திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்)

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

ஸ்ரீவைஷ்ணவ திவ்யதேச வைபவம்

மலைநாட்டுத் திருப்பதிகள்

திருவண்பரிசாரம் (திருப்பதிசாரம்)

திருவாட்டாற்றிலிருந்து தொடுவெட்டி (மார்க்கம் 87 காண்க) வந்து, பஸ்மாறி, நாகர்கோயில் திருநெல்வேலி பஸ் மார்க்கத்தில் நாகர்கோவில் வந்து, அங்கிருந்து 2 1/2 மைல் தூரம் வடக்கே சென்று இவ்வூரை அடையவேண்டும் வசதிகள் சுமார்.

மூலவர் - திருக்குறளப்பன், திருவாழ்மார்பன், வீற்றிருந்த திருக்கோலம், கிழக்கே திருமுக மண்டலம்.

தாயார் - கமலவல்லி நாச்சியார்.

தீர்த்தம் - லக்ஷ்மீ தீர்த்தம் என்ற அழகிய பெரிய புஷ்கரிணி.

விமானம் - இந்த்ர கல்யாண விமானம்.

ப்ரத்யக்ஷம் - விந்தை, காரி, உடையநங்கை, கருடன்.

விசேஷங்கள் - நம்மாழ்வாரின் தாயார் உடையநங்கை அவதரித்த ஸ்தலம். திருமாளிகை கோயிலுக்கு வாயுமூலையில் இருக்கிறது. நம்மாழ்வார் குழந்தையாகத் தவழ்வது போல் ஒரு அழகிய விக்ரஹம் இருக்கிறது.

பகவான் ஹிரண்யனை ஸம்ஹாரம் செய்துவிட்டு உக்ரரூபமாக இருந்தபோது, ல்மியும் பயந்து தவம் செய்ய வந்ததாகவும், ப்ரஹலாதன் பிரார்த்தனைக் கிணங்கி சாந்த வடிவத்துடன் ல்ª மியைத் தேடிவர, லக்ஷ்மீ ஆனந்தமடைந்து பகவானின் திருமார்பில் நித்யவாஸம் செய்ததாகவும், அதனால் பகவானுக்கு 'திருவாழ்மார்பன்' என்ற திருநாமம் ஏற்பட்டதாகவும், "ச்ரிய பதி" ஸஞ்சரித்தபடியால் "திருப்பதிசாரம்" என்ற பெயர் இந்த ஸ்தலத்துக்கு ஏற்பட்டதாகவும் ஐதீஹம்.

திருப்பதிசாரத்தில் உடையநங்கை என்ற பெண் விஷ்ணு பக்தையாகி குருகூரில் காரி என்ற விஷ்ணு பகத்ருக்கு பத்தினியாகி அவர்கள் இந்த ஸ்தலத்தில் 41 நாள் விரதமிருந்து ஆவணி சுக்ல ஏகாதசியான வாமநஜயந்தி தினம் ஊஞ்சலுத்ஸவம் நடத்தி, உடையநங்கை கர்ப்பவதியாகி கலி- 43 -வது நாள், வைகாச விசாகத்தன்று, நம்மாழ்வார் அவதரித்து, குருகூரில் ஆதிநாதன் ஸந்நிதியில்விட, அந்தக் குழந்தை தவழ்ந்து புளியமரப் பொந்தில் புகுந்து யோக முத்திரையுடன் பத்மாஸன யோகத்தில் அமர்ந்து மதுரகவி தமக்கு ஹிதோபதேசம் செய்யும்படி பிரார்த்திக்க, நம்மாழ்வார் திருவாய் மொழியை அருளிச் செய்ததாக ஸ்தல புராணம். ஹநுமார் பிரார்த்தனைக்கிணங்க அகஸ்தியர் ராமாயணம் அருளியதாக ஸ்தலவரலாறு. குலசேகர மஹாராஜன் மண்டப கோபுர பிரகாராதிகளை நிர்மாணம் செய்து வாகனங்களைச் செய்து ப்ருஹ்மோத்ஸவம் செய்து வைத்தாக வரலாறு.

மங்களாசாஸனம் -

நம்மாழ்வார் - 3475 - 1 பாசுரம்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is திருவட்டாறு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  திருக்குறுங்குடி (வாமன க்ஷேத்ரம்)
Next