ஸ்ரீமடம்ஸ்வஸ்திவாசனம்

Pujyashri Shankaracharya Swamiji

ஸ்வஸ்திஸ்ரீ அகில பூமண்டலங்களுக்கும் அலங்காரமாய் முப்பத்து முக்கோடி தேவதைகளாலும் ஸேவிக்கப் பெற்று, ஸ்ரீ காமாக்ஷிதேவியோடு விளங்கும் ஸ்ரீ ஏகாம்ரநாதருடையவும், ஸ்ரீ மஹாதேவியோடு விளங்கும் ஸ்ரீ ஹஸ்திகிரி நாதருடையவும் ஸான்னித்யத்தோடு கூடிய க்ஷேத்ரமான ஸத்யவ்ரதம் என்ற பெயர் கொண்ட காஞ்சீ திவ்ய க்ஷேத்ரத்திலே, சாரதாமடத்தில் வீற்றிருப்பவர்களாகவும், ஒப்புமையில்லாத அமிர்தரஸ மாதுர்யத்தையுடையதாய் கமலாஸனருடைய தேவியின் திருமுடியில் அலர்ந்த மல்லிகை மாலையினின்று பெருகும் மகரந்த அருவிபோன்ற சொல்மாலைகளாலே விளங்குகின்ற ஆனந்தத்தால் நிறைந்த புத்திமான்களாலே சூழப்பெற்றவர்களாகவும், அனவரதம் அத்வைத வித்யையிலேயே பொழுது போக்கி இன்புறுவோர்களாகவும், இடைவிடாது அலங்கரித்துக் கொண்டிருக்கும் சமதமங்களாலே பெரியோர்களாய் விளங்குவோர்களாகவும், எல்லா புவன சக்ரங்களுக்கும் ப்ரதிஷ்டையளிப்பதான ஸ்ரீ சக்ர ப்ரதிஷ்டாபனத்தாலே ப்ரஸித்தமான புகழால் அலங்கரிக்கப் பெற்றவர்களாகவும், பாஷண்ட ஸமூஹங்களாகிய ஸகல கண்டங்களையும் எடுத்தெறிவதாலே செம்மையாக்கப் பெற்றவையான வேதவேதாந்த மார்க்கங்களாகிய ஷண்மதங்களையும் ப்ரதிஷ்டித்த ஆசார்யர்களாகவும் விளங்கும் ஸ்ரீமத் பரமஹம்ஸ பரிவ்ராஜகாசார்யர்களான ஸ்ரீஜகத்குரு ஸ்ரீமத் சங்கர பகவத் பாதாசார்யர்களின் அதிஷ்டானத்திலே, ஸிம்ஹாஸனத்தில் அபிஷிக்தர்களான ஸ்ரீமத் சந்த்ரசேகர ஸரஸ்வதீ ஸம்யமீந்த்ரர்களுடைய அந்தேவாஸிவர்யர்களான ஸ்ரீமத் ஜயேந்த்ர ஸரஸ்வதீ ஸம்யமீந்த்ரர்களுடைய அந்தேவாஸிவர்யர்களான ஸ்ரீமத் சங்கர விஜயேந்த்ர சரஸ்வதீ ஸ்ரீபாதர்களின்சரணகமலங்களுக்குவினயத்துடன்இருகரங்கள்கூப்பிநமஸ்கரிக்கின்றோம்.