Anugraha Bhashanam of Acharyal on the occasion of Jayanti Mahotsavam of Jagadguru Mahaswamigal

03-06-2023

Anugraha Bhashanam of Pujyashri Shankara Vijayendra Saraswathi Shankaracharya Swamiji on the occasion of Jayanti Mahotsavam of Jagadguru Pujyashri Chandrashekarendra Saraswati Mahaswamigal today - 3 Jun. 2023 - given at Shrimatam camp at #Bengaluru

 


https://youtu.be/GAAZkRxu4X4

Kanchi Mahaswami Jayanthi 2023
3rd Jun 2023, Bengaluru Camp

गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु: गुरुर्देवो महेश्वर: ।
गुरुस्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नम: ॥
नारायणं पद्मभुवं वसिष्ठं शक्तिं च तत्पुत्र पराशरं च
व्यासं शुकं गौडपदं महान्तं गोविन्द योगीन्द्रं अथास्य शिष्यं ।
श्री शंकराचार्यं अथास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यं
तं तोटकं वार्तिककारमन्यान् अस्मद्गुरून् सन्ततमानतोऽस्मि ॥
श्रुति स्मृति पुराणानां आलयं करुणालयं ।
नमामि भगवद्पाद शंकरं लोक शंकरम् ॥
अपार करुणासिन्धुं ज्ञानदं शान्तरूपिणं ।
श्री चन्द्रशेखरगुरुं प्रणमामि मुदान्वहम् ॥
सदाशिव समारम्भां शंकराचार्य मध्यमां ।
अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरु परम्पराम् ॥

