ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம், காஞ்சிபுரம்
தமிழ் இணைய தளம்

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடம் உங்களைத் தமிழ் இணையதளத்திற்கு வரவேற்கிறது. இந்த தளத்தில் ஸ்ரீமடத்தின் சமீபத்திய மற்றும் எதிர்வரும் நிகழ்வுகள் , ஸ்ரீ ஆசார்ய ஸ்வாமிகளின் சுற்றுப்பயண விவரங்கள் எல்லாம் காண உங்களை அழைக்கிறோம். ஆன்மீக - கலாசாரத் தொடர்புள்ள விவரங்களின் ஒரு பெட்டகமாகவும் இணையம் விளங்கும். முதல் தவணையாக இளஞ்சிறாருக்கும் பெரியோர்களுக்கும் உவப்பளிக்கும் நூல்களை இத்தளத்திள் கண்டு படித்துப் பயன் பெறலாம். காலத்தை வென்ற நம் பண்பாடு, சமயம், ஆன்மீக வாழ்க்கை முறை குறித்து நீங்கள் பட்டறிவு பெறவே நிறுவப்பட்டுள்ளது இந்த தளம்.
சர்வஜகத்தும் பரமேச்வரனுடைய சரீரம். அதற்கு அப்படியே கவசம் மாதிரி இருப்பது அம்பிகை சரீரம். அப்படி இருக்கும்படியான நிலையில் பஞ்சபூதங்களுக்கும் மேலே மனசு என்று ஒன்று இருக்கிறதே அதுவும் நீதான். ஆகாசமும் நீதான். அக்னியும் காற்றும் ஜலமும் பூமியும் நீதான். நீயே எல்லா ஸ்வரூபமாகவும் ஆகியிருக்கிறாய் கொஞ்சம் கொஞ்சம் எங்களிடத்திலிருக்கும்படியான ஞானம், ஆனந்தம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக சிதானந்த ஸ்வரூபமாக இருப்பவளும் நீதான். சமஸ்த ப்ரபஞ்சமும் உன்பரிணாமத்தைத் தவிர வேறு ஒன்றும் கிடையாது. சிவன் சரீரி, நீ அவனுக்குச் சரீரம், சிவயுவதி பாவம் உங்கள் இரண்டு பேரிடத்திலும் இருக்கிறது. இப்படி ஆசார்யாள் சௌந்தர்ய லஹரியில் சொல்லியிருக்கிறார்கள்.
- ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் |