ஆயுர் வேதம் நால்பா மரம் ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை ஆகிய நான்கு பால் வடியும் மரங்களின் பட்டைகளை சேர்த்தால் அதற்க நால்பாமரம் என

ஆயுர் வேதம்

நால்பா மரம்

ஆலம்பட்டை, அரசம்பட்டை, அத்திப்பட்டை, இத்திப்பட்டை ஆகிய நான்கு பால் வடியும் மரங்களின் பட்டைகளை சேர்த்தால் அதற்க நால்பாமரம் என்று பெயர். நால்பா மரப்பட்டை கஷாயம் நாட்பட்ட சிரங்கு, அதிலிருந்து வடியும் சீழ் கெட்ட ரத்தம், கிருமிகள் ஆகியவைகளில் சிறிது சூடாக கஷாயத்தை விட்டு தொடர்ந்து சில நாட்களுக்கு அலம்பி வந்தால் மறைந்துவிடும். சிரங்கும் நன்கு வறண்டு காய்ந்து விடும். இந்த பட்டைகளை தூளாக்கி சிரங்குகளில் தூவினால் சிறந்த Antiseptic மற்றும் Anti Inflamatory ஆகவும் பயன்படும். நால்பாமராதி தைலம் இதே போன்ற குணத்தைக் கொண்டது. இந்த நான்கு மரங்களை பற்றிய விபரங்களை காண்போம்.

1. ஆலமரம் - Ficus benghalensis : English Banyan. Hindi : Bat, Bargad. Malayalam : Peral, Vatah, Telugu : peddamarri, Tamil : ஆலமரம், பேரால்.

கபபித்தஹரோ வ்ருண்ய சம்க்ராஹி சகஷாயக :1

சீதவீர்யோ வட சஸ்தோ யோனிதோஷேஷ§ யோஷிதாம் 11

-மதனாதி நிகண்டு.

கபபித்த தோஷங்களை குறைக்கும். புண்ணை ஆற்றும். மலக்கட்டை ஏற்படுத்தும். சிறிது துவர்ப்புச் சுவை உடையது. குளிர்ச்சியானது. யோனியிலுள்ள நோய்களை நீக்கும்.

பிரயோகம்

1. கபபித்த நோய்களில் நல்ல மருந்தாகும்.

2. ஆலமரத்தின் பால் - புண், அடி, பித்தவெடிப்பு, பூட்டுகளில் வரும் வீக்கம், தொடையிடுக்கு வீக்கம், ஆகியவற்றில் பூச்சு இடுதல் மூலம் நீங்கி விடும். காதிலிருந்து வடியும் சீழ், நீர் மற்றும் பல்வலியிலும் பால் பயன்படுத்தலாம். கண்களில் சிகப்பு, எரிச்சல், நீர்வடிதல், கட்டி மேலும் விந்துவில் ஏற்படும் நோய்களிலும் ஆலமரத்தின் பால் நல்ல பலனைத் தரும். தோல்வியாதி, புண் இவைகளில் ஆலம்விழுதை நன்கு மைபோல் தண்ணீர் விட்டு அரைத்து பற்று இடுதல் மூலம் நோய்களை நீக்கும்.

3. வாந்தி, பேதி, ரத்தபேதி, கபத்துடன் சிறிது சிறிதாக பலமுறை முக்கலுடன் பேதியில் வெளியாகும். ஆலம் விழுது, பட்டை கஷாயம் குடித்தல் நலம் தரும்.

4. தோலின் நிற மாற்றம், ரத்தத்தில் ஏற்படும் நோய்களில் நல்ல மருந்தாகும்.

5. கர்ப்பம் Abortion ஆகாமலிருக்க ஆலமொட்டுகள் (பூ) பாலில் அரைத்து சாப்பிடுதல் நல்லது.

6. ஆலம்பட்டை உடலில் ஏற்படும் எரிச்சல், ரத்தக்கசிவு, பேதி, சர்க்கரை வியாதி, புண், சிரங்கு, வெள்ளைபடுதல் போன்றவற்றில் கஷாயம் காய்ச்சி

குடித்தால் நீங்கிவிடும்.

அரசம்பட்டை Ficus religiosa.

English : Peepal tree, Sacred fig. Hindi : Pippal, Pipli. Malayalam : Aswaththam, Arayal. Sanskrit : Pippalah, Asvatthah. Tamil : (அரசு, அசுவத்தம்) .

