வ்ருஶ்சிக ஸங்க்ரமண புண்ய காலம் குறித்த அறிவிப்பு

11-11-2023

வ்ருஶ்சிக ஸங்க்ரமண புண்ய காலம் குறித்த அறிவிப்பு

பஞ்சாங்க ஸதஸ்

வரவிருக்கும் ஐப்பசி 30 (2023 நவ 16) சுமார் 47 நாழிகையளவில் பின்னிரவில்
(த்ருக்கணிதப்படி) ஸங்க்ரமணம் ஏற்படுவதால் மறுநாள் கார்த்திகை 1 (2023 நவ
17) தான் வ்ருஶ்சிக ஸங்க்ரமண புண்ய காலம். (ப்ராசீன வாக்ய கணிதத்தின்படி
மறுநாள் உதயத்திற்கு பிறகே ஸங்க்ரமணம் ஆகையால் அதில் சந்தேகம் இல்லை.)

ஆகவே புண்ய கால அனுஷ்டானங்களை கார்த்திகை 1 (நவ 17) அன்றே செய்யவும்.

சில பஞ்சாங்கங்களில் அச்சுப்பிழையாக முதல் நாள் புண்ய காலம்
கொடுக்கப்பட்டிருப்பதால் இந்த திருத்தம் அறிவிக்கப்படுகிறது.

கார்த்திகை 1 அன்று அனுஷ்டிக்க வேண்டியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள
வ்ருஶ்சிக ஶுக்ல பஞ்சமி ஶ்ராத்தத்தை அன்றே செய்யவும். அதில் மாற்றம்
ஏதும் கிடையாது. ஏனெனில் அம்௴ பின்னர் மற்றொரு ஶுக்ல பஞ்சமி இல்லை.
Back to news page
Prev.::Deepavali at Sri Vishwanatha Dham, Kashi

Next.::Skanda Sashti - Veda Parayanam being performed at Shrimatam