காஞ்சி காமகோடி பீடாதிபதி
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள்
(ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின்
39அனுக்கிரஹ பாஷணங்கள்
அ டியேனின் முன்னோர்கள் செய்த புண்ணியத்தாலும் எனது முந்தைய பிறவிகளில் செய்த புண்ணியத்தாலும் காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சங்கர விஜயேந்திர ஸரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் (ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்கள்) அவர்களின் ஸன்னதியில் இருக்கும் பாக்கியம் கிட்டியுள்ளது. அவர்களுடன் ஸஞ்சாரத்திற்கு உடன் செல்லும் வாய்ப்பும் கிட்டியது. அவர்கள் அங்கு அங்கு அளிக்கும் அனுக்கிரஹ பாஷணங்களை அருகிலிருந்து கேட்கும் பாக்கியம் கிட்டியது. அதில் ஒரு ஈடுபாடு ஏற்பட்டு, அவ்வப்போது அளிக்கும் பாஷணங்களை எனது டைரிகளில் எழுதி வந்தேன். தனித்தனியாக இருக்கும் சொற்பொழிவுகளை ஒரு சேர ஒன்று சேர்த்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை எழுதியுள்ளேன். இவர்களின் சொற்பொழிவுகள் சில, பல மாத இதழ்களில் அவர்களின் அனுமதி பெற்று அளிக்கப்பட்டவை கட்டுரைகளாக வெளிவந்துள்ளன. இந்த தொகுப்பில் ஒரு பகுதி சொற்பொழிவுகள் தான் உள்ளது அடுத்தத் தொகுப்பும் தயாராகிக் கொண்டிருக்கிறது.
இதனை தொகுக்க அனுமதி அளித்த பெரியவர்களின் கருணை அபரிமிதமானது.அன்னவருக்கு ''தலையில்லாமல் வேறு கைம்மாறு இலேன்''என்பதைத் தவிர வேறு எங்கனம் நன்றி கூறமுடியும்.
வாழ்வில் கிடைக்க வேண்டும் என இறைவன் வகுத்துவிட்டயாவும் கிடைத்து அனுபவித்தாகிவிட்டது. வாழ்நாளிலேயே பொற்காலம் என ஒன்று இருக்கமாயில் அது பெரியவர்களின் பாதங்களின் அடியில் நின்று தொண்டு செய்வதுதான் மணிவாசகப் பெருந்தகை சொல்லுவார். ''வேண்டதக்கது அறிவோய் c வேண்டும் பொருள்யாவும் தருவாய் c... வேண்டும் பரிசு ஒன்று உண்டு. அதுவும் உந்தன் விருப்பன்றே''என்று. இந்த ''கைங்கர்ய லக்ஷ்மி''மேலும் தொடர்ந்து அடியேனின் கடைசி மூச்சு உள்ள வரையில் கிடைக்க வேண்டும் என்று அன்னவரையே பிரார்த்திக்கிறேன்.
இந்த தொகுப்பினை ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாலபெரியவர்களின் பொன்னான திருவடிகளுக்கு அர்ப்பணிக்கின்றேன்.
இராமாயணம்