ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தேவஸ்தானத்தில் உலக நன்மைக்காக காமாக்ஷி தாய் மடியில் என்னும் மஹா பாராயணம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சங்கர விஜயேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள் ஸ்ரீ சத்ய சந்த்ரசேகரேந்த்ர ஸரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
அவர்களின் பரிபூரண அனுக்ரஹத்துடனும், அருள் முன்னிலையிலும்
விஸ்வாவஸு வருடம் பங்குனி, 14 ஆம் நாள் 28-3-2026. சனிக்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு காஞ்சீபுரம், ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தேவஸ்தானத்தில்
உலக நன்மைக்காக காமாக்ஷி தாய் மடியில் என்னும்
2000 மாணவிகள் பங்கேற்கும் மஹா பாராயண கூட்டுப் பிரார்த்தனை வைபவம் நடைபெற இருக்கிறது. இவ் வைபவத்தில் 2000 மாணவிகளும் காமாக்ஷி விருத்தம், கோளறு பதிகம், காஞ்சி ஷேத்ர தேவார பாடல்கள், ப்ரபந்தங்கள் உள்ளிட்ட பாடல்களை இசையுடன் ஒருசேரப்பாடி ப்ரார்த்திக்க உள்ளனர்.
தாங்கள் இம் மகத்தான நிகழ்வில் கலந்து கொண்டு, ஸ்ரீ ஆச்சார்யாள் அனுக்ரஹத்திற்கும் அன்னை காமாக்ஷியின் அருளுக்கும் பாத்திரராகும்படி கேட்டுக்கொள்கிறோம்.
இந்து சமய மன்றம்
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கலை, சுலாச்சார பண்பாட்டு சேவை அமைப்பு எண் சாலைத் தெரு, காஞ்சீபுரம் மற்றும்
ஸ்ரீ காமாக்ஷி ஸ்ரீ வித்யா ஸமிதி, சென்னை
ஏற்பாடு:-
என்றும் குருசேவையில்
ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி
(தன்னாட்சி ஏனாத்தூர். காஞ்சிபுரம் - 631501 தொ.பே: 044-27264066