ஶ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யவர்ய ஜகத்குரு சங்கராசார்ய ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ அநந்தஶ்ரீவிபூஷித ஜகத்குரு சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகளுடைய - 68-ஆவது பீடாதிபதிகளான, நம்முடைய பெரியவர்களுடைய ஜயந்தி விழாவை, இன்றைய தினம், அநூராதா நக்ஷத்திர தினத்தன்று, காஞ்சீபுரத்திலேயும், பாரத தேசத்திலே பல பிரதேசங்களிலேயும், வெளிநாடுகளிலேயும், இதை, பூஜைகள், ஹோமங்கள், அன்னதானங்கள், பிரவசனங்கள், கச்சேரிகள், பஜனைகள், ஸத்ஸங்கம், இப்படி விமரிசையாக பக்தி சிரத்தையுடன் - குழந்தைகளிலிருந்து, முதியோர்கள் வரையிலே, அனைவரும் கலந்து கொண்டு, குரு பக்தியோடு இந்த ஜயந்தி விழாவை கொண்டாடி, அநுகிரஹத்தை பெற்று வருகிறார்கள்.
மானவ ஜீவிதத்திலே, ஈஶ்வர அநுகிரஹம் முக்கியமானது. ஈஶ்வர அநுகிரஹத்தை பெறுவதற்கு, குருமுகமான உபதேசம், குருமுகமான மார்க்க தர்சனம், மிக முக்கியமானது.
அந்த வகையிலே, நம்முடைய பெரியவர்கள், பக்தர்கள் அனைவருக்கும், சாஸ்த்திரீயமான அனுஷ்டானத்தை அனுசரிப்பதன் மூலமாக, சரியான முறையிலே, ஈஶ்வர அநுகிரஹம் கிடைப்பதற்கு, சஞ்சாரங்கள், உபதேசங்கள், பூஜைகள், மௌனவிரதங்கள், பல்வேறு புஸ்தக வெளியீடுகள் - பொதுவாகவும், மற்றும் தனித்தனியாகவும், உபதேசங்களை குடுத்து;
ஜகத்குருவாக, பல வருஷங்கள் யாத்திரைகளை தொடர்ந்தாற்போல் செய்து, தர்மஸ்வரூபத்தை, மக்களுக்குத் தெரியப்படுத்தி, தர்மத்தை பற்றிய அறிவை அளித்து, தர்மாசரணத்திலே ஆதர்சமாக விளங்கி;
இந்த கலியுகத்திலே, கடந்த நூற்றாண்டிலே, தர்மத்தை பல சந்தர்ப சூழ்நிலைகள் மத்தியிலேயும், தீவிரமான முயற்சியின் காரணமாக, தீவிரமான சங்கல்ப சக்தியின் காரணமாக, அசஞ்சலமான நம்பிக்கையின் காரணமாக, இந்த வேதங்களையும், சாஸ்த்திரங்களையும், சந்தியாவந்தனத்தையும், ஔபாஸனத்தையும், அக்னிஹோத்திரத்தையும், ப்ரஸ்தானத்திரய பாஷ்ய பாராயண முறையையும், சிவ பஞ்சாயதன முறையையும்; அதிதி ஸத்காரம், அன்னதானம், திருப்பாவை-திருவெம்பாவை, ராமநாம லேகனம்.
षण्मतस्थापनाचार्याय नम: । - என்று, ஆதி சங்கர பகவத்பாதர்களுக்கு ஒரு நாமாவளி இருக்கிறது. அந்த விதத்திலே சைவம், வைஷ்ணவம், சாக்தம், காணாபத்யம், ஸௌரம், கௌமாரம் - இப்படி அனைத்தையும் அரவணைத்துச் சென்று;
சேவை மனப்பான்மையை வளர்க்க வேண்டும், பக்தியை வளர்க்க வேண்டும், ஆஸ்தீகத்தை வளர்க்க வேண்டும், வைதீக மதத்தை - ஔபநிஷதம் மதம் என்று, பகவத்பாதர்கள் சொன்ன அந்த உபநிஷத்துனுடைய அபிப்பிராயத்தை, சந்தேசத்தை, உபதேசத்தை, அத்வைத தத்வத்தை, மக்கள் உணர வேண்டும், குழப்பங்கள் நீங்க வேண்டும், சாஸ்த்திர சந்தேஹங்கள் நிவர்த்தி ஆக வேண்டும்;
சாஸ்த்திரம் சம்மந்தப்பட்ட அனுஷ்டான முறைகளை தினசரி கடைபிடிப்பதன் மூலமாக, தபஸ் சக்தி உடையவர்களாக, தோஷ ரஹிதர்களாக, மக்கள் தன்னுடைய தர்மத்தை செய்ய முடியும், என்பதாக - அணு-அணுவாக, சிறுசேமிப்பாக, இந்த தர்மத்தை, அவர்கள் பிரச்சாரம் செய்து;
அணு-அணுவாக, அடிப்பிரதக்ஷிணம் போன்று, சிறுக சிறுக அந்த தர்மத்தை மக்கள் மறக்காமல், மக்கள் துறக்காமல், இருப்பதற்கு, அவர்கள் பெரும்பாடு பட்டு;
இன்றைய தினம், இந்த அளவிற்கு பாடசாலைகள் நடைபெறுகின்றன, நித்ய கர்மானுஷ்டானங்கள் நடைபெறுகின்றன, யக்ஞ-யாகாதிகள் நடைபெறுகின்றன, ஆசார அனுஷ்டானத்தை மக்கள் அநுசரிக்கிறார்கள், ஆசார சீலர்களை கௌரவிக்கிறார்கள், என்பதற்கான நல்ல சூழ்நிலையை, நல்ல Environment-ட்டை, அவர்கள் அளித்து; அந்த வேத தர்மமானது, நல்ல முறையிலே, நடைபெறுவதற்கு முக்கிய காரணமாக விளங்கி; இன்றைக்கும், அந்த ப்ராசீனமான, அநாதியான, அந்த தர்மத்தை நாம் கண்கூடாக, பார்ப்பதற்கான வாய்ப்பை, அவர்கள் நமக்களித்திருக்கிறார்கள்.
