Panchanga Sadas held

Annual Panchanga Sadas Held
24-26 July 2020

Vakya Siddhantham and Drik-Ganitham (or Drik- Suddham) are the two major principles followed to generate Panchangams (Almanacs). Practically these are two distinctly different means adopted to achieve the same end results of determining Thithi, Nakshatram, Yogam, Karanam etc besides the occurrence of eclipses etc. Based on such details, the calendar of events towards the observance of Vrathams, Festivals, Upakarma, Pradhosham, Tharpanam etc is charted out. The Dharma Sastra stipulates the norms towards the fixation of day and time elements for the observance of the afore-stated events. Further, glossaries like 'Vaidyanatha Deekshitham', 'Nirnaya Sindhu', 'Dharma Sindhu' etc act as supplement to the strictures provided in Dharma Sastra.

All these aspects bring forth, the essentiality of co-ordination, discussion and mutual interaction between the personnel who generate Panchangams of various hues on one side and the erudite scholars of Dharma Sastra on the other side. With this objective in mind, Sri Kanchi Kamakoti Peetam organizes 'Panchanga Sadas', an annual conference, convened during Chaturmasya wherein, Panchangam details are finalized well ahead for the on-coming Hindu calendar year.

During the current Chaturmasya,  it was conducted on 2020 July 24, 25 and 26 - Friday, Saturday and Sunday.

Due to the prevailing situation this sadas was conducted via online meeting. About 22 panchanga kartas from Tamil Nadu, Andhra and Shri Lanka, and 6 Dharma Shastra Agama scholars participated in it. They determined the observances and festivals for the forthcoming Plava year (2021-2022).

Shri Shankaracharya Swamigal in His Anugraha Bhashanam blessed the beginning of the sadas as follows: The panchangams have an important role in taking to the common people the shastric matters of what is to be done when. Thus panchangams should mention the events like punya kalams like Amrita Siddhi Yogam which easily give much benefit. Panchangams should serve the people by helping them to follow Dharma more and more and attain peace and prosperity.

Dharma Shastra scholars who participated in the sadas -

* Brahmashri Sundararama Vajapeyi
* Brahmashri Bharanidhara Shastrigal
* Brahmashri Shriramana Sharma
* Brahmashri Nilakantha Shastrigal

Agama and temple tradition experts -

* Shri Balasubrahmanya Shivacharyar
* Shri Krishnamurti Shivacharyar
* Shri Matrubhooteshvaran
* Shri Venkatesha Dikshitar

Panchanga Kartas -

* Shrimatam Panchangam - Shri Narasimhan, Govindan, Ramagopalan, Venkatesan, Nambigopalan
* Bharat Ganitha Panchangam - Shri Ravi, Raghu
* Arcot Shivashakti Panchangam - Shri Mahalingam, Navaneethakrishnan
* Pambu Panchangam - Shri Vijayaraghavan
* Pambu Panchangam Publishers - Shri Ganesh Kumar and family
* Shrinivasan Panchangam - Shri Naranarayanan
* Shrirangam Panchangam - Shri Gopala Kutti Shastri
* Ashtangam - Shri Shrinivasan
* Maruththuvakkudi Panchangam - Shri Subrahmaniyan
* Sabari Panchangam - Shri Sadasivam
* Thirumalirunjolai Panchangam - Shri Gopalakrishnan, Varshan
* Shrimatam Telugu Panchangam - Shri Subrahmanya Siddhanti
* Thanigai Panchangam - Shri Saravanan
* Mariyamman Panchangam - Shri Shrinivasan
* Thiruvarulsakthi Panchangam - Shri Arulvel
* Sri Lanka Drigganita Panchangam - Shri Jekathisvara Sarma
* Veda Dharma Shastra Paripalana Sabha Panchangam and online meeting arrangement - Shri Karthik Raman

॥ ஶ்ரீ மஹாத்ரிபுரஸுந்தரீ ஸமேத ஶ்ரீ சந்த்ரமௌலீஶ்வராய நம꞉ ॥
॥ வார்ஷிக பஞ்சாங்க ஸதஸ் ॥

ஶ்ரீ காஞ்சீ காமகோடி மூலாம்நாய ஸர்வஜ்ஞ பீடாதிபதி ஜகத்குரு ஶ்ரீ ஶங்கராசார்ய ஸ்வாமிகளின் உத்தரவுபடி ப்ரதிவருஷமும் சாதுர்மாஸ்ய ஸமயத்தில் நடக்கும் பஞ்சாங்க ஸதஸ்ஸானது நிகழும் ஶார்வரி ௵ ஆடி ௴ 9, 10, 11 ௳ (2020 ஜூலை 24, 25, 26 - வெள்ளி, சனி, ஞாயிறு) நாட்களில் நடைபெற்றது.

