Advaita Sabha Sadas held

156th Advaita Sabha Sadas held
1,2,4 Aug. 2020

Shri Kanchi Kamakoti Mulamnaya Sarvajna Peetam

Advaita Sabha (est. 1894) – Vidvat Sadas #156

The Advaita Sabha was established in 1894 by the 66th Kanchi Kamakoti Peethadhipati Shri Chandrashekharendra Sarasvati Shankaracharya Swamigal VI who was well known as an erudite scholar and realized soul in Advaita Vedanta.

Since then, the goal of the Sabha which has been functioning for 126 years now has been to promote the learning and teaching of Advaita in the traditional way as well as to spread the message of Advaita among the public.

Towards this goal, the Sabha has been organizing Vidvat Sadas programmes since 1895. These are as per the traditional Vakyartha method fully in Samskritam. Scholars also give lectures on Advaita in regional languages Tamil and Malayalam for the general public.

With the blessings of our Kanchi Kamakoti Peethadhipati Shri Shankara Vijayendra Sarasvati Shankaracharya Swamigal, and in cognition of the prevailing conditions, the 156th Advaita Sabha Sadas was held online on 2020 August 1, 2, and 4, Saturday, Sunday and Tuesday.

The following scholars participated in the Sadas:

Mahamahopadhyaya Brahmashri Mullaivasal Krishnamurti Shastrigal
Mahamahopadhyaya Brahmashri Mani Dravida Shastrigal
Brahmashri Vijayaraghava Shastrigal
Brahmashri Nilabala Sharma
Brahmashri Ashvattha Narayana Avadhani
Brahmashri Aruna Avadhani
Brahmashri Shriramana Sharma
Vidvan Maheshvaran Nambudiri
Vidvan Vasudevan Nambudiri
Vidvan Krishnan Nambudiri

The sadas was broadcast live. It is available to view at the following internet addresses:

https://www.youtube.com/channel/UCVvY7L0mc38eTfj4LXg8w-w
https://facebook.com/Advaita-Sabha-2100846810244194
ஶ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடம்

அத்வைத ஸபா (ஸ்தாபிதம் 1894) – 156வது வித்வத் ஸதஸ்

அத்வைத வேதாந்தத்தில் சிறந்த அறிஞராகவும் அனுபூதியுள்ளவராகவும் திகழ்ந்த ஶ்ரீ காஞ்சீ காமகோடி பீடத்தின் 66வது பீடாதிபதிகளான ஶ்ரீ சந்த்ரஶேகரேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் (6) கல்யப்தம் 4996 ஜய ௵ (1894) ஸ்தாபித்ததே அத்வைத ஸபை.

அன்று முதல் 126 வருடங்களாக செயல்பட்டு வரும் இச்சபையின் நோக்கம் பாரம்பரிய முறையில் அத்வைதத்தைக் கற்கவும் கற்பிக்கவும் உதவி செய்வதும், பொதுமக்களிடையே அத்வைதத்தின் தத்துவத்தைப் பரப்புவதுமாக இருந்து வருகிறது.

இதற்காக அத்வைத ஸபை கல்யப்தம் 4997 மன்மத ௵ (1895) முதல் வித்வத் ஸதஸ்ஸுகளை நடத்துகிறது. ஸம்ப்ரதாய வாக்யார்த்த முறையில் ஸம்ஸ்க்ருதத்திலேயே இவை உள்ளன. மேலும் பொதுமக்களுக்காக வித்வான்கள் அத்வைதத்தைக் குறித்து தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய ப்ரதேச மொழிகளிலும் உபந்யாஸம் செய்கின்றனர்.

நமது காஞ்சீ காமகோடி பீடாதிபதிகளான ஶ்ரீ ஶங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதீ ஶங்கராசார்ய ஸ்வாமிகளின் அருளாசியுடன், மேலும் தற்சமயம் உள்ள நிலைகள் கருதி, 156வது அத்வைத ஸபா ஸதஸ்ஸானது நிகழும் ஶார்வரி ௵ ஆடி ௴ 17, 18, 20 ௳ சனி, ஞாயிறு, செவ்வாய் (2020 ஆகஸ்ட் 1, 2, 4) நாட்களன்று இணைய வழியாக நடந்தேறியது.

கீழ்க்கண்ட வித்வான்கள் ஸதஸ்ஸில் பங்கேற்றனர் -

மஹாமஹோபாத்யாய ப்ரஹ்மஶ்ரீ முல்லைவாசல் க்ருஷ்ணமூர்த்தி ஶாஸ்த்ரிகள்
மஹாமஹோபாத்யாய ப்ரஹ்மஶ்ரீ மணி த்ராவிட ஶாஸ்த்ரிகள்
ப்ரஹ்மஶ்ரீ விஜயராகவ ஶாஸ்த்ரிகள்
ப்ரஹ்மஶ்ரீ நீலபால ஶர்மா
ப்ரஹ்மஶ்ரீ அஶ்வத்த நாராயண அவதானி
ப்ரஹ்மஶ்ரீ அருண அவதானி
ப்ரஹ்மஶ்ரீ ஶ்ரீரமண ஶர்மா
வித்வான் மஹேஶ்வரன் நம்பூதிரி
வித்வான் வாஸுதேவன் நம்பூதிரி
வித்வான் க்ருஷ்ணன் நம்பூதிரி

ஸதஸ்ஸின் நேரலை ஒளிபரப்பு செய்யப்பட்டது. கீழ்க்கண்ட இணைய முகவரிகளில் காணலாம் -

https://www.youtube.com/channel/UCVvY7L0mc38eTfj4LXg8w-w
https://facebook.com/Advaita-Sabha-2100846810244194

-*-


Back to news page