பிப்பலோ துர்ஜர:சீத:பித்தஸ்லேஷ்ம வ்ரணாஸ்ரஜித் 1

குருஸ்துவரகோ ரூக்க்ஷே£ வர்ண்யோ யோனிவிஷோதன:11

-பாவ பிரகாச

ஜீர்ணம் செய்வதற்கு கடினமானது. பித்த கபங்களால் உண்டான சிரங்கு, ரக்த நோய்களை நீக்கவல்லது, பளு, கனமானது. சிறிது துவர்ப்புச் சுவையுடையது. வறட்சியை ஏற்படுத்தும். நிறத்தைத் தரவல்லது பெண்களுக்கு ஏற்படும் யோனி நோய்களை நீக்கி சுத்தம் செய்யக்கூடியது.

பிரயோகம்

1. கப பித்தங்களை குறைக்கும்.

2. நிறம் தரும், புண்ணை ஆற்றும், வலியை நீக்கும், வீக்கம் வடியும், ரத்தத்தை சுத்தப்படுத்தும்.

3. பட்டை நீர் ஓட்டத்தை நிறுத்தும் (உடலில்) பழுத்து பழம் இனிப்பு சுவை கொண்டது. உடகொள்ளுவதால் எண்ணெய்ப் பசையை உடலில் ஏற்படுத்தும். குடல் வாயுவை கீழ் நோக்கிச் செலுத்தும். மலத்தை சுகமாக கழியச் செய்யும்.

4. தோலின் நிற மாற்றத்தில் மொட்டுகளை பாலில் அரைத்து பற்று இடலாம். பட்டையை தூள் செய்து பண்ணிவிடலாம். அரசமரத்தின் பால் வலி, விக்கம், ரத்தக் கசிவை நீக்கும். புண்வீக்கம், பௌத்திரம், வாய்ப்புண் இவற்றில பட்டை கஷாயம் நல்லபலனைத் தரும்.

5. வயிற்றுவலி, மலச்சிக்கலில் பழுத்த பழம் சாப்பிடுவதால் நீங்கும்.

6. வாத ரக்தம் என்ற பூட்டு வலி, ரக்தத்தின் கேட்டினால் உண்டாகும். நோய்களாலும் பட்டை கஷாயம் தேன் சேர்த்து சாப்பிடுவதால் குணமாகும். ரத்த வாந்தி, ரத்த பேதியில் பட்டை, பழம் ஆகியவை பயன்படும். பட்டை கஷாயம் வறட்டு இருமலிலும் காயை தூள் செய்து தேனுடன் மூச்சிரைப்பு நோயிலும் பயன்படுத்தலாம். ஆண்மைக்கு காய், வேர், பட்டை மற்றும் மொட்டு இட்டு காய்ச்சிய பாலில் சர்க்கரை, தேன் கலந்து சாப்பிடுதல் நலம் தரும்.

7. சர்க்கரை வியாதியில் பட்டை மற்றும் காய் உபயோகப்படுகின்றன.

'போதி த்ரும கஷாயந்து பிபேத்தம் மதுனா ஸஹ 1

வாதரக்தம் ஜயத்யாசு த்ரிதோஷமபி தாருணம் 11

(29) சரகர்.

3. அத்தி Ficus racemosa.

English : Country fig. Hindi : Gutar, Umar. Malayalam : Atti. Sanskrit : Udumbarah, Sadaphalah. Tamil : (அத்தி)

உதும்பரோ ஹிமோ ரூக்க்ஷே£ குரு:பித்தகபாஸ்ரஜித் 1

மதுரஸ்துவரோ வர்ண்யோ வ்ரணசோதனரோபண:11

பாவ ப்ராகச

அத்தி குளிர்ச்சியானது, வறட்சி, குருவானது. பித்தம், கபம், ரக்த நோய்களை நீக்கவல்லது. இனிப்பு, துவர்ப்பு சுவையானது. நிறத்தை அளிக்கும். புண்ணை சுத்தப்படுத்தி ஆற்றிவிடும்.


பிரயோகம்

1. வீக்கம், வலி, புண் ஆகியவற்றில் அத்திப்பால் பூச்சு பலன் தரும். இலைக் கஷாயம் புண் அலம்பவும், வாய்புண் கொப்பளிக்கவும் சிறந்தது.

2. ரத்த பேதியிலும், முக்கலுடன் கூடிய கப வாதபேதி மற்றும் உண்ட உணவு சரியாக ஜெரிக்காமல் மலத்துடன் வெளியேறும் நிலையில் அத்திப்பட்டை கஷாயம் குடித்தல் நல்லது. குழந்தைகளின் வயிற்றோட்டத்திலும், பல் முளைக்கும் போதும் உள்ள தொந்திரவுகளில் அத்திப்பால் நல்ல மருந்தாகும்.

