ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்
சோழநாட்டு திருப்பதிகள்
திருவெஃகா (காஞ்சிபுரம்)
இது காஞ்சீபுரத்திலுள்ள திவ்யதேசம் (மார்க்கம் 43, 44 காண்க) .
அஷ்டபுயகரத்திலிருந்து சுமார் 1 ஃபர்லாங் தூரத்திலுள்ளது.
மூலவர் - யதோக்தகாரி, சொன்னவண்ணம் செய்த பெருமாள், வேகாஸேது, புஜங்கசயனம், மேற்கே திருமுகமண்டலம்.
தாயார் - கோமளவல்லி நாச்சியார்.
தீர்த்தம் - பொய்கைப் புஷ்கரிணி.
விமானம் - வேதஸார விமானம்.
ப்ரத்யக்ஷம் - ப்ரஹ்மா, பொய்கையாழ்வர், பூதத்தாழ்வார், கணிகண்ணன்.
விசேஷங்கள் - கணிகண்ணன் என்ற சீடனுக்காக ஊரை விட்டே புறப்பட்ட திருமழிசையாழ்வார் பகவானை அழைக்க, பாம்பனைச் சுருட்டிக்கொண்டு புறப்பட்டு, பிறகு அவர் கிடக்கச் சொல்லி வேண்டியபோது, பாம்பணையை விரித்துப்படுத்ததால், இவருக்கு சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்று பெயர்.
மற்ற திவ்ய தேசங்களைப்போல் அல்லாமல் இங்கு பகவான் வலமிருந்து இடமாக சயனித்துள்ளார்.
பொய்கை புஷ்கரிணியில்தான் முதலாழ்வார்கள் மூவருள் ஒருவரான பொய்கையாழ்வார் ஒர் பொற்றாமரையில் அவதரித்தார். அசுரர்கள் பிறார்த்தனைக் கிணங்க ப்ருஹ்மா செய்யும் யாகத்தை அழிக்க கோபமாக வேகவதி ஆறாக ஒடிவர தேவர்களும் பிருஹ்மாவும் விஷ்ணுவை சரணமடைய, வேகவதியாற்றின்
வெள்ளத்தைத் தடுக்கப் பெருமாள் அணையென குறுக்கே சயனித்தாராம். எனவே
வேகவதியணை வேகிண - வெஃகிண- வெஃகா என்று மருவியுள்ளது. பெருமாளுக்கும், யதோத்காரி என்ற பெயர். பொய்கை ஆழ்வார் அவதாரஸ்தலம்.
இங்கு எழுந்தருளி இருக்கும் பிள்ளைலோகாசாரியார் பெரும் புகழ் பெற்றவர். இந்த ஸந்நிதியில் மணவாள மாமுனிகள் ஸ்ரீ பாஷ்ய காலக்ஷேபம் ஸாதித்தார்.
மங்களா சாஸனம் -
திருமழிசையாழ்வார் - 814, 815, 2417
திருமங்கையாழ்வார் - 1854, 2059, 2064, 2065, 2673 (70) , 2674 (127)
பொய்கையாழ்வார் - 2158
பேயாழ்வார் - 2307, 2343, 2345, 2357
நம்மாழ்வார் - 2503
மொத்தம் 15 பாசுரங்கள்.