ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருவஹீந்த்ரபுரம் (அயிந்தை)
இந்த க்ஷேத்திரம் சென்னை திருச்சி, மெயின்லைனில் திருப்பாதிரிபுலியூர் ரயில்வேஸ்டேஷனிலிருந்து மேற்கில் 3 மைலில் உள்ளது. டவுன் பஸ் வசதிகள் உண்டு.
மூலவர் - தெய்வநாயகன், நின்ற திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.
உத்ஸவர் - மூவராகிய ஒருவன், தேவநாதன், திவிஷந்நாதன், விபுதநாதன், தாஸஸத்தியன், அடியவர்க்கு மெய்யன்.
தாயார் - ஹேமாம்புஜவல்லித் தாயார் (வைகுண்ட நாயகி) .
தீர்த்தம் - கருடநதி, சந்திரதீர்த்தம், சேஷ தீர்த்தம் (பூதீர்த்தம்) .
விமானம் - சந்த்ர விமானம், சுத்தஸத்வ விமானம்.
ப்ரத்யக்ஷம் - சந்த்ரன், கருடன்.
விசேஷங்கள் - கோவிலுக்கு அருகில் ஒ£ஷதகிரி என்று குன்றின் மேல் ஹயக்ரீவர் ஸந்நிதியிருக்கிறது. வடகலை வைஷ்ணவ ஆசார்யரான ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் இங்கே தவம் செய்து கருடன் அருளையும் ஹயக்ரீவன் அருளையும் பெற்றார். கோவிலுக்குள் இருக்கும் தேசிகன் ஸந்நிதி மிகவும் ப்ரஸித்தி பெற்றது. புரட்டாசி மாதத்தில் நடக்கும் மலை உத்ஸவமும் தீர்த்த வாரியும் விசேஷமானவை.
ஸ்ரீ ஸ்வாமி தேசிகன் தன்னைப் போல் தன்னுடைய திருக்கையாலேயே ஒரு உற்சவ விக்ரஹம் செய்து போட்டியில் ஐயித்த இடம். ஆதிசேஷன் நிர்மாணித்த ஸ்தலம் ஆதலால் திரு அஹிந்த்ரபுரம் (கருட நதி) ஆதிசேஷன் பாதாள கங்கை தீர்த்தத்தையும் (சேஷ தீர்த்தம்) கொண்டுவந்து பரமனுக்கு ஸமர்ப்பித்த ஸ்தலம். இந்த ஸ்தலத்தில் புற்றுக்கு பால் தெளிக்கும் (தை ஆடி மாதங்களில்) வழக்கம் இல்லை. கோவில் பிராகாரத்திற்குள் இருக்கும் சேஷ தீர்த்தத்தில்தான் (கிணர்) பால் தெளிக்கும் வழக்கம் இருந்துவருகிறது. சேஷதீர்த்தம் நிவேதனத்திற்கும், கருடதீர்த்தம் திருமஞ்சனத்திற்கும் இன்றும் உபயோகப்பட்டு வருகிறது. தேசிகன் 40 வருடகாலம் இவ்வூரில் வசித்த திருமாளிகையும், அவர் திருக்கையால் கட்டிய கிணறும் இன்றும் ஸேவிக்கலாம். தேசிகன் பல அற்புதங்கைள செய்து மிகவும் அபிமானித்த இவ்வூருக்கு மணவாள மாமுனிகளும் எழுந்தருளி மங்களாசாஸனம் செய்துள்ளார். அவருக்கு இப்போதும் மாடவீதியில் ஸந்நிதி உள்ளது.
மங்களாசாஸனம் -
திருமங்கையாழ்வார் - 1148-57 - 10 பாசுரங்கள்.