குருவின் தன்மையால் சீடன் பெறும் பயன்

குருவின் தன்மையால் சீடன் பெறும் பயன்

குரு நமக்கு லட்சிய ஸித்தியைத் தருபவர், பாபத்தைப் போக்கிப் பரிசுத்தி செய்கிறவர் என்பதோடு ஸர்வ வியாபகர், ஸர்வமும் அடிபட்டுப் போன நிர்குண அவ்யக்தம் என்று ச்லோகம் டிஃபைன் செய்திருக்கிறது.

"ஸரி, நமக்கு ஸித்தி வேண்டும். (குரு என்பவர்) அதைத் தருகிறார் என்றது ஸரி. பாபம் போனாலொழிய ஸித்தி கிடைக்காதாகையால் அதைப் போக்குபவர் என்றதும் ஸரி. இந்த இரண்டும் நமக்கு ப்ரயோஜனமாவது. ஆனால் அவர் ஸர்வ வியாபகர், அதற்கும் மேலே அவ்யக்த வஸ்த என்பதால் நமக்கு என்ன ப்ரயோஜனம்?"

அவர் அப்படி இருக்கிறாரென்று சொன்னாலே அதுதான் நமக்கும் ப்ரயோஜனம்

'அதெப்படி?' எப்படியென்றால், புழுவை ஒரு குளவி கொட்டிக் கொட்டி தன் ரூபமாகவே பண்ணிவிடுகிற மாதிரி சிஷ்யர்களைத் தன்னுடைய நிலைக்கே உசத்திவிடத்தான் குரு இருக்கிறார். ஆனபடியால் அவர் இப்படி இப்படி இருக்கிறார் என்று அவரைப் பற்றி லட்சணம் சொன்னால், நாமும் அவர் மாதிரியே அந்த லட்சணங்களைப் பெறுகிற பெரிய ப்ரயோஜனத்தை அவர் அநுக்ரஹிக்கிறாரென்றே அர்த்தம். அவருடைய ஸ்வரூப லட்சணத்தைச் சொன்னாலே நமக்கும் அது ஸித்திக்கிறது என்று ஏற்பட்டு விடுவதால் நமக்கான பெரிய ப்ரயோஜனமும் அதில் வந்து விடுகிறது. 'ஸித்தி ப்ரதம்' என்றுதானே ச்லோகம் ஆரம்பித்தது? அந்த ஸித்தி இதுதான்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is 'விஷ்ணு', 'வாஸுதேவ' பத விளக்கம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  அத்வைதமும் அநுக்ரஹ பாவமும்
Next