Dasha Danas & Pancha Danas

श्रीगुरुभ्यो नमः
தசதானம், பஞ்சதானம்
Dasha Danas & Pancha Danas
दशदानानि
தசதானம்
गोभूतिल हिरण्याज्य वस्त्र धान्यगुडानि च ।
रौप्यं लवणमित्याहुर्- दशदानानि पण्डिताः ॥
கோபூதில ஹிரண்யாஜ்ய வஸ்த்ர தாந்யகுடாநி ச |
ரௌப்யம் லவணமித்யாஹுர்- தஶதாநாநி பண்டிதாஃ ||

தசதானங்கள் என்பவை, கோ (பசுமாடு), பூமி, எள், பொன், நெய், வஸ்திரம், தான்யம், வெல்லம், வெள்ளி, உப்பு என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள்.
Dasa danani - Ten Danas
The ten Danas (ritual items of charity) are cow, land, sesame, gold, ghee, cloth, foodgrain, jiggery, silver and salt, so say scholars.

गोदानम्
கோதானம்
यज्ञसाधनभूता या विश्वस्य अघप्रणाशिनी ।
विश्वरूपधरो देवः प्रीयतां अनया गवा ॥
गवामङ्गेषु तिष्ठन्ति भुवनानि चतुर्दश ।
तस्मादस्याः प्रदानेन अतः शान्तिं प्रयच्छ मे ॥
इमाम् गां सवत्सां सदोहपात्रां (इदं गोप्रतिनिधि नालिकेरं) सदक्षिणाकं सतांबूलं साम्बशिवस्वरूपाय ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।

யஜ்ஞஸாதநபூதா யா விஶ்வஸ்ய அகப்ரணாஶிநீ |
விஶ்வரூபதரோ தேவஃ ப்ரீயதாம் அநயா கவா ||
கவாமங்கேஷு திஷ்டந்தி புவநாநி சதுர்தஶ |
தஸ்மாதஸ்யாஃ ப்ரதாநேந அதஃ ஶாந்திம் ப்ரயச்ச மே ||
இமாம் காம் ஸவத்ஸாம் ஸதோஹபாத்ராம் (இதம் கோப்ரதிநிதி நாலிகேரம்) ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ஸாம்பஶிவஸ்வரூபாய ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |

இந்த பசுமாடு யக்ஞம் செய்ய ஸாதனமாக இருக்கின்றாள். (பால், வெண்ணெய், நெய் என்று யக்ஞத்திற்கு வேண்டிய ஸாதனங்களைத் தருகின்றாள்). உலகமக்களின் பாவங்களை நாசம் செய்பவள். இந்த பசுவினால் உலகம் முழுவதும் வியாபித்து அதைத்தாங்குகின்ற தேவராகிய மகாவிஷ்ணு பிரீதி அடையட்டும்.
பசுவின் அங்கங்களில் பதினான்கு உலகங்களும் இருக்கின்றன. ஆகையால் இந்த பசுவை தானம் செய்வதால் எனக்கு மனச்சாந்தியை அருளுவீராக.
இந்த கன்றுடன்கூடிய பசுவை, பால் கறக்கும் பாத்திரத்துடன் (அல்லது கோவிற்கு பிரதிநிதியாக இந்த மட்டைத் தேங்காயை) தக்ஷிணை மற்றும் தாம்பூலத்துடன், ஸாம்பசிவ ஸ்வரூபமாகிய பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.

Godanam
Cow is the means of performing Yagna. (She provides milk, butter, ghee etc. required for Yagna). She destroys the sins of the world. May Sri Mahavishnu, the Deva who pervades and sustains the whole world, be pleased by this cow.
All the fourteen worlds reside in the limbs of cow. Hence by giving Dana of this cow, may you bestow inner peace on me.
I am giving this Cow (Go), with calf, together with the vessel used for milking the cow (or this whole coconut in lieu of cow), with Dakshina and Tambula to you, the brahmana of the form of Sambasiva; this is no more mine.

