காஞ்சி சங்கர மடத்தில் விஷுக்கனி தரிசனம்
14-04-2023 தமிழ்ப் புத்தாண்டு தினத்தையொட்டி சங்கர மடத்தில் வெள்ளிக்கிழமை அதிஷ்டானத்தின் முன்பாக பெரிய நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டு அதன் முன்பு காய்கறிகள், பழங்கள், பூக்கள் ஆகியன அலங்கரித்து வைக்கப்பட்டு விஷூக்கனி தரிசனம் நடைபெற்றது. சோபகிருத் என்னும் தமிழ் ப்புத்தாண்டு பிறந்ததையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் விஷூக்கனி தரிசனம் நடைபெற்றது. மகா பெரியவா் மற்றும் புதுப்பெரியவா் அதிஷ்டானங்கள் முன்பாக பெரிய அளவிலான நிலைக்கண்ணாடி வைக்கப்பட்டு அதன் முன்பு காய்கறிகள், பழங்கள், பூக்கள், மஞ்சள், சா்க்கரை உள்ளிட் மங்களத் திரவியங்கள் ஆகியன அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது......
