உ
ஸ்ரீ சந்த்ரமௌளீச்வராய நம:
ஸ்ரீ சங்கர பகவத் பாதாசார்ய பரம்பராகத
ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு
ஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் அவர்கள்
ஸ்ரீ மடம் ஸம்ஸ்தானம்
நெ. 1 சாலை தெரு, காஞ்சிபுரம் – 631502
______________________________________________________________________________________
முகாம்: சேத்துப்பட்டு, சென்னை தேதி: 26.2.95
நம்முடைய ஸனாதன வைதிக மார்க்கத்தின் குருவான ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர்களின் அவிச்சின்ன பரம்பரையில் 68 வது பீடத்தை அலங்கரித்த ஸ்ரீ சந்திர சேகரேந்திர ஸரஸ்வதி சங்கராசாரியார் ஆதிசங்கரரைப் போலவே சிறந்து விளங்கி, ஜனங்களை கர்ம, பக்தி, ஞான வழிகளில் அறிவும், நம்பிக்கையும், ஆற்றலும் உள்ளவர்களாக உயர்த்தியிருப்பது இந்த நூற்றாண்டுக்கும், அவர்களுடைய பக்தர்களாகிய நமக்கும் பெரும் பாக்கியமாகும். பண்டிதர்கள், பாமரர்கள் உட்பட அனைவரும் அறியும் வகையில் அமைந்துள்ள 4000 பக்கங்களுக்கும் அதிகமான அவருடைய உபதேசங்கள் பல மொழிகளில் வெளிவர இருக்கின்றன. 1957-58களில் மஹாஸ்வாமிகளின் சென்னை விஜயத்தின் போது அவர் செய்த உபன்யாஸங்கள் “ஹிந்து” நாளிதழில் வெளிவந்ததோடு, புத்தகமாகவும் வெளியிடப்பட்டன. இப்போது “ஹிந்து” குதும்பத்தினர், குறிப்பாக ரெங்கரஜன், ரவி ஆகியோர் இப்புத்தகத்தை மீண்டும் வெளியிட இருப்பது கேட்டு ஸ்ந்தோஷிக்கிறோம். கே. நாராயாணன் (துணை ஆசிரியர், ப்ரண்ட் லைன்) உபன்யாஸங்களைத் தொகுத்துக் கொடுத்திறுக்கிறாரக்ள். பக்தர்கள் படித்துப் பயன் பெறவும், மஹாதிரிபுர ஸுந்தரி ஸமேத ஸ்ரீ சந்த்ரமௌளீஸ்வரரைப் பிரார்த்தித்து ஆசீர்வதிக்கிறோம்.
பவ வருஷம் நாராயண ஸ்ம்ருதி
மாக கிருஷ்ண துவாதசி
பானுவாஸ்ரம்