 

भूदानम्
பூதானம்
सर्वेषां आश्रया भूमिः वराहेण समुद्धृता ।
अनन्तसस्यफलदा अतः शान्तिं प्रयच्छ मे ॥
यस्यां रोहन्ति बीजानि काले चैव महीतले ।
त्वत्प्रसादाच्च सफलाः मम सन्तु मनोरथाः ॥
षष्टिवर्षसहस्रस्य परिमित स्वर्गे शिवपर निवासकामः सर्वपापक्षयकामः इमां भूमिं बहुसस्यप्रदां (इयं भूप्रतिनिधि चन्दनकाष्ठं) विष्णुदैवत्यां सदक्षिणाकां सतांबूलां ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।

ஸர்வேஷாம் ஆஶ்ரயா  பூமிஃ வராஹேண ஸமுத்ருதா |
அநந்தஸஸ்யபலதா அதஃ ஶாந்திம் ப்ரயச்ச மே ||
யஸ்யாம் ரோஹந்தி பீஜாநி காலே சைவ மஹீதலே |
த்வத்ப்ரஸாதாச்ச ஸபலாஃ மம ஸந்து மநோரதாஃ ||
ஷஷ்டிவர்ஷஸஹஸ்ரஸ்ய பரிமித ஸ்வர்கே ஶிவபர நிவாஸகாமஃ ஸர்வபாபக்ஷயகாமஃ இமாம் பூமிம் பஹுஸஸ்யப்ரதாம் (இயம் பூப்ரதிநிதி சந்தநகாஷ்டம்) விஷ்ணுதைவத்யாம் ஸதக்ஷிணாகாம் ஸதாம்பூலாம் ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |

வராஹஸ்வாமியினால் ஸமுத்திரத்திலிருந்து நன்கு உத்தாரணம் செய்யப்பட்ட இந்த பூமி எல்லா ஜீவராசிகளுக்கும் புகலிடம். ஏராளமான பயிர்களையும், பழங்களையும் அருள்பவள். ஆகையால் இந்த பூமியை தானம் செய்வதால் எனக்கு மனச்சாந்தியை அருளுவீராக.
இந்த பூமியில் காலத்தில் விதைகள் பயிர்களாக வளர்கின்றன. உன் அருளினால் என் மனோரதங்கள் நிறைவடையட்டும்.
60000 வருஷங்கள் மங்களமான ஸ்வர்க்கத்தில் வசிக்கவும், எல்லா பாவங்களையும் போக்கவும் விரும்பும் நான், விஷ்ணுபகவானுக்கு உகந்த, இந்த பயிர்வளம் நிறைந்த பூமியை (அல்லது இந்த பூமியின் பிரதிநிதியாக சந்தனக்கட்டையை) தக்ஷிணை மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.

Bhudanam
This earth, well brought out of the ocean by Sri Varaha, is the refuge of all beings. She grants profuse foodcrops and fruits. Hence by giving Dana of this land, may you grant me inner peace of mind.
Seeds grow into foodcrops in due time on this earth. May my desires be fulfilled by your grace.
Desirous of residing in the auspicious Swarga for 60000 years and getting rid of all my sins, I give in Dana this Land (Bhu) fertile with foodcrops (or this piece of sandalwood in lieu of land), pleasing to Bhagavan Vishnu, with Dakshina and Tambula to you, brahmana,; this is no more mine.

 

तिलदानम्
திலதானம்
तिलाः पापहरा नित्यं विष्णोर्देहसमुद्भवाः ।
तिलदानात् असह्यं मे पापं नाशय केशव ॥

திலாஃ பாபஹரா நித்யம் விஷ்ணோர்தேஹஸமுத்பவாஃ |
திலதாநாத் அஸஹ்யம் மே பாபம் நாஶய கேஶவ ||

எள் என்பது நித்தியமானது, பாவத்தைப்போக்குவது; விஷ்ணுபகவானின் தேகத்திலிருந்து உண்டானது. கேசவா, தில (எள்) தானத்தினால் என்னுடைய தாங்கமுடியாத பாவத்தை நாசம் செய்வீராக.
இந்த மந்திரத்துடன் எள்ளை ஒரு தாமிரபாத்திரத்தில் போட்டுக் கொடுக்கவும்.

Tiladanam
Sesame is eternal, destroyer of sins, born of the body of Bhagavan Vishnu. Kesava, may you destroy my unbearable sin by this Dana of sesame.
With chant of this mantra, give the sesame (Tila) in a copper vessel.

