ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருக்கண்டியுர் (த்ரிமூர்த்தி க்ஷேத்திரம்)
தஞ்சையிலிருந்து திருவையாறு செல்லும் பஸ்ஸில் 6 மைல் தூரத்தில் உள்ளது. டவுன் பஸ் வசதி உள்ளது. தஞ்சையிலோ திருவையாரிலோ தங்கி ஸேவிக்கலாம்.
மூலவர் - ஹரசாபவிமோசனப் பெருமாள், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
உத்ஸவர் - கமலநாதன்.
தாயார் - கமலவல்லி.
தீர்த்தம் - கபால மோக்ஷபுஷ்கரிணி, பத்ம தீர்த்தம், கபால தீர்த்தம், குடமுருட்டிநதி.
விமானம் - கமலாக்ருதி விமானம்.
ப்ரதக்ஷம் - அகஸ்த்யர்.
விசேஷங்கள் - பரமசிவன் ப்ரஹ்மனின் ஒரு தலையைக் கிள்ளியதால் அவர் கபாலம் கையில் ஒட்டிக்கொள்ள அந்த சாபத்தை இந்தப் பெருமாள் விமோசனம் செய்துவைத்ததாக ஐதீஹம். (திருக்கரம்பனூரிலும் இதே ஐதீஹம்தான்) . ப்ரஹ்மா. விஷ்ணு, சிவன் மூவருக்கும் கோபுரங்களுடன் கூடிய தனிக்கோயில்கள், 1 பர்லாங் தூரததில் உள்ளன.
பெருமாள் கோவிலில் ஒரு ஸந்நிதியில் முன்புறம் சக்கரத்தாழ்வாரும் பின்புறம் நரஸிம்ஹனும் உள்ளனர். ஆனால் சுவற்றின் ஓரமாக ஸ்தாபித்திருப்பதால் பின்புறம் சென்று நரஸிம்ஹனை ஸேவிக்க முடியாது.
ப்ரஹ்மாவின் கோவில் மூடப்பட்டுள்ளது. ப்ரஹ்மா, ஸரஸ்வதி சிலைகள் சிவன் கோவிலில் ஒரு மூலையில் வைக்கப்பட்டுள்ளன.
சிவனுக்கு ப்ரஹ்மசிர - கண்டீச்வரர் என்று பெயர்.
பக்கத்தில் கல்யாணபுரம் என்கிற ஊரில் கல்யாண வெங்கடேச்வரர் கோவில் இருக்கிறது. இங்கு உத்ளவாதிகள் விசேஷமாக நடக்கின்றன.
மங்களா சாஸனம் -
திருமங்கையாழ்வார் - 2050 - 1 பாசுரம்.