கசகசா

Latin Name        – Papaver somniferum
Family                    –  Papaveraceae (अहिफेन-कुलम्)
English Name   – Opium poppy, White poppy
Sanskrit Name – अहिफेनम्, आफूकम्

போஸ்தக்காயின் உள்ளேயுள்ள விதை கசகசா எனப்படும். இது குடற்புண்ணை ஆற்றும், உடலிற்கு வலிவு தரும். இதனைப் பசுவின் பால் விட்டு அரைத்துப் பிழிந்து பனங்கற்கண்டு சேர்த்துச் சாப்பிடலாம். கஞ்சியாக்கிப் பருகலாம். தூக்கமின்மை. வயிற்றில் கிருமி, தினவு, சீதமும் ரத்தமும் கலந்த கடுப்பு, ஜலதோஷம் இவற்றில் கஞ்சியாக்கிச் சாப்பிடலாம். கசகசா, வால்மிளகு, பாதாம்பருப்பு, கற்கண்டு இவற்றைச் சம அளவு சேர்த்து இடித்துத் தேன் நெய் போதுமான அளவு சேர்த்துச் சாப்பிட்டுவந்தால் உடல் மழமழப்பும், வலிவும் பெறும். ஆண்மையை வளர்க்கும். பெண்கள் மாதவிடாய் காலத்திற்குமுன் ஒருவாரம் இதனைப் பாலில் அரைத்துக் கலக்கிச் சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் அடிவயிற்று வலி குறையும்.
மூன்று முதல் ஐந்து பாதாம்பருப்பு மற்றும் அரை ஸ்பூன் கசகசாவையும் பசுவின் பாலில் அரைத்துக் காய்ச்சிச் சாப்பிடப் பிரசவித்த பெண்களுக்குத் தாய்ப்பால் பெருகும். பொதுவாக உடல் வலிவடையவும், பருக்கவும், சூடு தணியவும் ஏற்ற பானம். பருவத்திற்கு வரும் சிறு பெண்களின் வளர்ச்சிக்கும் உடல் புஷ்டி வலிவு பெறவும் ஏற்ற காலை உணவு இது.
கசகசாவை முதல் நாளிரவு ஊரவைத்துக் காலையில் அரைத்துத் தேங்காய்ப்பால், மோர், தயிர் வடித்த கஞ்சி  காய்ச்சிய பால் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலக்கி உடலில் பூசிக் குளிப்பதால் அரிப்பு குறையும். பொலிவு, மழமழப்பு அதிகமாகும். இத்துடன் பாசிப்பருப்பையும் சேர்த்து உபயோகிக்கலாம்.
பாவப்ரகாசர் எனும் முனிவர் கசகசாவைப் பற்றிய வர்ணனையில் போஸ்தக்காயின் மேலோட்டுப் பகுதியை காயவைத்து நன்றாகப்பொடித்துத் தேன் குழைத்து சாப்பிட்டால் பேதியை நிற்குமென்றும், மார்பில் சளி சேர்ந்து ஏற்படும் இருமலை குணப்படுத்திவிடுமென்றும் குறிப்பிடுகிறார். மேலும் கசகசாவை ஒரு சிறிய அளவில் உணவுடன் சேர்த்து வருபவர்களுக்கு “வாக்விவர்த்தனம்” அதாவது சொல்வன்மை கூடுமென்றும் எடுத்துரைத்திருக்கிறார்.
நிகண்டுரத்னாகரம் எனும் ஆயுர்வேத அகராதியில் கசகசா குடலில் தேவையற்ற கிருமிகளை அழிக்கக் கூடியது, சோகை மற்றும் காசநோய்களுக்கு நல்லதொரு உணவாகவும் பயன்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. வெண்மை, கருமை, மஞ்சள் மற்றும் பலவர்ணமென நான்கு வகையான வண்ணங்களையுடைய கசகசாவைப் பற்றிய செய்திக் குறிப்பில் வெண்மை நிறமுடைய கசகசாவானது உண்ட உணவை நன்றாக செரிக்கச் செய்யுமென்றும், கருமை நிறமுடையதை அதிக அளவில் உட்கொண்டால் மரணமேற்படுமென்றும், மஞ்சள் நிறமுடைய கசகசாவானது கிழத்தன்மையைப் போக்குமென்றும், இவற்றின் கலவையை ஒருங்கே கொண்ட வகையானது மலத்தை நன்றாக இளக்கி வெளியேற்றுமென்றும் காணப்படுகிறது.
தொடர்ந்து அழுதுகொண்டே இருக்கும் குழந்தைகளுக்கு கசகசாவை நன்றாக அரைத்து, குழந்தையின் தொப்புளைச் சுற்றித் தடவினால் அழுகை குறைந்து குழந்தை நன்றாகத் தூங்கும். பத்து கிராம் கசகசாவுடன், ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள், ஒரு பிடி வேப்பிலை ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து அம்மைத் தழும்புகள் ஏற்பட்ட முகப்பகுதிகளில் பூசினால் தழும்புகள் மறையத் தொடங்கும். வயிற்றுப்போக்கு ஏற்படும் நிலையில் சிறிதளவு கசகசாவை எடுத்து வாயில் போட்டு நன்றாக மென்று கொஞ்சம் தண்ணீர் குடித்தால் வயிற்றுப்போக்கு குறையும்.
குளிர்ச்சி தரும் கசகசாவை உணவில் ருசி சேர்ப்பதற்காக அரைத்துச் சேர்ப்பது வழக்கத்தில் உள்ளது. ஆனால் இதனுடைய அளவு கூடுமேயானால் மயக்கத்தை ஏற்படுத்தும். கசகசாவிற்கு மயக்கத்தை ஏற்படுத்தும் தன்மை இருப்பதால் வளைகுடா நாடுகள், சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