 

हिरण्यदानम्
ஹிரண்யதானம்
हिरण्यगर्भगर्भस्थं हेमबीजं विभावसोः ।
अनन्तपुण्यफलदं अतः शान्तिं प्रयच्छ मे ॥
समस्तपापक्षयकामः इदं हिरण्यं अग्निदैवत्यं  सदक्षिणाकं सतांबूलं ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।

ஹிரண்யகர்பகர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோஃ |
அநந்தபுண்யபலதம் அதஃ ஶாந்திம் ப்ரயச்ச மே ||
ஸமஸ்தபாபக்ஷயகாமஃ இதம் ஹிரண்யம் அக்நிதைவத்யம்  ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |

ஹிரண்யகர்ப்பரின் (பிரம்மதேவரின்) கர்ப்பத்தில் உள்ள பொன்மயமான ஒளிவீசும் பரமாத்மாவின் இவ்விதையை, எல்லையற்ற பலனை அருளும் இதனை நான் தானம் செய்வதால் எனக்கு மனச்சாந்தியை அருளுவீராக.
எல்லா பாவங்களையும் போக்க விரும்பும் நான், அக்னிபகவானுக்கு உகந்த இப் பொன்னை,  தக்ஷிணை மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.

Hiranyadanam
By giving Dana of this luminous golden seed of Paramatma situated in the womb of Hiranyagarbha (Brahmadeva), which grants limitless fruits, may you bestow on me inner peace.
Desirous of getting rid of all my sins, I am giving in Dana this Gold (Hiranya), which is pleasing to Bhagavan Agni, with Dakshina and Tambula to you, brahmana; this is no more mine.

 

आज्यदानम्
ஆஜ்யதானம்
कामधेनोः समुद्भूतं सर्वक्रतुषु संस्थितम् ।
देवानामाज्यमाहारं अतः शान्तिं प्रयच्छ मे ॥
इदं आज्यं सदक्षिणाकं सपात्रं विष्णुदैवत्यं समस्तपापक्षयकामः ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।

காமதேநோஃ ஸமுத்பூதம் ஸர்வக்ரதுஷு ஸம்ஸ்திதம் |
தேவாநாமாஜ்யமாஹாரம் அதஃ ஶாந்திம் ப்ரயச்ச மே ||
இதம் ஆஜ்யம் ஸதக்ஷிணாகம் ஸபாத்ரம் விஷ்ணுதைவத்யம் ஸமஸ்தபாபக்ஷயகாமஃ ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |

நெய் காமதேனுவிடமிருந்து உண்டானது, எல்லா யாகங்களிலும் நிலைநிற்பது, தேவர்களின் உணவு. இதனை நான் தானம் செய்வதால் எனக்கு மனச்சாந்தியை அருளுவீராக.
எல்லா பாவங்களையும் போக்க விரும்பும் நான், விஷ்ணுபகவானுக்கு உகந்த இந்த நெய்யினை, தக்ஷிணை, பாத்திரம் மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.

Ajyadanam
Ghee was born of Kamadhenu, is established in all Yagas, and is the food of Devas. Hence by giving Dana of this Ghee, may you grant me inner peace of mind.
Desirous of getting rid of all my sins, I am giving in Dana this Ghee (Ajya), which is pleasing to Bhagavan Vishnu, with Dakshina, vessel and Tambula to you, brahmana; this is no more mine.

 

वस्त्रदानम्
வஸ்திரதானம்
शीतवातोष्णसंत्राणं लज्जायाः रक्षणं परम् ।
देहालङ्करणं वस्त्रं अतः शान्तिं प्रयच्छ मे ॥
पूर्णायुष्कामः इदं वस्त्रं सदक्षिणाकं सर्वदैवत्यं ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।

ஶீதவாதோஷ்ணஸந்த்ராணம் லஜ்ஜாயாஃ ரக்ஷணம் பரம் |
தேஹாலங்கரணம் வஸ்த்ரம் அதஃ ஶாந்திம் ப்ரயச்ச மே ||
பூர்ணாயுஷ்காமஃ இதம் வஸ்த்ரம் ஸதக்ஷிணாகம் ஸர்வதைவத்யம் ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |

வஸ்திரம் குளிர், காற்று, வெப்பம் ஆகியவற்றிலிருந்து காப்பது, லஜ்ஜையை (வெட்கத்தை) காப்பதில் சிறந்தது, தேகத்திற்கு அலங்காரமாக இருப்பது. இதனை நான் தானம் செய்வதால் எனக்கு மனச்சாந்தியை அருளுவீராக.
பூர்ணமான ஆயுளை விரும்பும் நான், எல்லா தெய்வங்களுக்கும் உகந்த இந்த வஸ்திரத்தை, தக்ஷிணை மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.

