Cultural programmes organized - சங்கரா கல்லூரி சார்பில் நில ஒளி திண்ணைப் பள்ளிக்கூட கலை நிகழ்ச்சிகள்

21-10-2023

சங்கரா கல்லூரி சார்பில் நில ஒளி திண்ணைப் பள்ளிக்கூட கலை நிகழ்ச்சிகள்
நேற்று பிள்ளைப் பாக்கம் கிராமத்தில் நடந்த திண்ணைப் பள்ளிக்கூட சிறப்பு நிகழ்ச்சியில் 100 கிராம பள்ளி மாணவர்கள் 50 கல்லூரி மாணவர்கள் கிராம பஞ்சாயத்து தலைவர் பெற்றார் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சங்கரா கல்லூரி முன்னாள் மாணவரும் ஜெர்மன் மொழி நிறுவன ஆசிரியரும் இயற்கை விவசாயியுமான ப்ரவீண் குமார் நவராத்திரி உணர்த்தும் அறிவியல் என்னும் தலைப்பில் தலைமை உரை வழங்கினார்.
திருமதி கலைச் செல்வி சங்கர் நலம் தரும் நவராத்திரி என்ற தலைப்பில் சிறப்பு உரை வழங்கினார்.
பள்ளி மாணவர்கள் நவராத்திரி கொலு பொம்மைகள் வைத்து அலங்கரித்தனர்.
சங்கரா கல்லூரி சார்பில்
வினாடி வினா 1000 என்ற பொது அறிவு புத்தகம் வெளியிடப்பட்டது. பிரபல கண் மருத்துவர் கௌசிக் பெற்றுக் கொண்டார்.
ஸ்ரீ காஞ்சி சங்கர மடம் சார்பில் அனைத்து மாணவர்களுக்கும் புதிய புத்தக பைகள் நோட்புக் எழுது பொருள்கள் வழங்கப்பட்டது.
பஞ்சாயத்து தலைவர் திருமதி காயத்ரி வெங்கடேசன்,
மேனாள் தலைவர் வெங்கடேசன் ,
பெற்றோர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் காசிநாதன், சமூக ஆர்வலர் சௌம்யா, பிள்ளைப் பாக்கம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் உண்ணாமுலை ஆகியோர் பங்கேற்றனர்.
சங்கரா கல்லூரி முதல்வர் நோக்க உரை வழங்கி வினாடி வினா வில் வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.
ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் அருளிய பிரசாதம் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
21.10.23 அன்று திண்ணைப் பள்ளிக்கூடம் சார்பில் பிள்ளைப் பாக்கம் வைத்யநாத ஸ்வாமி கோவிலில் பாரம்பரிய பரத நாட்டிய நிகழ்ச்சியும் மாணவர்களுக்கு ஓவிய மற்றும் பேச்சு போட்டி நடைபெறும்.










Back to news page




Prev.::Sharada Navaratri Mahotsavam at Sri Kamakshi Ambal Devasthanam - Day 3

Next.::Birth centenary of Brahmasri Vaidya Dr. S.V Radhakrishna Sastrigal celebrated