उक्तं खसफलं क्षीरमाफूकमहिफेनकम्।
उच्यन्ते खसबीजानि ते खाखसतिला अपि॥ (धन्वन्तरिनिघण्टु)
खस्खसः सूक्ष्मबीजः स्यात् सुबीजः सूक्ष्मतण्डुलः। (राजनिघण्टु)
स्यात्खाखसफलोत्भूतं वल्कलं शीतलं लघु।
ग्राहि तिक्तं कषायं च वातकृत्कफकासहृत्॥
धातूनां शोषकं रूक्षं मदकृत् वाग्विवर्द्धनम्।
मुहुर्मोहकरं रुच्यं सेवनात्पुंस्त्वनाशनम्॥
आफूकं शोषणं ग्राहि श्ळेष्मघ्नं वातपित्तलम्।
तथा खसफलोद्भूतवल्कलप्रायमित्यपि॥
खसबीजानि बल्यानि वृष्याणि सुगरूणि च।
शमयन्ति कफं तानि जनयन्ति समीरणम्॥ (भावप्रकाशम्)
वृष्यो बल्यश्च खस्तिलः श्ळेष्मघ्नो वातजित् गुरुः।
वल्कलस्तत्समो ज्ञेयो रूक्षो ग्राहि विशोषणः॥
आफूकं शोधनं ग्राहि श्ळेष्मघ्नं वातपित्तळम्॥ (धन्वन्तरिनिघण्टु)
खस्खसो मधुरः पाके कान्तिवीर्यबलप्रदः। (राजनिघण्टु)
अहिफेनं शृङ्गवेररसैः भाव्यं त्रिसप्तधा।
शुद्ध्यत्युक्तेषु योगेषु योजयेत्तु विधानतः॥ (भावप्रकाशनिघण्टु)
खस्खक्संग्राहकं बल्यं गुरु वृष्यं कफप्रदम्।
पाके च मधुरं वीर्यकान्तिदं बलदं मतम्॥
वातपित्तं नाशयति फलं रूक्षं च ग्राहकम्।
रक्तशोषकरं प्रोक्तं मुनिभिस्तत्वदर्शिभिः॥
जारणो मारणश्चैव धारणः सारणस्तथा।
अहिफेनश्चतुर्थ्योक्तो गुणास्तस्य ब्रवीमि ते॥
वृष्यो बलकरो ग्राहि सप्तधातुविशोषकः।
वातपित्तकृदानन्दकारको नेत्रमादकः॥
वीर्यस्तंभकरस्तिक्तो मधुरश्च प्रकीर्त्तितः।
सन्निपातकृमिकफपाण्डुक्षयविनाशकः॥
मेहादीन् श्वासकासौ च प्ळीहां धातुक्षयं तथा।
नाशयेदिति च प्रोक्तो विशेषस्तस्य कथ्यते॥
श्वेतवर्णो जारणः स्यात् भुक्तमन्नं च जारयेत्।
मृतिप्रदः कृष्णवर्णो मारणस्तु प्रकीर्त्तितः।
जरानाशकरः पीतो धारणः संप्रकीर्तितः।
चित्रवर्णः सारणः स्यान्मलसारणकार्यतः॥ (निघण्टुरत्नाकरः)
अहिफेनं सुतिक्तन्तु निदाजनकमुत्तमम्।
