மத விஷயத்தில் அரசின் பங்குக்குள்ள வரம்

மத விஷயத்தில் அரசின் பங்குக்குள்ள வரம்பு

பங்கு உண்டு எனும்போதே கூர்த்த ஜாக்கிரதையுடன் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு விஷயமும் கூற வேண்டும். என்னவெனில், நாட்டைச் சேர்ந்த பிரஜைகளின் உள்ளவுயர்வுக்கு உபாயமான மதாபிமானத்தை வளர்த்துக் கொடுப்பதில் அரசாங்கத்திற்கு ஒரு பங்கு மட்டுந்தான் உண்டு என்பதேயாகும். அதாவது மதத்துறையில் அரசாங்கமே முற்றிலும் பொறுப்பேற்பது ஒருபோதும் ஏற்கத் தக்கதல்ல. மத வளர்ச்சியில் தன் பங்கை ஓர் அரசாங்கம் மறக்கலாகாது என்பது எவ்வளவு முக்கியமோ, அதனினும் முக்கியம் அப்பங்கின் வரம்பைக் கடந்து அது செயலாற்றலாகாது என்பதாகும்.

இதன்படி மத விஷயங்களில் கோட்பாடுகளில், பழக்கவழங்களில் ஒர் அரசாங்கமே நேரடியாகப் பிரவேசித்து எதுவும் செய்தல் அறவே கூடாது.


Previous page in  தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is மக்களின் உள்ள உயர்வில் அரசின் பொறுப்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஏழாம் பகுதி  is  மதக் கொள்கைகளுக்கு முரணான சட்டங்கள் கூடாது
Next