உண்மையான 'ஸெக்யூலரிஸம்'

உண்மையான 'ஸெக்யூலரிஸம்'

சுதந்திர பாரத அரசாங்கமானது மத விஷயமாகப் பின்பற்ற வேண்டிய கொள்கை 'ஸெக்யூலரிஸம்' என்பதாக இருக்க வேண்டும் என்பதே தற்போது அரசியலாரின் கருத்தாக உள்ளது. இந்த 'ஸெக்யூலரிஸம்' என்பது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்ததாக இல்லாதிருப்பதே என்று அவர்களால் பொருள் கொள்ளப்பட்டிருக்கிறது.

இது சரியான கருத்தல்ல என எடுத்துக்காட்டி, 'ஸெக்யூலரிஸம்' என்பது உண்மையில் யாது என்று தெரிவிக்க வேண்டியுள்ளது. தற்போது எண்ணுவது போல் அது அரசாங்கம் எந்த மதத்தையும் சார்ந்து, அதாவது மதத் தொடர்பே அற்று இருப்பதல்ல. மாறாக அது, அரசாங்கமானது எந்த ஒரு மதத்தையும் மட்டும் சாராது, எல்லா மதங்களையும் ஆதரிப்பதாக இருப்பதே என்பதுதான் சரியான பொருள்.

ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே சார்ந்து பிற மதங்களை இழிவும் அழிவும் செய்யாது, எல்லா மதங்களையும் ஏற்ற இறக்கமின்றி சம பாவத்துடன் ஆதரித்து, அவை யாவும் பரஸ்பரப் பகையின்றித் தழைத்தோங்க உதவி செய்ய வேண்டும் என்ற உயர்ந்த கொள்கையே உண்மையான 'ஸெக்யூலரிஸம்' ஆகும்.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is அரசும் மதமும்,   தர்ம சக்கரம் பகவானின் அருட்சூசகம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  மக்களின் உள்ள உயர்வில் அரசின் பொறுப்பு
Next