Vastradanam
Cloth protects the wearer from cold, wind and heat; the best in protecting shame; it serves as adornment for the body. Hence by giving Dana of this cloth, may you grant me inner peace of mind.
Desirous of full span of life, I am giving in Dana this Cloth (Vastra), which is pleasing to all Devas, with Dakshina and Tambula to you, brahmana; this is no more mine.

 

धान्यदानम्
தான்யதானம்
धन्यं करोषि दातारं इह लोके परत्र च ।
प्राणिनां जीवनं धान्यं अतः शान्तिं प्रयच्छ मे ॥
समस्तपापक्षयकामः इदं धान्यं अग्निदैवत्यं सदक्षिणाकं सतांबूलं ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।

தந்யம் கரோஷி தாதாரம் இஹ லோகே பரத்ர ச |
ப்ராணிநாம் ஜீவநம் தாந்யம் அதஃ ஶாந்திம் ப்ரயச்ச மே ||
ஸமஸ்தபாபக்ஷயகாமஃ இதம் தாந்யம் அக்நிதைவத்யம் ஸதக்ஷிணாகம் ஸதாம்பூலம் ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |

தான்யமே, நீ உன்னை தானம் செய்பவனை இவ்வுலகிலும், மறுஉலகிலும் புண்ணியவானாக  ஆக்குகிறாய். தான்யம் பிராணிகளுக்கு ஜீவனாதாரம். இதனை நான் தானம் செய்வதால் எனக்கு மனச்சாந்தியை அருளுவீராக.
எல்லா பாவங்களையும் போக்க விரும்பும் நான், விஷ்ணுபகவானுக்கு உகந்த இந்த தான்யத்தினை, தக்ஷிணை, பாத்திரம் மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.

Dhanyadanam
O Foodgrain, you render the donor of you into a meritorious person in this world and the next. Foodgrain is the very foundation of life of all beings. Hence by giving Dana of this Foodgrain, may you grant me inner peace of mind.
Desirous of getting rid of all my sins, I am giving in Dana this Dhanya (Foodgrain), which is pleasing to Bhagavan Vishnu, with Dakshina and Tambula to you, brahmana; this is no more mine.

 

गुडदानम्
குடதானம்
गुडमिक्षुरसोद्भूतं मन्त्राणां प्रणवो यथा ।
दानेनानेन मे तस्य परा लक्ष्मीः स्थिरा गृहे ॥
समस्तपापक्षयपूर्वकं गृहे लक्ष्म्याः स्थैर्यसिद्धये इमं गुडं रसवर्यं सदक्षिणं साम्बशिवप्रीतिं कामयमानः वरुणदैवत्यं ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।

குடமிக்ஷுரஸோத்பூதம் மந்த்ராணாம் ப்ரணவோ யதா |
தாநேநாநேந மே தஸ்ய பரா லக்ஷ்மீஃ ஸ்திரா க்ருஹே ||
ஸமஸ்தபாபக்ஷயபூர்வகம் க்ருஹே லக்ஷ்ம்யாஃ ஸ்தைர்யஸித்தயே இமம் குடம் ரஸவர்யம் ஸதக்ஷிணம் ஸாம்பஶிவப்ரீதிம் காமயமாநஃ வருணதைவத்யம் ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |

வெல்லம் கரும்பின் ரஸத்திலிருந்து உண்டானது. மந்திரங்களில் பிரணவம் (ஓங்காரம்) எவ்வாறோ. (அவ்வாறு கரும்பினுள்ளே ஒளிந்திருந்து சுவையை அளிப்பது). இதனை தானம் செய்வதால் என்னுடைய கிருகத்தில் பராசக்தியான லக்ஷ்மிதேவி நிலைத்து நிற்பாளாக.
எல்லா பாவங்களையும் போக்கக்கூடிய, வருணபகவானுக்கு உகந்த  இந்த ரஸம்நிறைந்த வெல்லத்தினை, லக்ஷ்மிதேவி என் கிருகத்தில் நிலைத்துநிற்பதை வேண்டி, ஸாம்பசிவரின் பிரீதியை விரும்பும் நான் தக்ஷிணை மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.

