தேவார ஸ்தலங்களைப் பற்றியும், திவ்ய ப்ரபந்த ஸ்தலங்களைப் பற்றியும் காவேரி ஸம்பந்தமாகச் சொன்னேன். இது தவிர, மூவர் பாடலோ, ஆழ்வார் பாடலோ இல்லாமல் காவேரி தீர ஊர்களில் எழும்பியிருக்கிற கோவில்களோ ஆயிரம் பதினாயிரம் என்று போகும். இம்மாதிரி, 'தெய்வத் தமிழ் நாடு' என்கிறபடி இதைக் கோவில் மயமாக்கி, பக்திக்கு த்ராவிடம்தான் தாய்நாடு என்று பாகவதாதி புராணங்களும் ஸ்தோத்ரிக்கும்படியான ப்ரேமை ஏற்பட்டிருக்கிறதென்றால், அதற்கு ஒரு முக்யமான காரணம் இந்த நாட்டுக்குக் காவேரியை அநுக்ரஹித்த விக்நேச்ரவரர்தான்.
தெயவத்தைத் தொட்டுக் கொண்டே மற்ற Fine arts (ஸங்கீதம், நாட்டியம், சித்ரம்) , Plastic arts (சில்பம்) , Literature (இலக்கியம்) எல்லாமும் அந்தப் பிராந்தியத்தில் விசேஷமாக உண்டாகி லோகத்திலேயே பெருமைப்படும்படியான நம்முடைய கலாசாரம் உருவாகியிருப்பது முடிவாக அவரால்தான்.
இப்படி ஒரு பெரிய உபகாரம் பண்ணியிருப்பவர் பிள்ளையார்.