நீர்க்கட்டு, கல் அடைப்பு, மூட்டுகளில் வீக்கம், வலி, அடிவயிற்றுலிம் நீர்த்தாரையிலும் வலி, கீழ்க்குடலில் வாயுக்கட்டு, தலைவலி போன்ற நோய்களும் ஏற்படுகின்றன, ஆதலால் எந்த சமயத்திலும் சிறுநீரை அடக்கவே கூடாது. இவ்வகை உபத்திரவங்கள் ஒருநாள் மட்டும் அடக்கியதால் வருவதற்கில்லை என்றாலும் சுபாவத்திலேயே சிலருக்கு இயற்கை உபாதைகளை தடைசெய்யும் குணமிருந்தால் ஏற்படும்.
பஸ் பிரயாணம் முடிந்து காலையில் வீட்டுக்குச் சென்றவுடன் பல் தேய்த்து நாக்கை வழித்து முகம் அலம்பிய பிறகு ஒரு பெரிய டம்ளர் வெந்நீர் ஜலத்தை மெதுவாய் பருகவும், இரண்டு மணிநேரத்திற்குப் பறிகு இரண்டு பூவன் வாழைப்பழம் உருகிய நெய்யில் தோய்த்து சாப்பிட்டு ஒரு சிறிய டம்ளர் காய்ச்சிய பாலைக் குடிக்கவும். காபியை விரும்புவர் சிலர். அவர்கள் பாலில் சிறிது டிக்காக்ஷன் கலந்து சூடாகக் குடிக்கவும். காலைச் சிற்றுண்டி என்ற பெயரில் இட்லி, தோசை போன்ற மாவுப் பண்டங்களை தவிர்த்து காலை 10 மணிக்குள் சூடான சாதத்துடன் நெய் கலந்து பச்சைக் கறிகாய்கள், பருப்பு, ரசம், தண்ணீர் விட்டு விளாவிய மோர் சேர்த்து சாப்பிடலாம். மதியம் உண்ட உணவு நன்கு ஜெரித்தவுடன் ஆரஞ்சு, சாத்துக்குடி, திராட்சை அல்லது தக்காளி ஜுஸ் குடிக்கலாம். இளநீர் குடிப்பதும் மிகவும் நல்லது. இரவு உணவை அதிகம் தாமதிக்காமல் 7 முதல் 7.30 மணிக்குள் காலை வகை உணவுபோல சாப்பிட வேண்டும். ராத்திரி சாப்பாட்டில் புளி - புளிப்பு சேர்ந்த வஸ்து இல்லாதபடி பச்சைக் கறிகாய் கூட்டு சாதத்துடன் சாப்பிடலாம். பால் அன்னம் அல்லது விளாவிய மோர் சாதம் சாப்பிடவும் படுக்கும் முன் ஒரு டம்ளர் வெந்நீர் குடிக்கவும் புழுங்கலரிசி அன்னம், கோதுமை சப்பாத்தி ஆகியவை இரவில் சாப்பிடுவது உத்தமம். இவ்வகை உணவு பழக்கத்தினால் மலச்சிக்கல் ஏற்படாமல் உடலை பாதுகாக்கலாம்.
காரமான உணவுகளை தவிர்த்து இணிப்புப் பண்டங்களைச் சேர்த்து, பழவகைகள், பூசணிக்காய், பரங்கிப்பிஞ்ச, சுரக்காய், வெள்ளரிக்காய், வாழைத்தண்டு, உளுந்து, பயிறு. பால், மோர், கஞ்சிகள், இளநீர், தேங்காய், சுத்தமான ஜலம் இவைகளை உட்கொண்டால் சிறுநீர் தாராளமாய் சேர்ந்து சுகமாய் இறங்கும்.
அஷ்டாங்க சங்கிரஹம் என்னும் ஆயுர்வேத நூலில் சிறுநீர் வேகத்தை அடக்கும் துர்பழக்கம் உள்ளவருக்கு சிறிது நாட்களில், கழிக்கும்போது சிறுநீர் சிக்கிறத்தில் இறங்காமல் தங்கித் தங்கி மெதுவாய் இறங்கும் தொந்திரவு வந்துவிடும் என்றுகூறுகிறது. இந்த கெடுதியை போக்குவதற்கான எளிய வழிமுறையும் அந்நூல் எடுத்துரைக்கின்றனது, உருக்கின நெய்யை பசியின் அளவைப் பொருத்து ஆகாரத்திற்கு முன்பு ஒருதரம் குடித்து. அந்த ஆகாரம் ஜீரணமான உடன் திரும்புவம் முன் குடித்த நெய்யின் அளவை இருமடங்காக குடிக்க வேண்டும். சுத்தமான பசுவீன் நெய்யை இதற்காக உபயோகிக்கலாம், ஆயுர்வதே மருந்து கடைகளில் 'வஸ்த்யாமயாந்தகம்கிருதம்' என்றபெயரில் மூலிகைகள் இட்டு காய்ச்சிய நெய் கிடைக்ம். அது இந்த சிக்சை முறைக்கு உத்மமமான மருந்தாகும். ஒரு வார உபயோகத்தில் சிறுநீர் இறக்கம் சுத்தமாய் சீர்பட்டுவிடும்.
இயற்கை உபாதைகளை தடுக்கும் பழக்கத்தை நிறுத்த வேண்டும். சிறுநீரும் ஒருவகையில் மலக்கழிவுதான். அதனால் சிறுநீர் கழித்த பிறகு அதுவரும் பாதையின் துவாரத்தை குளிர்ந்த சுத்தமான தண்ணீர் விட்டு அலம்ப வேண்டும். சிறுநீர் துவாரத்தை அலம்பும் பழக்கம் இன்று வெகுவாக் குறைந்தவிட்டபடியால் பலவித நோய்கள் தாக்குவதற்கு காரணமாகிவிட்டது.