Gudadanam
Jaggery is born of the essence of sugarcane. It is like the Pranava (Omkara) in mantras (Like Pranava, this jiggery is hidden inside sugarcane and gives it sweetness). By giving Danam of this Guda (Jaggery), may Parasakthi Devi Lakshmi reside steadily in my home.
Desirous of getting rid of all my sins, I am giving in Dana this Jaggery (Guda), full of sweetness, pleasing to Bhagavan Varuna, for the purpose of Devi Lakshmi’s steady abidance in my home, praying for the grace of Sri Sambasiva, with Dakshina and Tambula to you, brahmana; this is no more mine.

 

रौप्यदानम्
ரௌப்யதானம்
रुद्रनेत्रसमुद्भूतं रजतं पितृवल्लभम् ।
पितृप्रीतिकरं नित्यं अतः शान्तिं प्रयच्छ मे ॥
समस्तपापक्षयपूर्वकं शिवविष्णुपितृप्रीतिसिद्धये इदं रजतं पितृदैवत्यं सदक्षिणाकं ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।

ருத்ரநேத்ரஸமுத்பூதம் ரஜதம் பித்ருவல்லபம் |
பித்ருப்ரீதிகரம் நித்யம் அதஃ ஶாந்திம் ப்ரயச்ச மே ||
ஸமஸ்தபாபக்ஷயபூர்வகம் ஶிவவிஷ்ணுபித்ருப்ரீதிஸித்தயே இதம் ரஜதம் பித்ருதைவத்யம் ஸதக்ஷிணாகம் ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |

 

வெள்ளி சிவபெருமானின் கண்ணிலிருந்து உண்டானது, பித்ருக்களுக்கு மிகவும் பிடித்தது. நித்தியமானது. பித்ருக்களின் பிரீதியை வழங்குவது. இதனை நான் தானம் செய்வதால் எனக்கு மனச்சாந்தியை அருளுவீராக.
எல்லா பாவங்களையும் போக்கக்கூடிய, பித்ருதெய்வத்துக்கு உகந்த இந்த வெள்ளியை, சிவன், விஷ்ணு மற்றும் பித்ருக்களின் பிரீதியை வேண்டி, நான் தக்ஷிணை மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.

Roupyadanam
Silver was born of the eyes of Sri Siva. It is dear to Pitrus, is eternal and grants the grace of Pitrus. Hence by giving Dana of this Silver, may you grant me inner peace of mind.
I am giving in Dana this Silver (Roupya), which destroys all sins and is pleasing to Pitru Devatas, for obtaining the grace of Siva, Vishnu and Pitrus, with Dakshina and Tambula to you, brahmana; this is no more mine.

 

 

लवणदानम्
லவணதானம்
यस्मात् अन्नरसाः सर्वे नोत्कृष्टा लवणं विना ।
शंभोः प्रीतिकरं यस्मात् अतः शान्तिं प्रयच्छ मे ॥
समस्तपापक्षयपूर्वकं शिवप्रीतिसिद्धये इदं लवणं सर्वं रसप्रधानं सोमदैवत्यं सदक्षिणाकं सपात्रं ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।

யஸ்மாத் அந்நரஸாஃ ஸர்வே நோத்க்ருஷ்டா லவணம் விநா |
ஶம்போஃ ப்ரீதிகரம் யஸ்மாத் அதஃ ஶாந்திம் ப்ரயச்ச மே ||
ஸமஸ்தபாபக்ஷயபூர்வகம் ஶிவப்ரீதிஸித்தயே இதம் லவணம் ஸர்வம் ரஸப்ரதாநம் ஸோமதைவத்யம் ஸதக்ஷிணாகம் ஸபாத்ரம் ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |

எல்லா உணவுகளின் ருசியும் உப்பில்லாவிடில் கெட்டுவிடும். சிவபெருமானின் பிரீதியை வழங்குவது இந்த உப்பு. இதனை நான் தானம் செய்வதால் எனக்கு மனச்சாந்தியை அருளுவீராக.
எல்லா பாவங்களையும் போக்கக்கூடிய, ஸோமதெய்வத்துக்கு உகந்த இந்த ரஸம் நிறைந்த உப்பினை, சிவபெருமானின் பிரீதியை வேண்டி, நான் தக்ஷிணை, பாத்திரம் மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.

