Plava Samvatsaram- Vishu Kani Darshan at Shrimatam

14-04-2021

Plava Nama Samvatsaram begins today. On this auspicious occasion, Vishu Kani Darshanam was performed at Shrimatam
உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவனாகிய, அந்த பரமேச்வேரனின் அருளினாலே, இந்த ப்லவ நாம நூதன ஸம்வத்ஸரம், இனிய தமிழ் புத்தாண்டு, இன்று பிறந்திருக்கிறது.
'ப்லவம்' என்றால், மிதப்பது என்று பொருள். பக்தர்களாகிய நாம் அனைவரும், ஆனந்தத்திலும், குருவின் அருளிலும், ஜகன்மாதாவான ஸ்ரீ காமாக்ஷீ தேவியின் அரவணைப்பிலும் மிதந்து கொண்டே இருக்க வேண்டும்.
விஷுக்கனி தரிசனம் என்பது, புத்தாண்டு தினத்தன்று நடக்கக்கூடிய, ஸம்ப்ரதாய நிகழ்ச்சியாகும்.
அன்றைய தினம், மங்கள வஸ்துக்கள், தானியங்கள், காய்கறிகள், பழ வகைகள், பூக்கள், இவைகளையெல்லாம் அலங்கரித்து வைத்து, பின்பு அதை நமஸ்கரித்து, கண்ணாடியில் நம்மை பார்ப்பது என்பது, நடை முறையில் இருந்து வருகிறது.
நமது ஸ்ரீ மடத்திலும், இந்த பாரம்பரிய வழக்கமானது, தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள், கண்ணாடியை பார்ப்பது என்பது, வருடத்தில் இந்த ஒரே ஒரு நாள் மட்டும் நடக்கும் அரிய நிகழ்வாகும்.
ப்லவ வருட ஆரம்பமான இந்த நன்னாளில், வழக்கம் போல், ஸ்ரீ பரமாச்சார்யாள், ஸ்ரீ ஜெயேந்த்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அதிஷ்டானங்களின் முன்பு, விஷுக்கனி தரிசனத்திற்காக அலங்காரம் செய்து வைக்கப்பட்டிருந்தது.
ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள், காலை மங்கள வாத்யத்துடன் எழுந்தருளி, குரு-பரமகுரு அதிஷ்டானங்களை தரிசனம் செய்து, மங்கள ஹாரத்தி காண்பித்தார்கள்.
'கண்ணி கார் நறுங் கொன்றை, காமர்
வண்ண மார்பின் தாரும் கொன்றை' - என்று புறநாநூற்றிலே, பரமேச்வரனை அலங்கரிக்கும் கொன்றையைப் பற்றி குறிப்பிடப்படுகிறது.
இன்றைய தினம் பரமேச்வர அவதாரமாகிய ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகள், கொன்றை மலர் கொத்துக் கிளையைக் கொண்டு, தன் திருக்கரங்களினால், அதிஷ்டானங்களில் சாமரம் வீசி, இந்த புத்தாண்டில் பக்தர்களின் வாழ்வு சிறக்க ப்ரார்த்தனை செய்தார்கள்.
பின்பு அனைவருக்கும், விஷுக்கனி ப்ரஸாதமாக, ரூபாய் நாணயங்களை அளித்து அனுக்ரஹம் செய்தார்கள்.


















Back to news page