ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திரு பார்த்தன்பள்ளி (திருநாங்கூர்)
சீர்காழியிலிருந்து 7 மைல் தூரத்தில் உள்ளது. இடையில் சிறிய காவேரி ஆற்றைக் கடந்து வரவேண்டும். திருவெண்காட்டிலிருந்து 2 மைல், கப்பிப் பாதை உண்டு. சிறிய ஊர். வசதிகள் ஒன்றும் இல்லை.
மூலவர் - தாமரையாள் கேள்வன், நின்ற திருக்கோலம், மேற்கே திருமுக மண்டலம்.
உத்ஸவர் - பார்த்தஸாரதி.
தாயார் - தாமரை நாயகி.
தீர்த்தம் - சங்க ஸரஸ் (கங்கா தீர்த்தம்)
விமானம் - நாராயண விமானம்.
ப்ரத்யக்ஷம் - பார்த்தன், வருணன், ஏகாதசருத்ரர்கள்.
விசேஷங்கள் - மூலவர், உற்சவர் இருவருக்குமே ஸ்ரீ தேவி பூதேவி, நீளாதேவி என்று மூன்று தேவிகள் உண்டு.
கோலவல்லி ராமன் என்று மற்றொரு அழகிய உத்ஸவர் உண்டு. சங்கு, சக்ர, கதையுடன் நிற்கும் இவருக்கு வில்லும் அம்பும் சார்த்தப்பட்டுள்ளன. இவரது மூலவர் சிறிது தூரத்தில் ஒரு தோப்பில் தனிக்கோயிலில் இருக்கிறாராம். இங்கே பார்த்தனுக்கு தனி ஸந்நிதி உள்ளது. அர்ச்சகர் கோவில் பக்கத்திலேயே குடி இருக்கிறார். தை மாதம் புஷ்ய நக்ஷத்திரத்தன்று தீர்த்தவாரி விசேஷம். சரம சுலோகார்த்தம் விளங்கிய இடம்.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1318-27 ---- 10 பாசுரங்கள்.