Lavanadanam
Without salt, the taste of all foods is lost. Salt gets us the grace of Sri Siva. Hence by giving Danam of this Salt, may you grant me inner peace of mind.
I am giving in Dana this Salt (Lavana), which destroys all sins and is pleasing to Soma Deva, for obtaining the grace of Siva, with Dakshina, vessel and Tambula to you, brahmana; this is no more mine.

 

पञ्चदानम्
பஞ்சதானம் – Panchadanam – Five Danas

दीपदानम्
தீபதானம்
परमात्मतनो दीप परमार्थप्रकाशक ।
आत्मानात्मविवेकं मे जनय त्वत्प्रसादतः ।
इमं दीपं सदक्षिणाकं अग्निदैवत्यं ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।

பரமாத்மதநோ தீப பரமார்த்தப்ரகாஶக |
ஆத்மாநாத்மவிவேகம் மே ஜநய த்வத்ப்ரஸாததஃ |
இமம் தீபம் ஸதக்ஷிணாகம் அக்நிதைவத்யம் ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |

தீபமே, உன் உருவமே பரமாத்மா; நீ பரமாத்மாவைப் பிரகாசப்படுத்துகிறாய். உன் அருளினால் ஆத்மா, அனாத்மா என்கிற விவேகத்தினை என்னுள் உண்டுபண்ணுவாயாக. (ஆத்மா என்றும் நிலையானது, எங்கும் பரவி நிற்பது. அனாத்மா தாற்காலிகமானது, இடம், பொருள், காலம் ஆகியவற்றால்  வரையறுக்கப்பட்டது).
அக்னிதெய்வத்துக்கு உகந்த இந்த தீபத்தினை நான் தக்ஷிணை மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.

Deepadanam
Deepa, your very form is Paramatma; you light up the Supreme goal. By your grace please generate in me the discrimination between Atma and Anatma. (Atma is eternal and all-pervasive. Anatma is transient and limited by time, space and object).
I am giving in Dana this Deepa (Lamp), which is pleasing to Bhagavan Agni, with Dakshina and Tambula to you, brahmana; this is no more mine.

 

पुस्तकदानम्
புஸ்தகதானம்
सर्वविद्यास्पदं ज्ञानकारणं विमलाक्षरम् ।
पुस्तकं संप्रयच्छामि प्रीता भवतु भारती ॥
इदं पुस्तकं सरस्वतीप्रीतिं कामयमानः ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।

ஸர்வவித்யாஸ்பதம் ஜ்ஞாநகாரணம் விமலாக்ஷரம் |
புஸ்தகம் ஸம்ப்ரயச்சாமி ப்ரீதா பவது பாரதீ ||
இதம் புஸ்தகம் ஸரஸ்வதீப்ரீதிம் காமயமாநஃ ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |

எல்லாவித்யைகளுக்கும் இருப்பிடமானதும், ஞானம் உண்டாகக் காரணமாவதும், சுத்தமான எளிதான அக்ஷரங்களாலானதும் ஆன இப்புத்தகத்தை அளிக்கிறேன். ஸரஸ்வதிதேவி என்னிடம் பிரீதி அடையட்டும்.

இந்த புத்தகத்தினை ஸரஸ்வதிதேவியின் பிரீதியைவேண்டி, நான் தக்ஷிணை மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.

Pustakadanam
I am giving this book, the abode of all knowledge and the source of Gnana, and which is composed of clear letters of alphabet. May Devi Saraswathi be pleased with me.
I am giving in Dana this Book (Pustaka) for obtaining the grace of Devi Saraswathi, with Dakshina and Tambula to you, brahmana; this is no more mine.

 

घण्टादानम्
கண்டாதானம்
घण्टा देवप्रिया नित्यं दैत्यत्रासकरी सदा ।
संप्रदानेन चैतस्यां विजयोऽस्तु सदा मम ॥
इमां घण्टां विष्णुदैवत्यां सदक्षिणाकां ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।

கண்டா தேவப்ரியா நித்யம் தைத்யத்ராஸகரீ ஸதா |
ஸம்ப்ரதாநேந சைதஸ்யாம் விஜயோஸ்து ஸதா மம ||
இமாம் கண்டாம் விஷ்ணுதைவத்யாம் ஸதக்ஷிணாகாம் ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |

மணி தேவர்களுக்குப் பிரியமானது; நித்தியமானது; எப்போதும் அசுரர்களைப் பயமுறுத்துவது.
விஷ்ணுபகவானுக்கு உகந்த இந்த மணியினை நான் தக்ஷிணை மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.

