ஸம்ஸ்காரம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

மேலே ஸம்ஸ்காரம் என்ற வார்த்தையைச் சொன்னேன். ஆனால் அதற்குச் சொன்ன அர்த்தம் தர்க்க சாஸ்திரப்படியானது. Impression on memory (ஒரு விஷயம் மூளைக்குள் பதிந்திருப்பது) என்பது இந்த இடத்தில் அர்த்தம் என்று சொன்னேன்.

பொதுவாக ஸம்ஸ்காரம் என்றால் இப்படி அர்த்தம் செய்ய மாட்டார்கள். ‘ஸம்-நன்றாக; காரம் ஆக்குவது:’ “ஒன்றை நன்றாக ஆக்குவதே ஸம்ஸ்காரம்” என்பதுதான் பொதுவான அர்த்தம்.

இம்மாதிரி ஒரு ஜீவனைப் பரமாத்மாவிடம் சேர்க்கிற அளவுக்கு நன்றாக சுத்தப்படுத்துகிற ஸம்ஸ்காரங்களையே தர்ம சாஸ்திரங்கள் நமக்கு விசேஷமாகச் சொல்கின்றன.

கல்ப ஸூத்ரங்களில் சொன்னதை அநுஸரித்து ஒரு ஜீவன் இந்த ஜீவ யாத்திரையில் (ஒரு ஜன்மாவில்) செய்ய வேண்டிய நாற்பது ஸம்ஸ்காரங்களை விரிவாக தர்ம சாஸ்திரங்களிலிருந்தே அறிகிறோம்.

நாற்பது ஸம்ஸ்காரங்கள் என்னென்ன என்று கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ச்ருதி-ஸ்மிருதி;ச்ரௌதம்-ஸ்மார்த்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  தேவலோகம் அல்லது ஆத்ம ஞானத்துக்கு வழி
Next