தற்சமயம் உள்ள சூழ்நிலை காரணமாக இணைய வழி சந்திப்பு மூலமாக இந்த ஸதஸ் நடந்தது. அதில் தமிழ்நாடு, ஆந்திரம் மற்றும் இலங்கையைச் சேர்ந்த சுமார் 22 பஞ்சாங்க கர்த்தாக்களும், 6 தர்ம சாஸ்த்ர ஆகம வல்லுநர்களும் கலந்துகொண்டனர். வரவிருக்கும் ப்லவ வருடத்திற்கான (2021-2022) அனுஷ்டான உத்ஸவாதிகளைத் தீர்மானம் செய்துகொண்டனர்.

ஸதஸ்ஸின் தொடக்கத்தில் அனுக்ரஹ பாஷணம் அளித்த ஶ்ரீ ஶங்கராசார்ய ஸ்வாமிகள் - என்று என்ன செய்ய வேண்டும் போன்ற சாஸ்த்ர விஷயங்களை பொதுமக்களுக்கு கொண்டு செல்வதில் பஞ்சாங்கங்களுக்கு அதிக பங்கு இருக்கிறது. ஆகவே அம்ருத ஸித்தி யோகம் போன்றதான எளிதில் அதிக பலன் அளிக்கக்கூடிய புண்ணிய காலங்கள் முதலியவற்றை பஞ்சாங்கங்களில் குறிப்பிட வேண்டும். மக்கள் தர்மத்தை மேன்மேலும் கடைபிடித்து வாழ்க்கையில் அமைதியும் மகிழ்ச்சியும் பெற பஞ்சாங்கங்கள் தொண்டாற்ற வேண்டும் - என்று கூறியருளினார்.

ஸதஸ்ஸில் கலந்து கொண்ட தர்ம சாஸ்த்ர வித்வான்கள் -

* ப்ரஹ்மஶ்ரீ ஸுந்தரராம வாஜபேயீ
* ப்ரஹ்மஶ்ரீ பரணீதர சாஸ்த்ரிகள்
* ப்ரஹ்மஶ்ரீ ஶ்ரீரமண ஶர்மா
* ப்ரஹ்மஶ்ரீ நீலகண்ட சாஸ்த்ரிகள்

ஆகமம் மற்றும் கோவில் ஸம்ப்ரதாய நிபுணர்கள் -

* சிவஶ்ரீ பாலஸுப்ரஹ்மண்ய சிவாச்சார்யர்
* சிவஶ்ரீ க்ருஷ்ணமூர்த்தி சிவாச்சார்யர்
* ஶ்ரீ மாத்ருபூதேச்வரன்
* ஶ்ரீ வேங்கடேச தீக்ஷிதர்

பஞ்சாங்க கர்த்தாக்கள் -

* ஶ்ரீமடத்து பஞ்சாங்கம் - ஶ்ரீமான்கள் நரஸிம்ஹன், கோவிந்தன், ராமகோபாலன், வேங்கடேசன், நம்பிகோபாலன்
* பாரத் கணித பஞ்சாங்கம் - ஶ்ரீமான்கள் ரவி, ரகு
* ஆற்காடு சிவசக்தி பஞ்சாங்கம் - ஶ்ரீமான்கள் மஹாலிங்கம், நவநீதக்ருஷ்ணன்
* பாம்பு பஞ்சாங்கம் - ஶ்ரீ விஜயராகவன்
* பாம்பு பஞ்சாங்கம் வெளியீட்டாளர் - ஶ்ரீ கணேஷ் குமார் மற்றும் குடும்பத்தினர்
* ஶ்ரீநிவாஸன் பஞ்சாங்கம் - ஶ்ரீ நரநாராயணன்
* ஶ்ரீரங்கம் பஞ்சாங்கம் - ஶ்ரீ கோபால குட்டி சாஸ்த்ரி
* அஷ்டாங்கம் - ஶ்ரீ ஶ்ரீநிவாஸன்
* மருத்துவக்குடி பஞ்சாங்கம் - ஶ்ரீ ஸுப்ரஹ்மணியன்
* சபரி பஞ்சாங்கம் - ஶ்ரீ ஸதாசிவம்
* திருமாலிருஞ்சோலை பஞ்சாங்கம் - ஶ்ரீமான்கள் கோபாலக்ருஷ்ணன், வர்ஷன்
* ஶ்ரீமடம் தெலுங்கு பஞ்சாங்கம் - ஶ்ரீ ஸுப்ரஹ்மண்ய ஸித்தாந்தி
* தணிகை பஞ்சாங்கம் - ஶ்ரீ சரவணன்
* மாரியம்மன் பஞ்சாங்கம் - ஶ்ரீ ஶ்ரீநிவாஸன்
* திருவருள்சக்தி பஞ்சாங்கம் - ஶ்ரீ அருள்வேல்
* இலங்கை த்ருக்கணித பஞ்சாங்கம் - ஶ்ரீ ஜெகதீஸ்வர சர்மா
* வேத தர்ம பரிபாலன ஸபை பஞ்சாங்கம் மற்றும் இணையவழி சந்திப்பு ஏற்பாடு - ஶ்ரீ கார்த்திக் ராமன்

-*-