ग्राहिचैव विशेषेण वेदनाविनिवारणम्॥
सन्निपातप्रशमनं तथा वमिनिफूदनम्।
पुरातनं नवं वाऽवि विनिहन्त्यतिसारकम्॥
निहन्त्यामाशयोदभूतक्षतमांसार्बुदव्यथाम्।
मद्यपानोत्तशोफस्य व्यथां चामाशयाश्रयाम्॥
अपानवायोर्भुक्त्वान्नबहिर्निःसरणात्मिकाम्।
क्रियां विवृद्धां चपलां ह्रासयत्यविकल्पतः॥
प्रथमायामववस्थायामतिसारैकलक्षणम्।
विनिहन्ति विशेषेण विषूचीमतिदारुणम्॥
सातिसारं सप्रलापं पर्याकुलमनिद्रया।
निपातयेत् सन्निपातमान्तिरकज्वरसंज्ञकम्॥
प्रवाहिकाप्रशमनं त्वान्त्रशूलविनाशम्।
मदात्ययहरं चैव तथोन्मादनिबर्हणम्॥
रजःशूलप्रशमनं अस्थिभग्नव्यथापहम्।
नवामपातशमनं हितमस्थिच्युतौ तथा॥
शुष्ककासप्रशमनं गर्भस्रावनिषूदनम्।
राजयक्ष्मसमुद्भूतनिशास्वेदनिवारणम्॥
हृद्धमन्योर्गतेः कामं मन्दीकरणकारणात्।
आन्त्रोत्थं पुफुसोत्थं वा रक्तस्रावं व्यपोहति॥
वाताधिक्यात् बृहद्वेगं कफनिर्गमवर्जितम्।
कण्ठकण्डूसमुत्थं वा कासं नाशयति द्रुतम्॥
नाडीनां धमनीनां च यस्मात्तु हृदयस्य च।
नैसर्गिकी प्रवृद्धो वा गतिं मन्दयति द्रुतम्।
तस्माद्धृदयरोगेषु रसतन्त्रविचक्षणः।
अहिफेनं प्रयुञ्जीत सावदानतया सदा॥
अहिफेनं विशेषेण खलु बाह्यप्रयोगतः।
पुफुसच्छदशोफघ्नं त्वान्त्रावरणशोफनुत्॥
विविधोत्थानसंभूतां विविधस्थानसंश्रयाम्।
तथा विविधसंस्थानां वेदनां विनिहन्त्यलम्॥
अभिष्यन्दप्रशमनं कर्णशूलनिबर्हणम्।
कृमिदन्तोत्थशूलघ्नं त्वामवातापहं तथा॥
गुदामयहरं चैव पायुस्थविदरापहम्।
व्रणपीडाप्रशमनं नाडीनामवसादनम्॥ (भावप्रकाशनिघण्टु)
गळवस्तिविधानेन त्रिफलाक्वाथसोधिते।
आमाशये निहन्त्याश्वहिफेनादना विषम्॥ (स्व.)

எஸ்.ஸுவாமிநாதன்,
டீன்,
ஸ்ரீஜயேந்திர ஸரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரி,
நசரத்பேட்டை – 600123
போன் - 9444441771

www.sjsach.org.in


மேலும்