श्रीगुर्वष्टकम् - Sri GURVASHTAKAM

॥ श्रीगुर्वष्टकम् ॥

Sri GURVASHTAKAM

1. श्रीगुरुं भगवत्पादं शरण्यं भक्तवत्सलम् ।

शिवं शिवकरं शुद्धमप्रमेयं नमाम्यहम् ॥

ஶ்ரீகுருவை, சரண்புகத்தக்கவரை, பக்தர்களிடம் அன்புமிகுந்தவரை, மங்களமானவரை, மங்களங்கள் செய்பவரை, பரிசுத்தமானவரை, அளவிடமுடியாதவரை, ஶ்ரீசங்கரபகவத்பாத ஆசாரியரை நான் நமஸ்கரிக்கிறேன்.

I prostrate to Sri Guru Sankara Bhagavatpada, worthy of surrender, who has great love for devotees, who is auspiciousness incarnate, who renders everything auspicious, and who is pure and immeasurable.

2. आश्रिताज्ञानतत्कार्यनाशकं देशिकोत्तमम् ।

चिन्मुद्रालङ्कृतकरं यतिराजं नमाम्यहम् ॥

அண்டியவர்களின் அக்ஞானத்தினால் எழும் காரியங்களை நாசம் செய்பவரை, குருஸ்ரேஷ்டரை, சின்முத்திரை அலங்கரிக்கும் கரங்கொண்டவரை, யதிகளின் அரசரை நான் நமஸ்கரிக்கிறேன்.

I prostrate to the greatest of Gurus, who destroys all acts arising from ignorance of those who surrender to him, who sports Chinmudra in his hand, and who is king among Yatis.

3. चतुर्भिश्चतुरैः शिष्यैः सेव्यमानपदाम्बुजम् ।

निरस्ताशेषसंसारं सदानन्दं नमाम्यहम् ॥

ஸமர்த்தர்களான நான்கு சிஷ்யர்களால் சேவிக்கப்படும் பாதத்தாமரைகளையுடையவரை, ஸம்ஸாரத்தினை முழுவதுமாக விலக்கியவரை, எப்போதும் ஆனந்தஸ்வரூபமாயுள்ளவரை நான் நமஸ்கரிக்கிறேன்.

I prostrate to the Guru, whose lotus feet are worshipped by four preeminent disciples, who has completely eliminated Samsara (the world of phenomenal experiences), and who is ever Bliss incarnate.

4. जगज्जन्मादिजनकं जगद्भ्रमनिवर्तकम् ।

नमन्मुक्तिप्रदातारं जगदीशं नमाम्यहम् ॥

ஜகத்தினை தோற்றுவித்தல் (காத்தல், ஸம்ஹாரம்) முதலியவற்றிற்குக் காரணமானவரை, ஜகத்தின் பிரமையை நிவர்த்திப்பவரை, வணங்குபவர்களுக்கு முக்தியளிப்பவரை, ஜகத்தின் ஈஸ்வரரை நான் நமஸ்கரிக்கிறேன்.

I prostrate to the Guru, who is the cause of appearance (sustenance, destruction) etc. of the universe, who removes the illusion of the universe, who is the bestower of Mukti (Liberation), and who is lord of the universe.

5. वीरासने समासीनं द्वैतखण्डनतत्परम् ।

अद्वैतस्थापनरतं सद्घनं तं नमाम्यहम् ॥

வீராஸனத்தில் அமர்ந்திருப்பவரை, த்வைதத்தினை கண்டிப்பதில் ஆர்வமுடையவரை, அத்வைதத்தினை ஸ்தாபிப்பதில் ஈடுபாடுடையவரை, ஸத்தே (எப்போதும் எக்காலத்தும் நிரந்தரமாக இருத்தல்) அடர்ந்த உருவானவரை, ஆசாரியரை நான் நமஸ்கரிக்கிறேன்.

I prostrate to the Guru, who is seated in Virasana, who is keen to condemn duality (dvaita), who is delighted in establishing non-duality (advaita), and who is Existence personified.

6. तरुणादित्यसङ्काशं पूर्णचन्द्रनिभाननम् ।

पूर्णानन्दमुनिश्रेष्ठं चिद्घनं तं नमाम्यहम् ॥

இளஞ்சூரியனின் ஒளிமிக்கவரை, பூர்ணசந்திரனையொத்த எழில்முகங்கொண்டவரை, பூர்ணானந்தஸ்வரூபமான முனிஸ்ரேஷ்டரை, சித்தே (ஞானசக்தியே) அடர்ந்த உருவானவரை, ஆசாரியரை நான் நமஸ்கரிக்கிறேன்.

I prostrate to the Guru, who is effulgent like the rising Sun, whose face is like full moon, who is the best among Munis, full of Bliss, and who is Chit (Awareness) personified.

7. वेदवेदान्ततत्त्वज्ञं सर्वज्ञं सर्वदेशिकम् ।

सर्वदं सच्चिदानन्दम् आनन्दघनमाश्रये ॥

வேதம், வேதாந்தம் இவற்றின் உண்மையறிந்தவரை, எல்லாவற்றையுமறிந்தவரை, எல்லோருக்கும் குருவானவரை, எல்லாம் அருளுபவரை, ஸத், சித், ஆனந்தஸ்வரூபரை, ஆனந்தமே அடர்ந்த உருவானவரை, ஆசாரியரை நான் சரண் புகுகிறேன்.

I take refuge in the Guru, who is the knower of the Truth of Veda and Vedanta, who is omniscient, who is the Guru of all, who grants everything, who is Sat, Chit, Ananda (Existence, Awareness, Bliss), and who is Bliss personified.

8. देहेन्द्रियगुणातीतं अनाद्यन्तमनामयम् ।

निष्क्रियं निष्कलं नित्यं निर्गुणं तमुपास्महे ॥

உடல், புலன்கள், குணங்கள் இவற்றிற்கப்பாற்பட்டவரை, ஆதி அந்தமற்றவரை, எந்தக்குறைபாடுமில்லாதவரை, செய்யவேண்டிய காரியமில்லாதவரை, பிரிவற்ற முழுமையானவரை, நித்தியரை, குணமற்றவரை ஆசாரியரை நான் நமஸ்கரிக்கிறேன்.

I adore the Guru, who is beyond body, sense organs and attributes, who has no beginning and end, who is free from disease, compulsive activity and attributes, and who is whole and eternal.

9. गुर्वष्टकमिदं यस्तु पठेन्नित्यमतन्द्रितः ।

तस्य प्रसन्नो भवति गुरुर्देशिकदेशिकः ॥

எவர் இந்த குர்வஷ்டகத்தை தினமும் சோம்பலின்றி படிப்பாரோ, அவரிடம் குருவிற்கெல்லாம் குருவான ஆதி சங்கராசாரியார் பிரீதியுடன் இருப்பார்.

The Guru of Gurus, Sri Adi Sankara Bhagavatpada, shall be pleased with one, who reads this Gurvashtakam every day attentively.

(From ‘Brahma Vidya’, Journal of Advaita Sabha)

Translated: P. R. Kannan


More Books & Articles