அந்த தர்மமானது, கட்டடங்களோடு நின்றுவிடாமல், புஸ்தகங்களோடு நின்றுவிடாமல், அதை வாழ்க்கையிலே, ஜீவிதத்திலே, மந்திர பூர்வகமான அந்த நித்ய கர்மானுஷ்டானங்களை செய்யக்கூடிய பாரம்பரியத்தை, பரம்பரையை அவர்கள், காப்பாற்றித் தந்திருக்கிறார்கள்.
ஆகவே, அந்த அவர்களுடைய ஜயந்தியை, நல்ல முறையிலே கொண்டாடி, இந்த தர்மம் மேன்மேலும், வளர்வதற்கும், தொடர்வதற்கும், நல்ல பாடசாலைகளை, நல்ல கல்விச்சாலைகளை, பள்ளிக்கூடம், College-ஜு, University போன்றவற்றை, குருகுலங்களை, கோசாலைகளை, தர்ம பிரச்சார வகுப்புகளை, நறைய்ய நடத்தி;
Vedic Knowledge, Vedic Practices, Vedic Environment - அதாவது, சந்தேஹமோ, பயமோ, இல்லாமல், இந்த தர்மத்தை அனுசரிப்பதற்கான உத்ஸாஹத்தையும், ஸங்கல்பத்தையும், தைரியத்தையும், அபயத்தையும், அளித்து;
தேசத்திலே, லோகத்திலே, தர்மத்தை ஸம்ரக்ஷணம் செய்வதன் மூலமாக, நாம், இஹ-பர சிரேயஸ்ஸுகளை அடைய முடியும். ஆரோக்கியம், ஐச்வர்யம், நல்ல நண்பர்கள், ஸத்ஸந்தானம், மனசிலே ப்ரசாந்தமான, அமைதியான, ஒரு மனப்பக்குவத்துடன் கூடிய நிலை, ஸாத்வீக நிலை;
सर्वे जना: सुखिनो भवन्तु ।
चतुस्सागर पर्यन्तं गोब्राह्मणेभ्य: शुभं भवतु ।
என்கிற முறையிலே, மனிதர்களும் நன்றாக வாழ்ந்து, அனைத்து ஜீவராசிகளும் நன்றாக வாழ்வதற்கான, சக்தியும், பக்தியும் உடைய, நல்ல தெளிவை பெற்று, தர்மம் மேன்மேலும் வளருவதற்கு அனைவரும் தங்களுடைய பங்கை அளித்து - யோக தானம் - தானம், மற்றும் யோக தானம். தானம் அளிப்பது ஒன்று - யோக தானம் - Participation, அதையும் அளித்து;
Worship, Scholarship, Membership. Worship - அனுஷ்டானங்களை செய்வது. Membership - நம்முடைய பாரம்பரியத்தை, நாம் துறக்காமல் இருப்பது. இப்படி, அந்த தர்மத்தை நாம் தொடர்ந்து செய்வதற்கு அவர்களுடைய அநுகிரஹம் கிடைக்கவேண்டும்.
இன்றைய தினம் அதற்கான சங்கல்பத்தை பக்தர்கள் மேற்கொண்டு, அனைவரும் நல்ல திசையிலே சென்று, நல்ல தசையிலே வாழ்ந்து, ஐகமத்தியத்துடனும், சௌஜன்யத்துடனும், தர்மத்தை பாரம்பரியத்தை பிரதான குறிக்கோளாக வைத்துக்கொண்டு, இணைந்து செயல் படுதல், இணக்கமாக செயல் படுதல்;
விட்டுக்குடுத்து - எதை விட்டுக்குடுக்கக்கூடாதோ, அதை விட்டுக்குடுக்காமல், எதற்காக விட்டுக்குடுக்க வேண்டுமோ அதை விட்டுக்குடுத்து, அஹம்பாவம் இல்லாமல், சேவா பாவத்துடன் பழகி, இந்த தர்மத்தை மேன்மேலும், அடுத்த தலமுறைக்கி சேர்ப்பிப்பதை முக்கியக் குறிக்கோளாக வைத்துக்கொண்டு, பிரதான உத்தேசமாக வைத்துக்கொண்டு;
ஸ்வதேசம், ஸ்வதர்மம், ஸ்வபாவம். ஸ்வபாவம் - ஸாத்விகமான ஸ்வபாவம். जननी जन्मभूमिश्च स्वर्गादपि गरीयसी । - என்பதாக, அவரவர்களுடைய கிராமங்களையும், குலதெய்வத்தையும், பூஜித்து, கிராமத்திலே நல்ல காரியங்களை செய்து; நம்முடைய நாப்பது ஸம்ஸ்காரங்கள், ச்ரௌத-ஸ்மார்த்த மார்க்கத்தை பிரச்சாரம் செய்து; ஸம்ஸ்க்ருத பாஷை, வேதங்கள், புராணங்கள், அவரவர்களுடைய மாத்ரு பாஷை; இப்படி தேசத்திலே, தர்மம் நிலைத்து நிற்பதற்கு;
