Sthala Puranas - discourse series to commence on Sunday

23-01-2022

"Sthala Puranas" - series of discourses will commence from Sunday, 23 Jan. 2022 . The programme will commence at 6 pm with Anugraha Bhashanam of of Pujyashri Shankaracharya Swamigal. Watch live on kamakoti.tv
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆகஞையின்படியும், பக்தர்களிடையேயும், ஆன்மிக இளைஞர்களிடையேயும், பாரம்பரிய கலாசார தகவல் களஞ்சியமாக வலம் வருகின்ற www.thanjavurparampara.com இணைய தளத்தின் ஆதரவோடும், www.Kamakoti.tv எனும் இணையத்தின் பங்களிப்புடனும்," ஸ்தல புராணங்கள்" எனும் தலைப்பில் மாபெரும் தொடர் சொற்பொழிவு வாரம் தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.00 முதல் 7.00 மணி வரை, பன்மொழி அறிஞர் உபன்யாஸ திலகம், பிரபல மும்பை ப்ரும்மஸ்ரீ . P. R. கண்ணன் அவர்கள் நிகழ்த்துகிறார்கள். "ஸ்தலம்,தீர்த்தம், மூர்த்தி" என்று அனைத்து சிறப்புகளையும் கொண்ட சிவன், விஷ்ணு அம்பாள் ஆலயங்கள் என இப் புனித பூமியில், நாம் அறிந்தும் அறியாமலும் நிறைய உள்ளன. பெருமைமிக்க இத் தலங்கள் பற்றிய விவரங்களை நாம் அறிந்து கொள்ள அரிய வாய்ப்பு இணைய தளம் வாயிலாக, கற்றறிந்த நல்லதோர் அறிஞரின் முகத்தான் நம் இல்லம் தேடி வருகிறது. இதனை வணங்கி வரவேற்று பற்பல தலங்களின் வரலாற்றை அறிந்து கொள்ள வேண்டுகிறோம். சொற்பொழிவு தொடங்கும், நேரம், காலம் மற்றும் இணைப்பு விவரங்கள் தனியே தரப்பட்டுள்ளன.




Back to news page