Ghantadanam
Bell is dear to Devas, is eternal, and always generates fear in Asuras.
I am giving in Dana this Ghanta (Bell), which is pleasing to Bhagavan Vishnu, with Dakshina and Tambula to you, brahmana; this is no more mine.

 

वस्त्रदानम्
வஸ்திரதானம்
शीतवातोष्णसंत्राणं लज्जायाः रक्षणं परम् ।
देहालङ्करणं वस्त्रं अतः शान्तिं प्रयच्छ मे ॥
समस्तपापक्षयकामः इदं वस्त्रं सदक्षिणाकं सर्वदैवत्यं ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।

ஶீதவாதோஷ்ணஸந்த்ராணம் லஜ்ஜாயாஃ ரக்ஷணம் பரம் |
தேஹாலங்கரணம் வஸ்த்ரம் அதஃ ஶாந்திம் ப்ரயச்ச மே ||
ஸமஸ்தபாபக்ஷயகாமஃ இதம் வஸ்த்ரம் ஸதக்ஷிணாகம் ஸர்வதைவத்யம் ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |

வஸ்திரம் குளிர், காற்று, வெப்பம் ஆகியவற்றிலிருந்து காப்பது, லஜ்ஜையை (வெட்கத்தை) காப்பதில் சிறந்தது, தேகத்திற்கு அலங்காரமாக இருப்பது. இதனை நான் தானம் செய்வதால் எனக்கு மனச்சாந்தியை அருளுவீராக.
எல்லா பாவங்களையும் போக்க விரும்பும் நான், எல்லா தெய்வங்களுக்கும் உகந்த இந்த வஸ்திரத்தை, தக்ஷிணை மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.

Vastradanam
Cloth protects the wearer from cold, wind and heat; the best in protecting shame; it serves as adornment for the body. Hence by giving Danam of this cloth, may you grant me inner peace of mind.
Desirous of getting rid of all sins, I am giving in Dana this Cloth (Vastra), which is pleasing to all Devas, with Dakshina and Tambula to you, brahmana; this is no more mine.

 

उदकुम्भदानम्
உதகும்பதானம்
ब्रह्मणा प्रथमं सृष्टाः अघमर्षणहेतवः ।
आपो युष्मत्प्रदानेन तृप्यन्तु मम देवताः ॥
इदं उदकुम्भं सदक्षिणाकं वरुणदैवत्यं ब्राह्मणाय तुभ्यमहं संप्रददे न मम ।

ப்ரஹ்மணா ப்ரதமம் ஸ்ருஷ்டாஃ அகமர்ஷணஹேதவஃ |
ஆபோ யுஷ்மத்ப்ரதாநேந த்ருப்யந்து மம தேவதாஃ ||
இதம் உதகும்பம் ஸதக்ஷிணாகம் வருணதைவத்யம் ப்ராஹ்மணாய துப்யமஹம் ஸம்ப்ரததே ந மம |

நீர்களே, நீங்கள் பிரம்மதேவனால் முதலில் ஸ்ருஷ்டிக்கப்பட்டீர்கள். ஜனங்களின் பாவங்களைப் போக்குவதில் காரணமாக உள்ளீர்கள். நீர்களைத் தானம் செய்வதால் தேவதைகள் என்னிடம் திருப்தியடையட்டும்.
வருணபகவானுக்கு உகந்த இந்த ஜலம் நிறைந்த குடத்தை, தக்ஷிணை மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணராகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.

Udakumbhadanam
Waters, you were created first by Brahmadeva. You are instrumental in destruction of sins. May Devatas be pleased with me by my giving Dana of Waters.
I am giving in Dana this Pot full of Waters (Udakumbha), which is pleasing to Bhagavan Varuna, with Dakshina and Tambula to you, brahmana; this is no more mine.

