ஸ்ரீ சங்கர மடம், மேற்கு மாம்பலம், சென்னை

சென்னையின் நடுவே அமைந்திருக்கும் மேற்கு மாம்பலம் மாநகரதின் பழம்பெரும் பகுதிகளில் ஒன்று. ஶ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் கிளை ஈஸ்வரன் கோயில் தெருவில் இருக்கிறது. ஸ்ரீ சங்கர மடம் பல ஆன்மீக மற்றும் தார்மிக காரியங்கள் செயல்படுத்தும் மையமாக இயங்கி வருகிறது.

சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீ ஜகத்குரு ஜெயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகள் மற்றும் பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராசார்ய ஸ்வாமிகளின் அனுக்ரஹதுடன் ஸ்ரீ மடத்தில் தேவி காமாஷி அம்மன் திருஉருவச்சிலை நிருவப்பட்டது. தேவி காமாஷி அம்பாளுக்கு தினசரி பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நவராத்ரி போன்ற முக்கிய நாட்களில் சிறப்பான பூஜைகள் நடைபெறும்.

ஸ்ரீமடத்தில் காமாஷி மண்டலி மாதாந்திர வித்வத் சதஸ்(தூய்மையான சம்ஸ்கிருத மொழியின் பல சாஸ்திரங்களை பற்றி பண்டிதர்கள் கலந்துரையாடுவது.) நடத்தி வருகின்றது. ஒவ்வொரு ஆண்டும் சங்கர ஜெயந்தி அன்று சிறப்பு வித்வத் சதஸ் நடைபெற்று வருகின்றது.(சதஸ் பற்றி மேலும் விவரங்கள் அரிய இங்கே க்லிக் செய்யவும்) ஸ்ரீமடத்தின் பின்புறம் பசுக்களை காக்க கோசாலை அமைந்திருக்கிறது. தெலுங்கு மஹாசபா ஸ்ரீமடத்தில் இயங்கி வருகிறது. ஜாதக பரிவர்தனையும் நடைபெறுகிறது. பல ஆர்வமுள்ள பக்தர்களின் பங்கேற்புடன் இசை கச்சேரிகள், பஜனைகள், ப்ரவசனங்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஸ்ரீமடத்தில் நடந்து வருகிறது.

West Mambalam Sankara Matam
Vidwat Sadas
West Mambalam Sankara Matam
Veda Parayanam
West Mambalam Sankara Matam
Go-shala entrance
West Mambalam Sankara Matam
Go-shala
West Mambalam Sankara Matam
Telugu Mahasabha inside the Matam
West Mambalam Sankara Matam
Jataka Parivartana

ஸ்ரீ சங்கர மடம் கிளைகள்