லக்ஷ்யம் மறக்கலாகாது : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

கலை என்பதற்காகவே பரவட்டும், பரப்பட்டும்;சந்தோஷம்தான். ஆனாலும் ஆதியிலிருந்து இந்தக் கலைகளுக்கு எது லக்ஷ்யமாயிருந்ததோ அது மறந்து போகுமாறு விட்டுவிடக் கூடாது. ஈஸ்வரனிடம் கொண்டு நிறுத்துவதற்காகத்தான் இவை ஏற்பட்டிருக்கின்றன என்ற நினைப்பு போகக்கூடாது. சரபோஜி போன்ற ராஜாக்கள் கேட்டுக் கொண்டால்கூட, ராஜஸதஸில் போய்ப் பாடுவதில்லை, ‘நிதி வேண்டாம்; ஈஸ்வர ஸந்நிதிதான் வேண்டும்’ என்று வைராக்யமாயிருந்த தியாகையர்வாள் போன்ற மஹான்களின் ‘ஐடியல்’ எப்போதும் நினைவில் இருக்க வேண்டும். சாந்த ஸெளக்யத்தைத் தானும் அடைந்து, மற்றவர்களும் அடைவிக்கப் பண்ணுவதாகவே காந்தர்வ வேதத்தை அதற்கான உயர்ந்த ஸ்தானத்திலே வைத்துக் காத்துக் கொடுக்க வேண்டும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தேச கௌரவத்தை உயர்த்தும் கலை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அர்த்த சாஸ்த்ரம்
Next