வைசாக சுக்ல பஞ்சமி - ஸ்ரீ சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம்
25-04-2023
ஸ்ரீ குருப்யோ நம:
ஸ்ரீ சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம்: வைசாக சுக்ல பஞ்சமி, 2532வது ஜகத்குரு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம் – 25-3-2023
சங்கர ஜெயந்தி கன்யாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத தேசம் முழுவதும் மிகவும் சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. அவ்வழியில் காஞ்சி சங்கர மடத்தில் கடந்த ஏழு நாட்களாக சிறப்பாக அபிஷேகம், தூப தீப ஆரத்திகள் செய்து ஆதி சங்கர ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. ஏழு நாட்களிலும் மாலை வேளையில் ஆதிசங்கரர் சிலை பல்லக்கில் வேத கோஷங்கள முழங்க காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு இடங்களுக்கு வீதி உலா புறப்பாடு செய்யப்பட்டது. இன்று (25-4-2023) காலை ஸ்ரீ ஆதி சங்கர பகவத் பாதாள் அபிஷேக ஆராதனைகள் முடிந்து அவதார கட்டம் வாசிக்கப்படும். சங்கர ஜெயந்தியை முன்னிட்டு மாலையில் ஆதி சங்கர சிலை நான்கு ராஜவீதியில் ரதோஸ்சவம் வேத கோஷம் முழங்க நடைபெறும். தற்போது காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீஸ்ரீஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் விஜய யாத்திரையில் திருப்பதியில் முகாமிட்டுள்ளார்கள். அங்கும் சங்கர ஜெயந்தி மஹோத்ஸவம் சுவாமிகளின் முன்னிலையில் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. ஜயந்தி தினத்தன்று (25-4-2023) காலை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் கோவிலில் அமைந்துள்ள ஸ்ரீ பகவத்பாதாள் சன்னதி மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டு விசேஷ அபிஷேக ஆராதனைகள் செய்யப்படும். ஜயந்தி தினம் முதல் மாலை அம்பாள் சந்நிதியில் சௌந்தர்யலஹரி ஸ்லோகங்கள் பாடப்பட்டு 10 நாட்கள் உற்சவம் கொண்டாடப்படும். 10வது நாள் ஸ்ரீ காமாஷி அம்பாள் நான்கு ராஜவீதிகளில் வீதி உலா வந்து அருள் பாலிப்பார். ஏனாத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 100 அடி ஆதிசங்கர்ர் சிலைக்கும் ஜயந்தியை முன்னிட்டு இன்று (25-4-23) விசேஷ பூஜை விமர்சையாக நடைபெறுகிறது. #kamakoti #Shankaracharya
.jpg)

.jpg)



.jpg)


.jpg)





Back to news page