ஸநாதன தர்ம ஸாரம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

வைதிக தர்மத்துக்கு ஸாரமாக இருப்பது பஞ்ச மஹாயஜ்ஞங்கள் என்ற ஐந்து வேள்விகள். இவற்றில் ‘ப்ரம்மயஜ்ஞம்’ என்பது வேதம் ஓதுதல், ஓதுவித்தல். இதுவே நிஜமான வித்யா தானமாகிய பெரிய பரோபகாரம். ‘பித்ரு யஜ்ஞம்’ என்பது முன்னமே சொன்னாற்போல் மூதாதைகளுக்குச் செய்யும் தர்ப்பணம். ‘தேவ யஜ்ஞம்’ என்பது ஈஸ்வர ஆராதனம். இது தான் மற்ற எல்லா தான தர்மங்களுக்கும் பூர்த்தி ஸ்தானம். ‘பூத யஜ்ஞம்’ என்பது நாயும், காக்கையும் உள்பட எல்லா ஜீவராசிகளுக்கும் பலி போடுவது. ‘ந்ரு யஜ்ஞம்’ என்பது அதிதியை உபசாரம் பண்ணுவது. பஞ்ச மஹாயஜ்ஞங்களைப் பார்த்தால் நம் வேத மதத்தைப் போல் பரோபகாரத்தைக் கார்யத்தில் கட்டாயமாக விதித்திருக்கிற மதம் வேறு இல்லை என்றே தோன்றுகிறது. ஸ்ருஷ்டியில் ஒரு பிரிவைக்கூட விடாமல் உபகாரம் பண்ணி வைப்பது பஞ்ச மஹா யஜ்ஞம்.

இது தவிர ‘பூர்த்தம்’ என்ற பெயரில் ஸோஷல் ஸர்வீஸைப் பற்றி தர்ம சாஸ்திரங்களில் நிறையச் சொல்லியிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தமிழ்நாட்டு வள்ளல்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ''பூர்த்த தர்மம்'', பலர் கூடிப் பொதுப் பணி
Next