3. மாதவிடாயில் அதிக ரக்தப் பெருக்கு, வெள்ளைபடுதலிலும் அத்திப்பட்டை கஷாயம் நல்ல பலனைத்தரும். கர்ப்ப போஷணைக்கும் நல்லது.

4. சர்க்கரை வியாதியில் பட்டை கஷாயம், பழுத்த பழம் பயன்தருகின்றன.

பழுத்த பழம் உண்பதால் உடல் எரிச்சல் அடங்கும்.

'ஒளதும்பரம் கஷாயம் ஸ்யாத பக்வம்து மதுரம் ஹிமம் 1

கிருமிஹ்ருத் ரக்தபித்தக்னம் மூர்ச்சாதாஹ த்ருஷாபஹம் 11

- தன்வந்தரி நிகண்டு.

4. இத்தி Ficus microcarpa

Hindi : Kamarup. Malayalam : Itti. Sanskrit : Plaksah. Tamil : இத்தி, இச்சி.

'ப்ளக் ஷ:கஷாய:சிசிரோ வ்ருணயோனி கதாபஹ :1

தாஹ பித்தகபாஸ்ரக்ன:சோபஹா ரக்தபித்தஹ்ருத் 11

-பாவ பிராகச :

இத்தி துவர்ப்பானது. குளிர்ச்சியானது. புண்ணை ஆற்றும். பெண்களின் பிறப்பு உறுப்பு நோய்களை நீக்கும். எரிச்சல், பித்த கப ரக்த நோய்களை போக்கும். வீக்கத்தை வடிக்கும். ரக்த பித்த நோயை இல்லாதாக்கும்.

பிரயோகம்

1. ரத்தம் வடிதல், வீக்கம், தோல் அரிப்பு மற்றும் புண் இவற்றில் மரப்பட்டை தூள் அல்லது பற்று இடுதல் நலம் தரும். வாய்ப்புண்ணில் மரப்பட்டை கஷாயம் வாய் கொப்பளித்தல் நலம்.

2. மயக்கம், உளறல், தலைச்சுற்றல் போன்ற மானசிக வியாதியில் மரப்பட்டை

கஷாயம் குணம் தரும்.

3. பேதி, முக்கலுடன் கூடிய கப வாயு கழிச்சல், ரத்த பித்தம், ரக்த நோய்களிலும் அத்திமரப்பட்டை கஷாயம் சிறந்தது.

4. மாதவிடாயில் ஏற்படும் அதிக ரக்தப் பெருக்கு, வெள்ளை படுதல் ஆகியவற்றிலும் பட்டை கஷாயம் உபயோகிக்க பலன் தரும்.

5. சர்க்கரை வியாதியில் பட்டை கஷாயம் குடித்தல் நல்லது. உடல் எரிச்சலை அடக்கும்.

ந்யக்ரோதோதும் பராஸ்வத்த ப்ளக்க்ஷ£ணாம் பல்லவாத்வச:1

கஷாயா:சீதளா:பத்யா ரக்த பித்தாதிஸாரிணாம் 11

-ஹ்ருதயப்ரிய :

நால்பாமரப்பட்டை துவர்ப்பு, குளிர்ச்சி, உடலுக்கு இதமானது. ரக்த பித்தங்களால் ஏற்படும் பேதியை கட்டுப்படுத்தும்.

அஷ்டாங்க சங்க்ரஹம் என்னும் ஆயுர்வதே நூலில் கீழ்காணும் குறிப்பு காணப்படுகிறது.

'கருங்காலி, நால்பாமரப்பட்டை, கருவலேம்பட்டை இவற்றின் கஷாயத்தினால் வாய் கொப்பளித்தால், வாயில் அருவருப்பு, ருசியின்மை, அழுக்கு, துர்நாற்றம், நீர்வடிதல் இவைகளெல்லாம் நீங்கும் சளி, இருமல், தொண்டை வலி இவற்றுடன் ஒருவர் மருத்துவரிடம் சென்றால்

Throat infection என்று மருத்துவர் கூறுகிறார். இதுபோன்ற நிலையில் மேல்குறிப்பிட்ட பட்டை கஷாயம் வாய்கொப்பளிக்க உபயோகித்தால் வாய் அழுக்கு, தொண்டை வலி நீங்க நல்ல மருந்தாகும்.

மேலும் விபரங்களுக்கு, தொடர்பு கொள்க:
- ஸ்ரீ ஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை, நசரத்பேட்டை-602 103.
Tel : (044) 26272162, 26491823, Email: sjcac@vsnl.net