கட்டடங்கள் இருக்கின்றன. வசதிகள், மக்களுக்கு தினமும் குடுத்துக்கொண்டிருக்கிறார்கள். வசதியாகவும், ஜனங்கள் பழகிக்கொண்டிருக்கிறார்கள். இப்படி இருக்கும்பொழுது, தர்மம் என்பது முக்கியமானது, சாஸ்த்திரம் என்பது முக்கியமானது, பாரம்பரியம் என்பது முக்கியமானது. அந்த தர்மம், சாஸ்த்திரம், பாரம்பரியம், என்கிற துறைகளிலே, அடுத்த தலமுறையை சார்ந்தவர்களுக்கு நாம் இவற்றை சொல்லிக்குடுத்து, பழக்கப்படுத்தி, பக்குவப்படுத்தி, தைரியப்படுத்தி, அதன்மூலமாக, குருவிற்கு கைங்கரியத்தை செய்து;
இன்றைக்கி வசதிகள் இருக்கின்றன. தொழில்நுட்பம் இருக்கிறது, சஞ்சாரங்கள் இருக்கின்றன. இந்த சௌகரியங்களெல்லாம் இல்லாத நிலையிலே, அவர்கள் வேத பாடசாலைகளை வைத்து, எல்லாம் செய்திருக்கிறார்கள்.
இன்றைக்கி வசதியோடு நாம் வாழக்கூடிய நிலையிலே, அந்த ஸ்தாபனங்களை மேலும் வலுப்படுத்தி, ஆகமங்கள், சில்பங்கள், சங்கீதம், நாம ஸங்கீர்த்தனம், எல்லாவற்றையும், நாம் பலப்படுத்தி, ப்ரபலப்படுத்தி, பத்ரப்படுத்தி, அதன் மூலமாக ஒரு குருவிற்கு ஒரு குரு தக்ஷிணையாக, குரு கைங்கரியமாக, குரு சேவையாக;
இந்த தஷிண தேசத்திலே வளர்க்கப்பட்ட, இந்த ஒரு சாஸ்த்திர பாரம்பரியத்தை, நாம் பல்வேறு, இந்த காலத்திற்கு உகந்த, தேவையான படிப்பையும் அளித்து, ஒவ்வொரு குடும்பத்திலேயும் இதுவரை பின்பற்றி வந்த, பாரம்பரிய தர்மஞானத்தையும் சேர்த்தளித்து, சமுதாயத்திற்கு வழிகாட்டுவதற்காக, நல்ல வித்வான்களை தயார் செய்து - தர்க்கம், மீமாம்ஸா, வ்யாகரணம், வேதாந்தம், யோகம், தர்மசாஸ்த்திரம், போன்ற, நல்ல பண்டிதர்களையும் தயார் செய்து;
धर्मो रक्षति रक्षित: । - என்பதாக, இந்த தர்மத்தை காப்பதற்காக, சமயம், சாமர்த்தியம், சம்பத்து. நேரத்தை அளிப்பது - சமயம். சாமர்த்தியம் - அவரவர்களுக்கு இருக்கக்கூடிய Skills, Contacts, Knowledge, Experience. சம்பத்து - ஐச்வரியங்கள் - இப்படி, அந்த மூன்றையும் அளித்து, ஒருங்கிணைந்த முயற்சியின் மூலமாக, ஒரு முகமான முயற்சியின் மூலமாக, ஒருமித்த கருத்தை உருவாக்கிக்கொள்வதன் மூலமாக, ’ஸத்யம் அத்வைதம்’ என்கிற அந்த அத்வைதத்தை - அந்த ’மைத்ரீம் பஜத’ என்கிற சந்தேசத்திலே சொன்ன - ’ச்ரேயோ பூயாத் ஸகல ஜனானாம்’, என்கிற அந்த, ச்ரேயஸ்ஸை பெறுவதற்கு, இன்றைய தினம் - இந்த வைகாசி மாச, அனுஷ தினத்தன்று, ஸங்கல்பத்தை மேற்கொண்டு;
’அவனருளாலே அவன் தாழ் வணங்கி’ என்பது போன்று, மக்கள் குருபக்தியை மேன்மேலும் வளர்த்துக்கொண்டு, ’அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும், அன்னை காமாக்ஷி உமையே’ என்கிற, அம்பாளுடைய அநுகிரஹத்தை பெற்று, குருபரம்பரையினுடைய அநுகிரஹத்தை பெற்று;
கடந்த நூறு வருஷங்களாக நம்முடைய புதுப்பெரியவர்களும், பெரியவர்களும், காட்டிய இந்த பக்தி, ஆஸ்தீக, வைதீக, அந்த தர்மகாரியங்களை, தெரிந்து கொண்டு, நம்மால் முடிந்த விதத்திலே, இந்த தர்மத்திற்கு சேவை செய்வதற்கு முன்வந்து, மேன்மேலும் நல்ல காரியங்களை செய்ய வேண்டும்.
அதன் மூலமாக, குரு அநுகிரஹத்தை பெற்று - गुरोरनुग्रहादेव पुमान् पूर्ण: प्रजायते । - என்பதாக, தெய்வ அநுகிரஹம் இருந்தாலும், அந்த பரிபூர்ண நிலை என்பது, முழுமை என்பது, பூர்ணத்துவம் என்பது, குரு அநுகிரஹம் நமக்கு கிடைக்கும் போது தான், நாம் அந்த மன நிறைவை பெறுகிறோம்.
ஆகவே, அந்த குரு முகமான ஈஶ்வர அநுகிரஹம் பெறுவதற்கு, இன்றைய தினம், பக்தியையும், தொண்டையும், செய்வதென்று, ஸங்கல்பித்து, மேன்மேலும் அந்த குரு அநுகிரஹம் உங்களுக்கெல்லாம் கிடைப்பதற்கு, குரு பரம்பரையையும், பெரியவர்களையும், பிரார்த்திக்கிறோம்.
ஹர ஹர சங்கர ! ஜய ஜய சங்கர !


Back to news page




Prev.::Shobakrut Samvatsara Chaturmasyam at Varanasi

Next.::Vijaya Yatra - Swagatam and visits at Nizamabad