Maharudra Purnahuti and Unveiling Statue of Pujyashri Jayendra Saraswathi Shankaracharya Swamigal

25-02-2021

Maharudra Purnahuti & Unveiling Statue of His Holiness Sri Jayendra Saraswathi Shankaracharya Swamigal

25/2/2021
Shankar Math, Agni Teertham,
Rameswaram

A Maharudram was performed for three days by Vaidikas from local Vedic community in commemoration of His Holiness visit to #Rameswaram in connection with Gangabhishekam & Pujas to Parvathavardhini Sameta Sri Ramanathaswamy at the Garbhagruha on 22/2/2021 as per customs & traditions. The Purnahuti was held in the divine presence of His Holiness. This was the second Maharudram performed in this Yatra.

After the Purnahuti His Holiness sprinkled the Maharudram Teertham on the statue of His Holiness Pujya Sri Jayendra Saraswathi Shankaracharya Swamigal which was unveiled on that day.

HH Pujya Shri Jayendra Saraswathi Shankaracharya Swamigal had visited Rameswaram several times, by Pada Yatra, earlier with Jagadguru Sri Kanchi Mahaswamigal in 1960’s, then alone in 1970’s & 80’s as Pada Yatra and then with Sri Bala Periyava. The Kashi Rameswaram Yatra of His Holiness Sri Jayendra Saraswathi Shankaracharya Swamigal as Pada Yatra is ever etched in the minds of devotees.

His Holiness had performed Gangabhishekam & Pujas to Ramanathaswamy and in one of his Rameswaram Yatras, Sri Jayendra Saraswathi Shankaracharya Swamigal had performed Maha Shivaratri Pujas for Sri Chandramouleeshwara at Shankar Math and additionally, on the same night His Holiness performed third Kala Puja at the Garbha Gruha to Sri Ramanathaswamy and performed Sahasrakalashabhishekam. His Holiness performed Sri Chandramouleeshwara Puja in the prakaram of Sri Ramanathaswamy Devasthanam. His Holiness had performed 2001 Kumbhabhishekam at the temple and also performed Mandalabhishekam to Sri Ramanathaswamy which coincided with Vasantha Navaratri & Rama Navami Utsavamas that year. His Holiness blessed & initiated the construction of the South & North Gopurams. His Holiness had presented several Abharanams to Sri Parvathavardhini Sameta Ramanathaswamy each time he visited Rameswaram. The Nagabharanam given by His Holiness in 2016 in connection with Kumbhabhishekam was one among them.

The unveiling of statue of His Holiness Sri Jayendra Saraswathi Shankaracharya Swamigal coincided with Trayodashi on 25/2/2021, the last day of the Srimatam camp at Rameswaram. It is important to mention that Swarna & Rajata coins given at Srimatam during Danams & Sambhavana were specially engraved with the image of His Holiness Sri Jayendra Saraswathi Swamigal on one side and Sri Kamakshi Amman on the other.

மஹாருத்ர பூர்ணாஹுதி மற்றும் பூஜ்யஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் திருவுருவச்சிலை திறப்பு

25/2/2021 சங்கரமடம் அக்னிதீர்த்தம் ராமேஶ்வரம்

பெரியவாளின் ராமேஶ்வர விஜயம் மற்றும் பர்வதவர்த்தினீ ஸமேத ஸ்ரீ ராமநாதஸ்வாமிக்கு அவர் திருக்கரங்களால் கங்காபிஷேகம் நடந்ததை முன்னிட்டு, ஸம்ப்ரதாயப்படி உள்ளூரில் இருக்கும் வைதிகர்களால் மூன்று நாட்களில் மஹாருத்ரம் பண்ணப்பட்டது. ஶ்ரீ பெரியவாளின் முன்னிலையில் பூர்ணாஹுதி நடந்தது. இது இந்த யாத்திரையில் நடந்த இரண்டாவது மஹாருத்ரம்.
பூர்ணாஹுதிக்குப் பிறகு, ஸ்ரீ பெரியவாள் மஹாருத்ர தீர்த்தத்தை புதிதாக திறக்கப்பட்ட பூஜ்யஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள், திருவுருவச் சிலையின் மீது ப்ரோக்ஷணம் செய்தார்.

பூஜ்யஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் இதற்கு முன்னர் பல முறை ராமேஶ்வர விஜயம் செய்திருக்கிறார் - பாத யாத்திரையாக காஞ்சி மஹாஸ்வாமிகளுடன் 1960-களில், தனியாக பாதயாத்திரையாக 70 களிலும் , 80 களிலும், மற்றும் இன்றைய பீடாதிபதிகளான பெரியவர்களுடனும் விஜயம் செய்திருக்கிறார். பாத யாத்திரையாக பூஜ்யஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் செய்த காஶீ-ராமேஶ்வர யாத்திரைகள் பக்தர்களின் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துள்ளன.

பூஜ்யஸ்ரீ பெரியவாள் தன்னுடைய முந்தைய யாத்திரையில் ராமநாத ஸ்வாமிக்கு கங்காபிஷேகமும் செய்திருக்கிறார். அதே போல ஸ்ரீஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகள் ஶங்கரமடத்தில் மஹாஶிவராத்ரி அன்று ஸ்ரீ சந்த்ரமௌலீஶ்வரருக்கு பூஜை செய்து, அன்றிரவே ஸ்ரீராமநாதஸ்வாமிக்கு கர்ப்பக்ருஹத்தில், மூன்றாம் காலபூஜை செய்து தன் திருக்கரங்களால் ஸஹஸ்ரகலஶாபிஷேகமும் செய்தார்.

ஸ்ரீ பெரியவாள் 2001 ஆம் ஆண்டு அவ்வாலயத்தின் கும்பாபிஷேகம் செய்து, வசந்த நவராத்ரி மற்றும் ஶ்ரீராமநவமி உத்ஸவமும் அமைந்த பர்வகாலத்தில் ஸ்ரீ ராமநாதஸ்வாமிக்கு மண்டலாபிஷேகமும் செய்தார்.

மேலும், தெற்கு வடக்கு கோபுரங்களின் கட்டுமானப்பணிக்கு ஆசிகள் நல்கி துவங்கி வைத்தார். ஒவ்வொரு விஜயத்தின் போதும், ஸ்ரீ பெரியவாள் ஸ்ரீபர்வதவர்த்திநீ ஸமேத ராமநாதஸ்வாமிக்கு பல ஆபரணங்களையும் ஸமர் பித்தருளியிருக்கிறார். இவற்றுள் 2016 ஆம் ஆண்டு கும்பாபிஷேகத்தின் போது ஸமர்ப்பித்த நாகாபரணமும் ஒன்றாகும்.

ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் திருவுருவச் சிலை திறப்பு த்ரயோதஶீ திதியுடன் கூடிய நன்னாளில், ராமேஶ்வர யாத்திரையின் கடைசி தினத்தன்று சிறப்புடன் நடந்தேறியது. தானம் மற்றும் ஸம்பாவனையாக அளிக்கப்பட்ட தங்க-வெள்ளி நாணயங்களில், ஒரு பக்கம் ஸ்ரீ ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸ்வாமிகள் திருவுருவமும் மறுபக்கம் காமாக்ஷி அம்பாளின் திருவுருவமும் பொறிக்கப்பட்டிருந்தது விசேஷமாகக் குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.










Back to news page