“தொந்தம்” : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

“பாத பங்கேருஹ த்வந்த்வம்:”- இணையடித் தாமரை. த்வந்த்வம் என்றால் இரட்டை. இரண்டு பேர் சேரும்போது உறவு ஏற்படுவதால் அதை ‘தொந்தம்’ என்று சொல்வது த்வந்த்வத்திலிருந்துதான். உறவை ஸொந்தம், பந்தம், தொந்தம் என்று மூன்று பேரில் சொல்கிறோம். ‘ஸ்வ’ என்றால் ‘தான்’. தன்னைச் சேர்ந்தது ஸ்வந்தம், அதாவது சொந்தம். பந்தம் என்றால் கட்டு. அன்பினாலே நம்மோடு கட்டுண்டிருப்பதால் உறவுக்காரர்களை பந்தம் என்கிறோம். ‘ஆள்கட்டு‘ என்றுகூடச் சொல்கிறோமல்லவா? இது நல்ல அர்த்தம். இன்னொரு அர்த்தமும் உண்டு. ஸம்ஸ்காரத்தைத் தானே ஜீவனுக்குப் பெரிய கட்டு என்கிறோம்? ஸம்ஸார பந்தம் என்கிறோம்? அந்த பந்தத்தில் கட்டிப்போடுவதில் முக்கியமாக இருப்பதாலும் உறவுக்காரர்களை பந்தம் என்கிறார்கள். ‘பந்த’ த்திலிருந்து வந்ததுதான் ‘பந்து’. இவர்களுக்குள்ளே ஒருத்தனை ஸம்ஸாரத்தில் ரொம்பவும் கட்டிப் போடுவது பெண்டாட்டிதான் என்று நினைத்துத்தான் அவளையே ஸம்ஸாரம் என்று சொல்லும் வழக்கம் வந்திருக்கிறது!’ இந்த அம்மாள் இன்னாருடைய ஸம்ஸாரம்’ என்கிறோம்! தொந்தம் என்றாலும் உறவுதான்.

இரண்டு பேர் உறவாகச் சேர்ந்திருப்பதை த்வந்த்வம் என்பது போலவே இரண்டு பேர் பகையாகிச் சண்டை போட்டுக்கொள்வதையும் ‘த்வந்த்வ யுத்தம்’ என்கிறோம்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is இதர தெய்வ உபாஸகரும் வழிபடுவது
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  பாத தாமரை
Next