 

 

भूरिदानम्
பூரிதானம்
हिरण्यगर्भगर्भस्थं हेमबीजं विभावसोः ।
अनन्तपुण्यफलदं अतः शान्तिं प्रयच्छ मे ॥
अनुष्ठितस्य कर्मणः संपूर्णसाङ्गफलसिद्ध्यर्थं अवशिष्टदान प्रतिनिधित्वेन भूरिदक्षिणां ब्राह्मणेभ्यः संप्रददे न मम ।

ஹிரண்யகர்பகர்பஸ்தம் ஹேமபீஜம் விபாவஸோஃ |
அநந்தபுண்யபலதம் அதஃ ஶாந்திம் ப்ரயச்ச மே ||
அநுஷ்டிதஸ்ய கர்மணஃ ஸம்பூர்ணஸாங்கபலஸித்யர்த்தம் அவஶிஷ்டதாந ப்ரதிநிதித்வேந பூரிதக்ஷிணாம் ப்ராஹ்மணேப்யஃ ஸம்ப்ரததே ந மம |

ஹிரண்யகர்ப்பரின் (பிரம்மதேவரின்) கர்ப்பத்தில் உள்ள பொன்மயமான ஒளிவீசும் பரமாத்மாவின் இவ்விதையை, எல்லையற்ற பலனை அருளும் இதனை நான் தானம் செய்வதால் எனக்கு மனச்சாந்தியை அருளுவீராக.
அனுஷ்டானம் செய்யப்பட்ட இந்த கர்மா ஸம்பூர்ணமான, நிறைவான பலனைத் தரவேண்டி, மீதமிருக்கிற தானங்களுக்குப் பிரதிநிதியாக, இந்த  நிறைவான தக்ஷிணையை மற்றும் தாம்பூலத்துடன், பிராம்மணர்களாகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.

Bhuridanam
By giving Dana of this luminous golden seed of Paramatma situated in the womb of Hiranyagarbha (Brahmadeva), which grants limitless fruits, may you bestow on me inner peace.
For this Karma, which has been performed now, to grant full and complete fruit, I am giving this Bhuridana (plenty of cash) in lieu of balance Danas, with Dakshina and Tambula to you, brahmanas; this is no more mine.

 

फलदानम्
பலதானம்
फलं मनोरथफलं प्रददाति सदा नृणाम् ।
पुत्रपौत्राभिवृद्ध्यर्थं श्रेयः पुष्टिं प्रयच्छ मे ॥
अनुष्ठितस्य कर्मणः संपूर्णसाङ्गफलसिद्ध्यर्थं इमानि फलानि सताम्बूलानि सदक्षिणाकानि ब्राह्मणेभ्यः संप्रददे न मम ।

பலம் மநோரதபலம் ப்ரததாதி ஸதா ந்ருணாம் |
புத்ரபௌத்ராபிவ்ருத்யர்த்தம் ஶ்ரேயஃ புஷ்டிம் ப்ரயச்ச மே ||
அநுஷ்டிதஸ்ய கர்மணஃ ஸம்பூர்ணஸாங்கபலஸித்யர்த்தம் இமாநி பலாநி ஸதாம்பூலாநி ஸதக்ஷிணாகாநி ப்ராஹ்மணேப்யஃ ஸம்ப்ரததே ந மம |

பழம் எப்போதும் மக்களின் மனோரதங்களை நிறைவேற்றுகிறது. புத்திரர், பௌத்திரர் ஆகிய ஸந்ததி அபிவிருத்தியாகவேண்டியும், ஸ்ரேயஸ்ஸையும், புஷ்டியையும் எனக்கு அருள்வாயாக.
அனுஷ்டானம் செய்யப்பட்ட இந்த கர்மா ஸம்பூர்ணமான, நிறைவான பலனைத் தரவேண்டி, இந்த பழங்களை மற்றும் தாம்பூலம், தக்ஷிணையுடன், பிராம்மணர்களாகிய தங்களுக்கு அளிக்கிறேன். இனி இது என்னுடையதல்ல.

Phaladanam
Fruit always fulfills the desires of people. May you grant me growth of lineage of sons and grandsons, spiritual satisfaction and nourishment.

For this Karma, which has been performed now, to grant full and complete fruit, I am giving these Fruits (Phala), with Dakshina and Tambula to you, brahmanas; this is no more mine.

P. R. Kannan


More Books & Articles